பொன்னூஞ்சல் 2010 | பெண் குழந்தைகளுக்கு பொன்னூஞ்சல் விழா.
மார்கழித் திருவாதிரையை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கான பொன்னூஞ்சல் விழா, வேணாவுடையார் அரண்மனையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். கொங்கு வேளாளர் இனத்தில் ஒரு பிரிவான பெரிய குல கோத்திரத்தாரின் பெண் குழந்தைகளை, பொன்னூஞ்சல் ஆட்டும் சீர் நிகழ்ச்சி தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது.
சோழ மாமன்னர் இரண்டாவது கரிகாலர் தன் மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேரமன்னனை கருவூரில் அரியணை ஏற்றினார். கரிகாலனுக்கு படை உதவி செய்த பெரியகுல தலைவன் வேணாடருக்கு நன்றி தெரிவிக்க, தன் மகள் ஆடும் பொன் ஊஞ்சலை அளித்தார். அது முதல், மார்கழி திருவாதிரை நாளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொன்னூஞ்சல் விழா நடக்கிறது.
2006க்கு பின் நடப்பாண்டு நடந்த இவ்விழாவுக்காக, பெரியகுல கவுண்டர்கள் சங்கரண்டாம் பாளையத்தில் குவிந்தனர். குல வழக்கப்படி, புங்கமரம், புளியமரத்தில் ஊஞ்சல் கட்டி, அரண்மனை முழுவதும் தோரணங்கள் தொங்க விட்டனர். சீர் செய்ய வேண்டிய பெண் குழந்தைகள், விரதம் இருந்து, அமராவதி ஆற்றில் நீராடி, மணப்பெண் போல் அலங்கரித்தனர். அங்குள்ள கோவில்களை வணங்கினர்.
மேள தாளம் முழங்க, தாய்மாமன் பட்டம் கட்டி, குழந்தையை தோளில் அரமணைக்கு தூக்கிவந்தனர். பட்டக்காரர், குலகுரு ஆசி வழங்க, ஊஞ்சலில் அமர வைத்து புலவர்கள் பாட்டு பாடி ஊஞ்சலை ஆட்டினர்.
விழாவில் 150க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு பொன்னுஞ்சல் சீர் நடந்தது. விழாவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். விழா புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு மணி 10 வரை நடந்தது. எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டுதான், 150 பெண் குழந்தைகள் பொன்னுஞ்சல் ஆடியது குறிப்பிடத்தக்கது. | |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |  |
|