Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » குருபரன் ஆற்றுப்படை »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வேணுடன் பாரம்பரியம்(வம்மிசவளம்)<<
வேணுடன் தசாங்கம்

மலை
விண்தோய் நலமேகம் வீற்றிருக்க அம்மலைதான்
எண்சேர்ந்த கண்ணன் எழில்நிறமாம் – கண்ணுன
ஆதவனுர் காலை அருங்கதிரும் மேற்றிசையில்
போதும்போ துற்றதாம் பொன்கதிரும் – மோதுமந்த
மாமலைமேல் உற்றலம் மாசில்லா வம்மலைதான்
சேமமுறமேருமலைச் சீரளைபும் – பூமழைபோல்
பூந்தண் ணிமம்வீழப் பொற்பமையும் அம்மலைதான்
தீந்தண் ணிமயமலைச் சீரையுறும் வாய்ந்தவதில்
சோதி நிலைபோலத் தோன்றியும்தோன் றதுமவன்
மீதிருக்கும் பற்பல் வியன்சுனைகள் – போதமிகும்
மாதவரும் சித்தர்களும் மாதவஞ்சேய் தாங்கமர்ந்து
போதவா னந்தசுகம் போற்றிடுவார் மோதுகுரல்
வெற்பெனவே மிக்குயர்ந்த மேவுமுரற் காலமைந்து
கொற்பயிலும் யானைகளும் கூர்ந்திடுமால் பொற்புமிகும்
நல்லரச வாதமெனும் நந்நூல்தேர் கொங்கணராம்
வல்லசித்தர் பச்சிலைகொள் மாசாற்றல் – தொல்மலையின்
மன்னோர் குகையிருந்து மாசுபடு செம்புமுதல்
பின்னுள்ள லோகமெல்லாம் பேணியே மண்கலத்தில்
வைத்துமண் சேலைசுற்றி மன்னுமனல் எற்றியன்று
மெய்த்துருகி நின்று வெகுசெபங்கள் – செய்துநல
மன்னூதி யன்று மலைமலையாய்ப் பொன்குவித்த
பொன்னூதி யென்ற புகழ்மலையான் – வன்னமுள

ஆறு
பூமிக் கணிகலமாய் போற்றும் பொருள்மிகுந்து
நேமிப் புலனை நிதம்தழுவிச் சேமித்த
ஐந்திணையும் சேர்ந்து அகமும் புறந்தழுவி
பைந்தினையைத் தேனைப் பதம்பார்த்து – நைந்துறுவார்க்
குண்ணீரு மாகி உவந்துறுவார் பாவவினை
மண்ணீரு மாகி மகிதலத்து – எண்ணீன்ற
பாவின் நலந்தெரிந்த பாவாணர் நற்கவிபோல்
தேவின் இனிமை திகழ்ந்திலகி – மூவரிலும்
போற்றுதிரு மால்மார்பில் போந்தமுத்து ஆரமெனச்
சாற்றுமெழில் சார்ந்து தலைமையுறும் – ஏற்றபுகழ்
தான்பொருந்து சீர்கொள்கொற்றை சாரும் உயர்வுடைய
ஆன்பொருந்த மென்னும் அணிநதியான் – கான்பொருந்தும்

நாடு
வாசமலர் சூழும் மணிப்பொய்கை மிக்குளதாய்
பேசும் இனியவயல் பெற்றுளதாய் ஈசனருள்
பேணுந் தருமநிறை பெற்றம் நிரைதழுவிக்
காணும் புனிதங் கவினியதாய் – ஆண்களெலாம்
மாமதன ராக மகளிர் ரதியரெனும்
சேமநலம் பெற்றவுயுர் சீர்மருவி – மாமணத்து
முப்பழத்து நற்சுளையும் மூசுவண்டு சுற்றுநல
வெப்பிலிய சோலை மிகத்தழுவி – எப்பவும்நற்
பொன்னுடு போலப் பொலியும் பெருமைமிகும்
தென்கரையென் றேதும் திருநாடன் – நன்னிலையாம்

