Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » காணிப் பாடல்கள் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வேணுவுடையார் வெற்றிமுடிசூடல்<< >>காங்கேய நாட்டுக் காணிப் பாடல்கள் - 32 அடி ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி - 32 அடி ஆசிரிய விருத்தம்

அவனிதனி லேவரும் கலியுகச காத்தம்நா
லாயிரத் தறுநூற்றின் மேல்
ஆனதொண் ணூற்றென்ப தாம் விளம்பியின்வருடம்
ஆவணி முதல்தேதி யில்
அதிகமுள குருவாரம் இனியரோ கணிதசமி
அமைகடக லக்கின மதில்
அன்புபுரி சுபநாம யோகமொடு பாலவா
கரணமும் கூடியே வந்
தாகுமிந் நாளில்நற் சுபதினம் தன்னிலே
அனைவர்களும் உவகை பெறவே
ஆறுநா லானநா டதனில்மே லான தென்
கரைநாடு சதுரகிரி சேர்
ஆன்பொருனை சூழ்ந்துவள முலவூதி நகர்முதன்மை
யாகவரு காவல வனும்
அதிகமா கியகருத் தினில்மெச்சி வளர்கின்ற
அவ்வமயம் யோகி யாகி
தவநிலை மிகுந்தவே லப்பமக ராசன்வெகு
சனர்புகல எல்லை வாது
தானடந் தேவரும் வேளையினில் சிவபதஞ்
சார்தலால் அவர்மனைவி யாம்
தருமமுயர் வள்ளிமா தெனுநாம முற்றபெண்
சாயுட்ச வீடு நமது
தாமென் றருந்ததிக் கற்பைத் தியானித்து
சத்திய பத்தி நியமம்
சார்ந்துதவி தாவென்று வீரசடை பின்னியே
சகலாப ரணமணிந் து
தாவுதீப் பிரவேச மாகிமே லாகிடும்
சமஸ்தான மெய்தவேண்டி
தன்னினத் தோர்களை அழைத்திடவு மேதனது
தாயாதிகள் மறுக்க வே
தள்ளிவிட் டேதரும தேவனே சிவசிவா
சமயமிதி லுதவு மென்ன
சிவனருள் சிறந்துமிவள் கற்புநிலை பெரிதென்று
திருவுள காட்க்ஷ முற்று
தென்கொற்றை நகரில்வரு செம்பூத்த குலமுதலி
தீரனும் பந்து சனர்கள்
சேர்ந்தாடல் செய்தவூர்ச் சமஸ்தான மன்னிடம்
செப்பிவிடை கொண்டு மீண்டும்
செம்பொன்வளர் ஊதியூர் தனில்வளரு முத்தண்டர்
திருவடியை வேண்டி அந்தக்
செங்கைவடி வேலர்பன் னிருகண் குளிர்ந்திடச்
சிகிமான் முனேதீ யிட
தேவியெனும் வள்ளிமா தும்பரிவு கூர்ந்துமே
திருக்கரம் விளங்க வாங்கி
தியானநிலை யினில்ஞான அக்ஷரத் தைசெபித்
தேதானம் பலவளித் து
தேசமதில் உயர்சனம் கொண்டாட வேதனது
சேயினது சொந்த முற்ற
நவநிதி யிலங்குபொன் னூதிநகர் சேர்மூக்க
ணுங்கோட்டை கீழ்ப்பா ரிசம்
நயமிகும் அக்கசா லைத்தலைவர் கையினுல்
நன்ற யமைத்த பீடம்
நடுவிருந் தேவீர சொர்க்கவீ டெய்தவே
நல்வேளை வருதல் கண்டு
நளினமிகு செம்பூத்த குலமுதலி தனதுமுனம்
நாடியே அருகணைத் து
நானில் மிதில்சந்தி ராதித்த ருள்ளளவும்
நமதூதி நகரம் உனது
நகரமாம் திருமூர்த்தி அறியவே நம்பிக்கை
ஆகவே நிலைநாட்டி னோம்
நமதூழி யம்செயும் மொண்டியாண்டியும் வேட்டுவ
நாவிதன் சாம்புவனை யும்
நலமுற வளர்த்தென்று சொலும்வள்ளி நாயகி
நாலாம் பதத் துயர்கவே
Copyright © 2010 - 2017 konguvenadar.org