Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பன்னிரு கிராம மக்கள் வாழ்த்து<< >>அரயநாடு காணிப்பாடல் கூறைகுல வள்ளல் காளியண்ணன் மீதுபாடியது
காங்கேய நாட்டுக் காணிப் பாடல்கள் - 32 அடி ஆசிரிய விருத்தம்

திருமருவு சத்திசிவன் மலையிலுயர் முருகனை
தெய்வானை வள்ளி யம்மையைச்
சிங்கநகர் அதனில்வளர் அதிக பெருங்குடியனை
செயவேந்து செங்கண் ணனை
சீர்கொண்ட தூரனைப் பதுமன்முதல் வாணியைத்
திவ்வியச் சாத்தந்தை யை
தேவர்கள் புகழ்கின்ற வள்ளிநகர் வில்லியைச்
செல்லனை ஆந்தை குலனை
செல்வவன் ணக்கனைப் புல்லனைக் கல்வியது
சேர்ந்துவளர் கண்ணந்தை யை
சிங்காரப பூந்தையைக் காடையைக் கணக்கனை
திகழ்பரவு நீருண்ணி யை
சீரகத் தார்பரவு செட்டியைக் காடையூர்
சேடனைப் பொருளந் தையை
தருமமிகு பட்டாலி யதனில் வளர்குருகுலன்
தாங்குசீர் கண்ண குலனை
சமரமிகு கீரனூர் தன்னில் வளர் ஆதியை
சவுர்யமிகு மந்துவ குலனை
தன்னில்வளர் காடையைக் கீரனை விலையனை
தர்மமிகு தேவேந்த் ரனை
தரணிபுகழ் பார்ப்பதித் தோடைகுல தீரனைத்
தந்திரமிகு கண்ணந் தையை
தனதான காடையைக் கீரன்வண் ணக்கனை
தருவாண னைச்செட்டி யை
தமிழ்பரவு பரஞ்சைநகர் அதனில்வளர் பயிரனை
தனபதிச் செம்ப குலனை
தனமிகு மோதாள னைச்செட்டிவண் ணக்கனை
தகமையுறும் ஈஞ்ச குலனை
சவ்ரியமிகு விளியனை பரமகுல மேருவை
தழைத்துவளர் ஆவ குலனை
அருமைதிகழ் ஆடையைக் கருணைதிகழ் வாணனை
அரசர்புகழ் தென்காரை யூர்
அதனில்வளர் மணியனை க்யாதியுள பயிரனை
அவனிமிசை மருதுறையில் வாழ்
அதிகபனங் காடையை புகழ்பெற்ற ஆந்தையை
அன்புமிகு செங்குண்ணியை
அழகான முத்தூரில் வளர்கின்ற முத்தனை
ஐயமிகு மணிய குலனை
அகளங்கச் சேரனை தளபதிவெள் ளம்பனை
அனதான பொருளந்தை யை
அமரர்தொழு கன்னையில் அதனில்வளர் செங்கண்ணன்
அரசுபுரி அதிய னவனை
அளப்பரிய ஓதாள குலவனை நலமிகும்
ஆசைமிகு மால் பதரியை
அன்புமிகு கணவாள குலத்தீரர் தங்களை
அச்சமிகு மாவெட்டி யை
அனைவர்புகழ் செட்டியை முத்தன்வண் ணக்கனை
அற்புதக் கடுந்தூணி யை
மருவுலவு வெள்ளையம் பதியில்வளர் குருகுலனை
வாகுசேர் ஆந்தை குலனை
வரிசைதிகழ் வில்லியைப் பிரபுடிக மாடையை
மதுரமொழி ஓதாள னை
வலிமையது சேர்கின்ற அதிகவண் ணக்கனை
மகராச யோக மருவும்
வாகுத் தனஞ்சயனை தேவதா னத்திலுயர்
வண்மைசேர் ஆறுதொழுவில்
மருவு பொரு ளந்தையை முதலியம் பதியில்வளர்
மதியூகி செங்கண் ணனை
மற்றமுள வர்த்தகர் முதலான செழுமையுடன்
வண்மைசேர் குடிகள்தம் மை
மதியிரவி காணளவு அதிகபுகழ் நலந்தந்து
வளம்பெறக் காக்க நன்றே

மேற்சொன்ன குலத்தார்கள் தமது காணிக்கு ஆதாரமாக குதிரை செய்துவைப்பது வழக்கம்Copyright © 2010 - 2017 konguvenadar.org