நகரம்
வேதக் கலையுணர்ந்த வேதியரும் வாழ்க்கைநெறி
நீதக் கலையுணர்ந்த நீதவரும் – போதநெறி
போற்றும் புனிதர்களும் புண்ணியந்தேர் கன்னியகும்
சாற்றும் மனையறத்தைத் தாங்கியே – நாற்றிகையில்
நின்றும் வருவிருந்தை நின்ற மலர்முகத்தால்
நன்று நவின்று நகைமகிழ்வில் துன்றுநலச்
சொல்லிருந்து காட்டிச் சுவைவிருந்து பல்நாளும்
நல்முறையில் ஊட்டுவிக்கும் நல்லோரும் சொல்லமுதை
நற்செவியல் ஏற்றுவிக்கும் நாவலர் தங்களுக்குப்
பொற்குவியல் பொன்னுடை பூண்களுடன் - நெற்குவியல்
மற்றும் உணவுவகை மாண்புடனே யீய்ந்துபுகழ்
பெற்றும் உயர்ந்ததா ளாளர்களும் – பெற்றியில்வாழ்
வெற்றி பலவுடைய வேளிர்குலம் தாம்செறியும்
கொற்றைநகர் என்னும்சீர்க் கோநகரான் – கற்றைசெறி

பரி
வாலுளதாய் செம்மை மயிருளதாய் குங்குமம்போல்
மேலுளதாய் நல்லசுழி மேவினதாய் – பாலுளசொல்
நல்கு கனைப்புளதாய் நாடுகளம் தன்னில்வெற்றி
மல்கு கவன வளர்துரகன் – பல்குநல

யானை
நன்மணியும் பூணும் நலனுர் முகப்பணிபும்
மென்மணியும் பூண்டுயரும் மேவலர்கள் – வன்மைசெறி
திண்கதவங் குத்தும் திறலமைந்த கோடுகள்கொண்
டுண்மதங்கள் தாங்கும் உயர்கரியான் – பண்ணமைதி

மாலை
நாடும் அளிகளெலாம் நல்ல சுவைத்தேனுண்டு
ஆடும் குவளை அணிதாரான் – தேடுபுகழ்

கொடி
நன்மை வளம்பலவும் நாட்டினருக் கீய்சுகுண
வன்மை மிகும்மேழி வண்துவசன் – தன்மைமிகும்

முரசு
தோன்றுவயம் கல்யாணம் சோபனமார் வண்மையென
மூன்றாய் முழங்கும் முரசினான் தோன்றுமந்த

ஆணை
முப்புரத்தை யேயெரித்த முக்கண் ணுளசுயம்பெம்
அப்பரமர் பாதஞ்சொல் ஆணையினுன் – எப்புரமும்

வாசல் சிறப்பு
பொன்மகளும் சொன்மகளும் பொற்பரசன் தன்மகளும்
நன்மைதர வந்துவக்கும் நல்வாசல் – இன்மதுரத்
தென்னூஞ்சல் வண்டு செறிந்துறையுமு் தார்கள்மிளிர்
பொன்னூஞ்சல் கொண்ட புகழ்வாசல் – பன்னும்சீர்
ஆதிரைநான் தன்னில் அருள்பெரிய நாயகியாள்
சோதியின்மேல் பாட்டிசைக்கும் சோபனமும் – நீதிதவழ்
மன்னும் விசாரணைசெய் மாமகிமை சேரநிதம்
பொன்னம் பெருக்கும் புகழ்வாசல் – அன்னமொடு
அப்பநல மோதகமும் ஆன அதிரசமும்
முப்பழமும் பானகமும் நீர்மோரும் – செப்புகின்ற
சர்க்கரையும் தேனும் ததியோ தனம்முதல
மிக்கவே கொண்டுவான் மின்னலெல்லாம் – தொக்கதெனக்
கன்னியர்கள் கூடிக் கவின்பூச நந்நாளில்
பன்னுங்கும் மிப்பாட்டுப் பாடியே – இன்னிசையாம்
தோத்திரங்கள் கூறிச் சுருதியறி யாமுருகன்
கீர்த்நியதைப் பாடும் கிளர்வாசல் – நேர்த்தியுடன்
நாமகளார் நோன்பாம் நவமி தசமிகளின்
கோமகளார் கொற்றங் கொளும்வாசல் – தாமமணி
பல்லரசர் வந்து பணிந்துநின்று வேணுடன்
சொல்மணியைக் கேட்கும் சுபவாசல் – நல்லவர்கள்
போற்றித் துதித்துப் புகழ்பாடி ஈசனருள்
சாற்றுமுயர் வாச லுடைந் தாரரசன் – போற்றுகொன்றை

