Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » குருபரன் ஆற்றுப்படை »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
>>குருபரன் ஆற்றுப்படை கலிவெண்பா - விநாயகர் வணக்கம்
குருபரன் ஆற்றுப்படை முன்னுரை

ஆற்றுப்படை என்பது ஒரு வள்ளலிடம் பரிசுபெற்ற ஒருவன் அதை அடையவிரும்பும் பரிசிலன் ஒருவனுக்கு வழிகாட்டுவதாக அமைந்த ஒரு பிரபந்தம் ஆகும். இது பண்டைய நாளில் திருமுரு காற்றுப்படை, புலவராற்றுப்படை முதலியன இதற்கு எடுத்துக்காட்டாகும். இங்கு குறித்த குருபரன் ஆற்றுப்படை என்பது முருகப்பெருமானாகிய குருபரன் தம்மிடம் பரிசில் வேண்டிய ஒரு புலவனுக்கு பூமியில் வாழும் தனது பக்தராகிய ஒருவரின் பெருமை கூறி அவரிடம் சென்று நீ வேண்டிய பரிசிலைப்பெற்று பயன்பெறுக என்று ஆற்றுப்படுத்குவதாக அமைந்துள்ளது. இந்த நூல் அமிர்தகவி வில்லியப்ப கவிராயர் பாடிய திருமுகவிலாசம் போன்ற அமைப்பை உடையது. இதனைப் பாடிய ஆசிரியர் கொற்றை என்ற ஆதீனத்தைச் சார்ந்த புலவர்கள் வரிசையில் வந்தவர். இவர் பெயர் ஆதீன வித்துவான் கே. பழனிச்சாமிப் புலவர். இந்தப் பிரபந்தகர்த்தாவாகிய ஸ்ரீமான் பெரியண்ண வேணுடரால் கல்விபயின்று, வித்துவான் பட்டம் பெற்று திருப்பூர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணி புரிந்தவர். நூலாசிரியராகவும், நூற்பதிப்பாசிரியராகவும் சிறந்த கவிஞராகவும் விளங்கியவர். கொங்குநாட்டுப் பெரும் புலவர். கொற்றை ஆதீன அதிபராக இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீமான், சைவத் தவத்திரு. பெரியண்ண வேணுடர் மீது பாடிய ஒரு பிரபந்தம் இது.

இந்த நூலில் இப்புலவர் தமது குலத்தில் வாழ்ந்த ஒருவருக்கு கோவில்கட்டிப் போற்றவேண்டியன உதவும்படி குருபரனாகிய முருகப்பெருமானிடம் வேண்ட அப்பெருமான் இந்தக் கொற்றை ஆதீனத் தலைவராகிய பெரியண்ண வேணுடரிடம் அறிமுகப்படுத்தி ஆற்றுப்படுத்துவதாக இப்பிரபந்தம் அமைந்துள்ளது. இப்பிரபந்தத்தில் இந்த வேணுட மன்னரது தசாங்கத்தில் அவருடைய எல்லாப் பெருமைகளும் நாம் அறிந்து கொள்ளும்படி அறிமுகப் படுத்துகிறார் இப்புலவர்.



Copyright © 2010 - 2017 konguvenadar.org