மன்னு தமி்ழறியும் வண்ணக் களஞ்சியமாய்
மின்னு சிவிகைமுதல் மேலான – சொர்னமய
நல்ல விருதுடனே நற்சிவிகை கொண்டகன
செல்லக் குமாருவெனச் செப்பியசீர் – பல்புலமை
நாதன்ஒரு தெய்வீகன் நம்முதல்வ னுனகுகை
நாத னவன்பெயரில் நாட்டிலொரு – போதமமை
தெய்வீகக் கோவிலது செம்மையுற வேயமைத்துச்
செய்துதொழ வெண்ணியுங்கள் சீர்பாதம் – ஐயனே
வந்து சரணடைந்தேன் வம்மிசத்தே கொண்டபுகழ்
தந்தேதான் என்னைச் சகமதனில் – பைந்தமிழ்ச்சீர்
தன்னிலமைத் தென்றுமே தாரணியில் மிக்குயரப்
பொன்கிழிகள் தந்தென்னைப் போற்றிடுவீர் கன்னல்மத
வேளும் விரும்பழக வேளே சிலைகொள்குரு
தாளும் சிலம்பும் சதங்கைகொண்டீர் – நாளுமுமை
வேண்டுவார் வேண்டுவன ஈயுங் குருபரனே
ஈண்டே அருள்செய் தெமைப்புரப்பீர் – ஆண்டவனே
என்றே தொழுது இயம்புமந்த வேளையினில்
துன்றும் அறுமுகவர் சொன்னதிது – நன்றுடைய
|