Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பெரியகுல முதன்மை<< >>பன்னிரு கிராமப் பாடல்
ஊதியூர் செம்பூத குலத்தார் சிறப்பும் காணி

ஆசிரிய விருத்தங்கள்
மண்டலந் தன்னில்வளர் மாண்புடைய இரணபுரம்
மன்புத்தூர் அத்த னூரும்
வயராசி யுங்குமர மங்கலமும் அந்தியூர்
வ ளம்பெற்ற நாம கூடல்
வண்டமிழ்க் காடனூர் கண்டகுல மாணிக்கம்
வாகை கீரம்பூ ருடன்
மன்னுசெல் வம்நிலை மதன்சேரி விதரிநகர்
மானசே வூர்மொஞ்ச னூர்
ஏண்டிசை விளங்குகூ டச்சேரி குமரனூர்
இலகுபுல் லூர்சிவதையும்
இயல்சேர்நல் லுத்தமச் சோழபுர மென்னுமெழு
மாத்தூ ருடன்நலஞ் சேர்
திண்டமங் கலமும்வை குந்தபுரம் உடுதுறை
தென்கொற்றை யூர்திரு மலைச்
செல்வனெனும் முதலிமா ராசன் பிறந்திடு
செம்பூதர் குலக்காணி யே

சீர்மருவு கீரம்பூர் பிரசைவேட் டம்பாடி
தென்னர்செறி பெற்றி பலவூர்
செய்யபுகழ் சேர்செல்வ மிகுகாதப் பள்ளியும்
செம்மைவே லூரு நத்தம்
கார்மருவு சோலைசெறி பிள்ளையா நந்தமும்
கருமநகர் வீசனமதும்
கனமிகு முருங்கைப் பெருந்தொழு வயோத்தியும்
கல்விசேர் தோகை நத்தம்
ஏர்மருவு கொங்குதா ராபுரமும் மிக்கான
எழில்தரம தானநல்லூர்
இனியதென் கொல்லிமலை எண்பத்தெட்டூருக்கும்
இறைவனே செம்பூ தனே
வார் அணியும் முலைமாதர் வேளென மதிக்கவரு
மைந்தனும் ஐந்து தருவாம்
வானவர்கள் புகழவரு நலகுமா ரேந்த்ரனே
வாழ்கநீ டூழி தானே
தேன்கரை நாடும் வாழ்க
செம்பூத்த குலமும் வாழ்க
வான்தொடு மலையாம் ஊதி
மலையதும் வாழ்க வாழ்க
கோனம்வே ணுடன் வாழ்க
குவலயம் வாழ்க வாழ்க
வான்மழை வாழ்க கொங்கு
வேளிர்தாம் வாழ்க வாழ்க
ஊதியூரில் செம்பூதர் ஊராண்மையும் காணியும் பெற்றது



Copyright © 2010 - 2017 konguvenadar.org