Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » குருபரன் ஆற்றுப்படை »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பாவலனது வேண்டுகோள்<< >>குருபரன் தன்னியல்பு கூறல்
குருபரர் தமதுதந்தையின் இயல்பும் தாயார் இயல்புங்கூறல்

அன்பனே செந்தமிழை ஆய்ந்து நயமுணர்ந்து
இன்பமுடன் கற்றகுண இஷ்டனே என்பதும
பாதம் பணிந்துநல பாடல்பல ஆயிரமாப்
போதம் பெருக அணி பொன்மனனே – நீதமிகு
பத்திரசம் பூண்டவுனைப் பார்க்கமிகு வானந்தம்
மிக்க வெனைமதித்தாய் மெச்சுகின்றோம் – முத்தியருள்
என்னைப் புகழ்ந்துவரும் என்னன்ப சொல்லுகிறேன்
நன்னயமாய்ச் சற்றே நயந்துகேள் – தன்னிகரில்
எண்ணுன் கறம்வளர்த்த என்தாய் – குமரியெனப்
பண்ணுர் தமிழ்பாடிப் பாட்டிசைத்தாய் – தண்ணுரும்
என்தாய் வளர்த்த இயல்தருமம் நெல்நாழி
என்பதறியா தியம்பினையால் – அன்பார்ந்த
எந்தை யுரையும் இடம்வெள்ளி என்றனை நீ
புந்தியுறப் பார்க்கிலது பொய்யாகும் – சந்தையினில்
செல்லாப் பணத்தளவும் செப்பிலதில் வெள்ளியில்லை
எல்லாம் வெளிமயக்கே என்பதுவாம் சொல்லாரென்
அப்பன் சரிதம் அதையுரைப்பன் கேட்டிடுக
இப்புவியில் நீயும் இனிமையுடன் – செப்பரிய
தந்தைதாய் தானறியான் தாயுமிலி தந்தையிலி
முந்தை முறையறியான் முந்நாளும் – சொந்தமுள
வீடறியான் நாடறியான் மேவியம்ப லத்துவிளை
யாடறிவான் மற்றவனை யார்அறிவார் – நாடறிய
மாமதுரை தன்னிலே வாழ்சனங்கள் கண்டிடவே
சேம விறகுவிற்றுச் சீவித்தான் – நாமமுள
வந்திக்காய் மண்சுமந்து வாங்கியுதிர் பிட்டையெலாம்
தொந்திக்கே போட்டமுக்குந் தோதுற்றான் – பண்டிதரே
பத்தாமல் ஓடெடுத்தும் பாருலகம் சுற்றிமன்றில்
நித்தமங்கு ஆடெடுத்தும் நேர்ப்பட்டான் – சித்தமதில்
மிக்க மகிழ்ச்சிகொண்டு வேடனன்று தந்தகறி
பக்கெலும்பு எல்லாமும் பார்த்திட்டான் தொக்கநல
தொண்டர் புகழுசிறுத் தொண்டரவர் வீட்டினிலே
உண்டகதை யெல்லாம் உலகறியும் – அண்டர்புகழ்
மாமுனிவர் பத்தினிமார் மாமயக்கங் கொண்டிடவே
காமியெனப் பிச்சைகொண்டு காலலுத்தான் நேமமதை
உன்னாமல் பன்றியுமாய் உற்றபன்றிக் குட்டிகட்கு
துன்னுநல்ல பாலளித்தும் தோன்றுமவன் – முன்னுன
சாக்கியனுர் கல்லடியும் தாபதஞ்சேர் அர்ச்சுனனுர்
ஓச்சிவரு வில்லடியும் உற்றனே ஆக்கிவரு
மண்ணணைகள் கட்டாத மாபிட்டுச் சோம்பனெனத்
தண்வளர்த்த பாண்டியனுர் தன்னடியும் மண்ணதனில்
பெற்றதெலாம் கண்டென்னைப் பெற்றதாய் உள்ளமதில்
உற்றதொரு ஏக்கமதால் உள்ளுடைந்து – நற்றவத்துக்
காஞ்சிக்கே யேகி கருநிறங்கொண் டந்நாளில்
தேஞ்சு சிவன்பாக முற்றளே! வாஞ்சையினுல்
இன்னசெயல் கண்டிரங்கி யெம்மாமன் பன்னுளும்
துன்னுபயந் தானடைந்தே தூங்கினுன் - அன்னமிறங்
காமலே பிர்மனவன் ஆகாயத் தேயுறைந்தான்
பூமன்லோ கத்தே புகுந்தொளிந்தான் – தேம்பலுடன்
அன்றேயான் கண்டி அருங்கதிர்கா மம்மறைந்து
சென்றேவா ராமல் திரிதலுற்றேன் நன்றுடையாய்
Copyright © 2010 - 2017 konguvenadar.org