குல தெய்வம்
ஆரணியுங் கொற்றை அமரர்தொழும் சோதியெனும்
பேரணியும் நற்சுயம்புப் பெம்மானும் – சீரணியும்
கார மிளகுதனைக் காட்டுப் பயிறாக்கிச்
சார மிளகாக்குந் தத்துவனுர் வாரமுள
அப்பரமர் பாதம் அருள்பெரிய நாயகிதன்
செப்பு பதபூசை சேர்மனத்தான் – இப்புவியில்
ரத்தின மூர்த்தியாம் நல்லகுல தெய்வமதை
எத்தினமும் போற்றும் இசையாளன் – வித்தகராம்

குலகுரு
அய்யன் சிவன்பதத்தை ஆதரவாய்ப் பூசைசெய்யும்
செய்யன்ஆச் சார்யவபி சேகமுளோன் – வய்யமிசை
தங்கமென இந்தத் தரையுதித்த நற்சடைய
புங்கபர மேசுரநற் பூசுரனுர் குங்குமம்போல்
செந்தா மரைபோல் செறிந்த முகமதனை
அந்தார் மனமிருத்தி ஆதரிப்போன் மைந்தாரும்

துணைவி
அன்னை தயையும் அருளார்செந் தாமரைவாழ்
பொன்னி னழகும் புவிப்பொறையும் – மன்னும்
தவச்செல்வி யாகத் தரணியோர் போற்றும்
புவனிவரு லக்ஷமியாம் பொன்னை – உவகையுடன்
பட்டத் தரசியாய்ப் பாரதனில் கொண்டுமே
இட்டமுடன் வாழ்வுகந்த ஏந்தலிவன் மட்டடங்கா

வேணுடன் கொடை
நூல்பலவும் தேர்ந்து நுணுகி உலகியலைச்
சால்புடனே கற்றகுண சாமர்த்யன் பால்போல்
வலமயக்கம் தீர்ந்த மனமுடையான் மானப்
புலமுடையான் பல்படையுமுள்ளோன் – தலமதிலே
நாவை யசைத்திந்த நாடாள்வோன் நற்கீர்த்தி
யாவையுமே கொண்டதிற லாளனிவன் – தேவரிலும்
மேலானோன் இம்மை மறுமைக்கும் வேண்டுவன
சாலவே பெற்றகுண சாமர்த்யன் மாலிவனைக்
கண்டு கருத்தை இயம்பாமுன் தானோர்ந்து
கொண்டுன் மனமகிழக் கூர்ந்துதனை அண்டுமுன
தெண்ணம் நிறைவேற்றி எல்லாமே தந்துதவும்
மண்ணுலகில் வாழ்க மகிழ்ந்து.


கொற்றை அரசர்
ஸ்ரீமான் பெரியண்ணவேணுடர் அவர்கள்மீது
சங்கரண்டாம்பாளையம் ஆதீனவித்துவான்
கவிப்பெரும் புலவர் க. பழனிச்சாமி அவர்களால்
பாடப்பெற்ற குருபரன் ஆற்றுப்படைCopyright © 2010 - 2017 konguvenadar.org