Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » குருபரன் ஆற்றுப்படை »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
குருபரர் தமதுதந்தையின் இயல்பும் தாயார் இயல்புங்கூறல்<< >>வேணுடன் பாரம்பரியம்(வம்மிசவளம்)
குருபரன் தன்னியல்பு கூறல்

பாண்டிமன்னன் என்றுஎனைப் பாடினைநீ பாருலகர்
ஆண்டியான் என்பார் அறியாயா? வேண்டிலினும்
அப்பன் இரந்துண்ணி ஆத்தாளே நீலியெனச்
செப்புகின்ற பாடல் தெரியாயா இப்பவும் நீ
மாற்கடவுள் மாமருகா மாமுருகா வென்றுசொன்ன
தேற்குமோ சொல்லாய் இதுவியைந்தால் கோற் கையுடன்
நம்பிபெண்ணை நாடியே நன்மலைமே லேறுவனே
அம்புவியில் வேடம் அணிவேனே கொம்புதுடி
கேட்டுமரம் ஆவேனே கீழ்க்குலமா னுக்காக
வேட்டுவனா னகி விளிப்பேனோ – பாட்டினில்நீ
சொன்னதெலாம் நல்லவுப சாரமலால் சுத்தமுறு
வன்மையதாய்க் கேட்க வகையாமோ இன்னமும்கேள்
காளையொன்றை மேய்த்தேன் கரடேறி நின்றலுத்தேன்
பூளைபடுங் கானமெலாம் போயினேன் – வேளையிதில்
பெண்டாட்டி ரண்டுடையார் பேச்சுலகில் ஏச்சலவா
திண்டாட்ட மாடியதைச் செப்பவா – தண்டோடு
மொட்டைத் தலையாகி மோதுலகில் ருத்ராக்ஷக்
கொட்டைகட்டிச் சாமியெனக் கோலமிட்டேன் மட்டுலகில்
இல்லாரை யெல்லாரும் எள்ளுவரால் எஞ்ஞான்றும்
செல்வரையே செய்வர் சிறப்பெனவே – நல்லுலகில்
வள்ளுவனுர் பாடியசீர் வாய்மொழியைக் கேளாயோ
எள்ளியெனை யேசும் இதங்கேளாய் – துள்ளிவரு
கோழி பிடிக்கியென்றுங் கொக்கடித்துத் தின்னியென்றும்
தாழி வயிறனொரு தம்பியென்றும் - பூமியினில்
சின்னஞ் சிறுவனென்றும் சேயனென்றும் செல்வன்என்றும்
வன்னக் குறத்திமாப் பிள்ளையென்றும் – பன்னரிய
சத்திப் பரச்சிதரு தண்டுமுண்டுக் காரனென்றும்
மெத்தப் படித்தவிறல் மீளியென்றும் – தத்துவங்கள்
காணா விரகன் கபடறியாக் காமியென்றும்
வீணாக வேதான் விருதாவில் – நாணாமல்
ஊரையெலாம் சுற்றியென்றும் ஓங்குமலை யாளியென்றும்
பாரில் நடிக்குமொரு பாணனென்றும் – சீரையெல்லாம்
பேசும் புலவரிடம் பேர்ந்துரையும் ஊமையென்றும்
வீசுமயி லேறிவரு வேலனென்றும் பேசிநிற்ப
தையாநீ கேட்டிலையோ அன்றொருநாள் எங்கள்குலம்
மெய்யாகப் பேசும் விறல்மிகுந்த – துய்யநெறிச்
சுந்தரனும் பித்தனென்றான் சொன்னபுகழ்ப் பொய்யறியான்
எந்தைதனைக் கோழியென்றான் என்னையுமே – பந்தமிலாக்
குஞ்சென்று சொன்னான்ஓர் கோட்டானென் றெம்முனையும்
மிஞ்சிப் பெரும்போடு போட்டானே – விஞ்சுகவிக்
காளமே கம்மெனுமோர் காட்டுப் புலவனவன்
மேளதா ளத்தென் விருதடித்தான் நீளுலகில்
மாம்பழத்திற் காயுலகை வட்டமிட்டு வந்தவெனக்
காம்பழிக்கு நாணிநா னன்றுமுதல் பூம்பழநி
மாமலையை நாடிவந்து மாதவஞ்செய் போகருறை
மேமலைமேல் இத்துறவில் மேவிநின்றேன் – ஆமளவும்
என்னைப் புகழ்ந்துவரும் என்னன்ப யானுனக்கு
என்னகொடுத் தாதரிப்பன் இந்நேரம் நன்மைபெற
பாருலகில் ஒன்றுனக்குப் பாலிப்பம் கேட்டிடுக
பேருவகை சேரும் பிரபலமாம் – நேருமுன
தாதரமும் கைகூடும் ஆக விளம்புகின்றோம்
நீதமுடன் இன்றே நினைந்துகேள் – மாதவஞ்சேர்
Copyright © 2010 - 2017 konguvenadar.org