Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பன்னிரு கிராமப் பாடல்<< >>தேன்கரை நாடு பன்னிரண்டு கிராமச் சிவாலயங்கள்
பன்னிரண்டு கிராம முதன்மை

கொற்றைப் பதி
ஞாயம் நிலைபெறுத்தும் நற்கா வலன்குழையன்
நேயப் பெரியகுலன் நீள் ஆந்தை ஆயன்
திருவளர் கொற்றைக்கு சேரன்செம் பூதன்
பெருகுசெட்டி யுங்காணிப் பேர்

மூலநகர்

மூலகுல சேரலன் முன்பூசன் செட்டியுடன்
சீலமிகு கம்பளத்தான் சீராளன் –மூலநகர்க்
காணிகொண்ட செல்வம் கருணை தழைத்தோங்க
வேண முதன்மைஐந்து மே

குறிச்சி

குழகன்பொன் னூதிக் குமரனைப் பெற்ற
அழகீசர் பொன்னுச்சி அம்மை – நிழலின்
அருள்பரவும் பள்ளிகொண்டான் ஆந்தைகுல மன்னர்
பரவுங் குறிச்சிப் பதி

முளையான் பூண்டி

செல்லாண்டி யம்மனருள் சின்னம் மனைப்பணியும்
வல்லாளன் காடைகுல வண்மையான் – நல்லோரும்
மாதவரும் நீராட வந்திலகும் ஆன்பொருனை
ஓதும் இளம்பிள்ளை யூர்

கோமங்கை

ஆந்தைவேந் தன்செட்டி ஆத்திநதி யும்புலியும்
பாந்தளணி கோவீசர் பாதமலர்க் – காந்தமணி
தாங்கித் தமிழ்மொழியைச் சாற்றியந லாந்தைகுலன்
ஒங்கிவளர் கோமங்கை யூர்

வீராச்சி

மாறாச் சலங்கள் வருமம்பி காநதிசூழ்
வீறாச்சி மங்கலத்து வேந்தனும் ஊராட்சி
வீரப் பரியும் விரைபூந்தேர் வேணுடன்
தீரன் இவனெனவே செப்பு

தூரம்பாடி

தூரன்வேட்டு வன்ஆந்தை சொல்லுகலை அந்துவன்
வீர முளமயிலன் மெய்ச்செட்டி – சீருநுதல்
தீட்டு முதலானும் செய்முதன்மை தேன்கரைநந்
நாட்டிலுயர் தூரை நகர்

மாம்பாடி

வேதப் பொருளாய் விளங்கும் மரகதத்தாய்
மாதுபா கத்திலகும் மாந்தீசர் – பாதமலர்
தாங்கித் தமிழ்மொழியைச் சாற்றியநல் லாந்தைகுலன்
ஓங்கிவளர் மாம்பாடி யூர்

பிரமயம்

வலஞ்சுழிநா தன்னைபதத்தை வந்தனைசெய் சிந்தை
நலம்பெருகு காவலவன் நட்புக் குலம்படைத்த
தான்புகழ்சேர் செட்டியும் தம்பமிகு தொட்டியனும்
ஆன்பொருனை சூழ்பிரம யம்

நீலம்பூர்

செட்டி முதல்ஈஞ்சன் சேரன் பரவுதங்கக்
கட்டியெனும் நீலம்பூர்க் காளியம்மன் இட்டமுடன்
காமியத்தை யேபரவும் காணிபெற்ற மால்சோழ
சாமி மிகுந்த தலம்

குகைமண் நகர்

சாந்த குணம்தயவு தாங்கும் பெரியகுலன்
ஆந்தைகுலன் நானென்னும் நாமமே – ஈந்த
சுகசரிரன் பூசகுலத் தொண்டைமா னுக்கும்
குகைமண் நகர்க் காணியெனக் கூறு

வேணுவுடையார்

எண்ணரிய கலியுக சகாப்தமதி லெண்ணூற்றி
னெட்டான திற்கு மேலே
எழில்பெற்ற செயவருடம் இனியவை காசியும்
ஏய்ந்தபதி மூன்று தேதி
நண்ணிய சனிவாரம் அமரபட் சத்துடன்
நலம்பெறும் சஷ்டி நாளில்
நளினமிகு பூராட சுபநாம யோகமும்
நாடுபவ கரண முடனே
மன்னவர் மதிக்கும் குலோத்துங்க சோழனிட
மந்திரித் தலைமை யாகி
வளமைபெறு காவிரிப் பூம்பட் டினந்தன்னை
மகிமையொடு திறைகொண் டிடும்
தன்மைபெறு மைநூறு குலவணிகர் தம்மையே
தனதுவச மேசெய்த தால்
தரணிபுகழ் செட்டிவே ணுவுடையன் என்றுமுடி
தனம் பெறச் சூட்டினர்க ளே

ஊதியூர்

காவலோர் மெச்சுகின்ற காவலவன் செங்குவளை
பூவுலவு திண்யுயசெம் பூத்தகுலன் – மேவலவன்
மோதிநகர் ஆனை முகத்தோன் வளர்செம்பொன்
ஊதிநக ராதியரென றேதுCopyright © 2010 - 2017 konguvenadar.org