Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » குருபரன் ஆற்றுப்படை »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
குருபரன் ஆற்றுப்படை கலிவெண்பா - விநாயகர் வணக்கம்<< >>பாவலனது வேண்டுகோள்
குருபரன் புகழ்

சீர்பூத்த பொன்பாதச் செய்யவருள் தானுடைய
நீர்பூத்த சாமிமலை நின்மலனே பார்பூத்த
எண்ணன் சுறம்வளர்க்கும் எம்மன்னை தன்குமர
அண்ணந்த பொன்னர் அணிமலையா விண்ணார்ந்த
வெள்ளிமலை தானுடைய மேலாம் பரமனுக்கும்
பிள்ளையெனும் ஆறுமுகப் பெம்மானே – துள்ளுமலைப்
பாற்கடலைச் சொந்தமதாப் பள்ளிகொள்ளு மெங்கள்திரு
மாற்கடவுள் பேணுதிரு மாருமகா நாற்கடல்சூழ்
கன்னிவள நாடனெரு கன்னியருள் பாலகுகா
தென்னவன வாண்ட சிவக்குமரா! தன்னிகரில்
கொஞ்சுமொழிப் பூவைநிகர் கோதில் திருமகளார்
கொஞ்சுமொழிப் பூவையரைக் கொண்டவனே – விஞ்சுபுகழ்
நூறுமக வோன்பகையை நூறியவன் மீதினவ
தூறதனைப் போக்கும் சுரபதியே வீறுபெறு
செந்தமி்ழைக் கற்றபுகழ் சேருமொடு கீரனைமுன்
அந்தமிலா மற்காத்த ஆண்டகையே! தந்தந்த
மென்றடு மாமயிலி லேறி யொருநொடியில்
சென்றே புவிவலங்கொள் சேவகனே – துன்றுசுவைப்
பூவிற் பொலிகுழலாள் போதவள்ளி மானவளைச்
சேவித்து வந்திறைஞ்சும் செம்மையனே மேவும்
தருமிக்குப் பொற்கிழியைத் தானளித்த கோமான்
பெருமைக்கண் அவ்வுருவாம் பேரார் திருவா

அனுபூதி பாடிவரும் ஆர்வலனுக் கன்றே
அனுபூதி தந்த அருளா மனநினைந்து
பாடு புகழருணைப் பாவாணன் றன்னையருள்
தேடு புகழ்பாடச் செய்தவனே! நீடுதமிழ்த்
தென்பொதிகை மாமுனிக்குச் செய்ய விலக்கணஞ்சொல்
நன்புலவ னுனகுரு நாயகனே! அன்புருவில்
பொங்குபக்தி பூண்ட வெழில் பூவசிய நற்குலத்து
நங்கையவள் செங்கைபெற வைத்தவனே! தங்கமெனப்
போற்றுமகா மேருவெனும் பொற்பரசன் பேரநலம்
ஏற்றுமயில் சேவலுள ஏந்தலே! ஆற்றல்மிகும்
பார்த்திபனே நற்சிவயச் செம்மலுடன் பல்கதைகள்
நேர்த்தியுறப்! பேசியசீர் நேயகுணு – ஆர்த்தெவரும்
அஞ்சப் ரபுடதேவன் ஆர்த்திடவே ஆருமெழில்
விஞ்சு திருப்புகழ்க்கு மேவினவா! நஞ்சையுண்டும்
சாவாது தேவர்களைத் தாட்சண்யத் தாற்காத்த
தேவாதி தேவன் திருக்குமரா! மூவாது
என்றும் இளமையுடன் எல்லோர்க்கும் வாழ்வுதர
நின்ற பரஞான நீதியனே! வன்றிறல்சேர்
வேலேந்திப் பாவலர்பா வீறுபெறு மாலையெலாம்
மேலேந்தி நின்றகுண மேலோனே! தாலமதி
பொன்னே நவமணியே போதசிவ ஞானசுக
மன்னே யொளிமிகுந்த மாதவனே! தன்னேரில்
வெற்றி பலவுடையாய் மேலாம் பரமனுக்கும்
சொற்றஉப தேசநலச் சுந்தரனே! நற்றமிழைப்
பாடி வரும்புலவர் பாடறிந்து வேண்டுவன
கூடி மிகவருள்செய் கொற்றவனே தேடியவென்
அய்யனே ஞானகுரு நாதவெனை யாட்கொண்ட
மெய்யனே என்னுடைய விண்ணப்பம்! செய்யபுகழ்
Copyright © 2010 - 2017 konguvenadar.org