Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » குருபரன் ஆற்றுப்படை »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
குருபரன் தன்னியல்பு கூறல்<< >>வேணுடன் தசாங்கம்
வேணுடன் பாரம்பரியம்(வம்மிசவளம்)

நீதி மகிமையெல்லாம் நித்தம் விளங்குதவப்
பூமி குளிரப் புகல்மழைபெய் – தாதிவரும்
மாமலர்கள் பூத்து மகரந்த வாசமிகும்
சேமமிகுங் கொங்குவெனும் தேசமதில் – நேமமுடன்
சாற்று கரிகால் வளவனவன் தாய்மாமன்
போற்று சிவாயம் புரந்த இரும்பிடர்க்கோன்
நன்றிக் கறிகுறியாய் நாடாள் உரிமையுடன்
வென்றிமிகு வேணுட்டு வேந்தனென – துன்று
கரிகால் வளவன் கருவூரில் க்ரீடம்
சரியாகச் சூட்டித் தலையளி செய்தரிமான்
ஆசனமும் ஈய்ந்து அணிபொற்றேர் ஊர்தகுதி
நேசமுடன் தந்ததுடன் நீள்கொங்கில் – தேசத்தே
என்றுந் தலையா யிருக்கும் அதிகாரம்
துன்றும் படியே சுரந்தளித்தான் – அன்றுமுதல்
கொங்குநா டாள உரிமைகொண்ட வேணுடன்
இங்குவந்த செய்தி இதுவாமே தெங்குயரும்
காகம்விளக் கேற்றி கருவூர் குறிச்சிகொற்றை
பாகம் செறிமுருங்கை பாலதொழு – யோகம்
செறிதரவே வாழ்ந்தரசு செய்துமே பாராள்
நெறிமுறையில் நின்றர் நிலையாய் – அறிவார்ந்த
இந்த மரபில் இறைவ ரெனவந்தோர்
பைந்தார் மகிபர் பலபேரால் – மைந்தார்ந்த
காவிரிப்பூம் பட்டினத்துக் கற்கோட்டை தூள்படுத்தி
நாவிரிந்த சோழன் நலம்பேணி – பூமிமிசை
செட்டியரைக் காத்த திறலோன் ஒருவன் உண்டால்
செட்டிவே ணுடனென்று செப்புவரால் அட்டியின்றி
திக்கு வலையம் திதழகத் திகிரிகொண்டு
முக்குலத்து மன்னர் முகமலரப் – பக்கமெலாம்
மெய்க்கோட்டு யானைகளாம் வெற்றிமன்ன ரானபல
கொக்கோட்டி யாண்டதொரு கோமானும் – இக்கினிமை
போலச் சுவைசாரும் பொன்விழா வின்தலைமை
சாலப் புரக்கத் தலைமைகொளும் – வேலையிதில்
தன்னை யழைக்கவந்த தங்களது தோட்டியையே
தன்னுடனே வைத்துண்ட தன்மையனும் – ஒன்னலர்கள்
கண்டன்எனச் சாற்றுங் கனவீரம் தாமிகுத்த
மிண்டன்பூ தப்பாண்டி வேந்தனையே – பண்டொருநாள்
அம்மன்னர் தம்பதியில் யாரும் அதிசயிக்க
மும்முறைதான் வென்ற முதல்வோனும் தெம்முறையோர்
யாரும் அதிசயிக்க அந்தண்மை பூண்டுலகில்
பேரும் புகழும் பிரபலமா – மீறுகுணத்
தித்தரையோர் தாமும் இதமுரைக்க வாழ்ந்தசுப
ரத்தினமூர்த் திப்பெயர்கொள் நல்லோனும் சத்தியுள
நல்லதமிழ் மாலைசொலி நாட்டில்வந்த தன்பகையை
வெல்லுமந்த வீர விறலோனும் – வல்லநல
கொங்குமகா மண்டிலத்துக் கூரழகு காணுதலாம்
பொங்குநலத் தாசை புகுந்தழைக்கச் – சங்கமெனும்
சேனையுடன் மூவரசர் தென்கரையில் வந்தமயம்
யானைகொண்ட வேணுட ராசர்வழி – மேன்மையுடன்
வந்த தொருமகிபன் மற்றவரை நன்மகிழ்வில்
பந்துவெனும் பாசப் பரவசத்தில் முந்தும்
உவகைவர வேதான் உவந்தழைத்த அன்று
தவமிகுந்த மூவரசர் தாமும் – நவம்பரவும்
எங்கள் வரவின் எழில்திட்டி போக்கவொரு
பொங்குகடா வெட்டலையே போர்வேந்ததே – இங்குனது
வண்மை யுபசாரம் மாறுபட்ட தேனேன்னத்
திண்மையுள வேணுடச் செம்மலுந்தான் – பண்புமிகும்
திட்டிக் கடாயாகச் செல்வமகன் தன்னையங்கு
வெட்டிரத்தப் பொட்டிடவிம் மேன்மைபெற்ற – கட்டழகன்
இந்த மகிபன் இரும்பண்பைப் பாராட்டி
முந்திவந்த அம்மன்னர் மூவருமே – தந்தமனத்
தன்புக் கறிகுறியா ஆர்வமுடன் தந்தலைமை
மன்னிப் புரக்கவென மாமகிழ்வில் – பொன்மகுடம்
மின்ன வவன்தலையில் மேன்மையுடன் சூட்டியே
மன்னவனே யின்றுமுதல் வல்லமைசார் உன்குடியில்
தோன்றும்பூ பாலரெல்லாம் தோற்றமுடன் மும்முடிகொண்
டான்ற புவிபுரந்து ஆர்கவென ஊன்றியசீர்
மும்முடிவே ணுடனென மொய்ம்புளசீர்ப் பட்டமொன்று
செம்மையுடன் நல்கியவண் சீர்தந்தார் – இம்மையினில்
இப்பட்டம் பெற்றவனும் இந்தக் குடியில்வரும்
ஒப்பில்தவ மன்னவன்காண் ஒண்புலவ? தப்பில்லாத்
தூதுகா தற்ப்ரபந்தச் சொற்பயனை யேற்றுநிதம்
மேதகுசீர் மேன்மைசெய் மேலோனும் – ஆதரவாய்
அப்பரமே யர்சதகம் ஆனதொரு நூல்கேட்டு
செப்புவண்டி மாடுதந்த செய்யோனும் – இப்படியே
எத்தனையோ மேன்மைநலம் ஏய்ந்த முடிமன்னர்
மெய்த்தகுலம் வந்ததொரு மேன்மகன்காண் – சித்தசன்போல்
ஆண வுடையவர்கள் ஆசைகொளும் நல்லழகன்
வேணுடன் என்றுஒரு வேந்தனுளன் - பூணரும்
அந்தமன்ன னுக்குரிய வாகும் உயர்வெல்லாம்
இந்தப் புவியில் இயம்புவோம் – சந்ததமும்
Copyright © 2010 - 2017 konguvenadar.org