Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொலு விலாசம் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
>>ஆசிரியர்
கொலு விலாசம் - முன்னுரை

ஒரு நாட்டை ஆளும் மன்னன் ஒருவன் பெரியோர்கள் வகுத்த நல்ல நாளொன்றில் முடிசூட்டு விழா நடத்துவான். அது முடிந்தபின் நகரவலம் வருவான். அப்பவனி முடிந்ததும் தனது அரண்மனையிலுள்ள சிறந்த அத்தாணி மண்டபத்தில் உறவினர்கள், அயல்நாட்டு மன்னர்கள், நகரமக்கள் அமைச்சர் புரோகிதர், சேனாபதியார் ஒற்றர்கள், முதலியோர்கள் புடைசூழக் கொலு அமருவான். அவ்வமயம் அவனிருந்த நற்காட்சியைக் கண்ட அழகி ஒருத்தி (மோகனாங்கி) அவன்மீது ஆசை கொண்டு அவனில்லாமல் தானில்லை என்ற நிலையில் மயங்கி காமசுரம்கொண்டு தயங்கி இருப்பாள். அவ்வமயம் அவளைக் காண அவளது பாங்கி அங்கு வருவாள். அவள் அவளது சோர்ந்த நிலையைக் கண்டு அதற்குரிய காரணம் என்ன என்று கேட்பாள். அதற்கு விடையாக அந்த அழகி தனது மனோநிலையை இயம்பி தான் விரும்பும் தலைவனைக் கண்டு மயக்கமடைந்ததாகக் கூறுவாள் கூறி தன் தோழியைப் பார்த்து அத்தலைவன்பால் நீ தூது சென்று தனது கருத்தை அவன்பால் இயம்பி அவனது கருத்தை அறிந்து இசைவிற்கு அடையாளமாக அத்தலைவன் அணிந்த மாலை ஒன்றை வாங்கி வரும்படி வேண்டுவாள். பாங்கியும் அவ்வாறே தூது சென்று தலைவனை இணங்க வைத்து அவனை அன்று மாலையே வந்து அவ்வழகியைக் கூட வேண்டுமென்று கூறி அவன் இசைந்ததற்கு அடையாளமாக மாலையொன்றை வாங்கி வந்து தருவாள் அவ்வழகியும் அம்மாலையை அணிந்து மகிழ்வாள். தலைவனும் தான் சொன்னபடி அன்று மாலையே வந்து அவளைக் கூடி அவளது ஆசையை நிறைவு செய்து வைப்பான். தலைவி அவனை வாழ்த்துவாள். இதுதான், இந்தப் பிரபந்ததின் முறைமையாகும்.

இந்தப் பிரபந்தத்தின் கருத்து, முடிசூடிய மன்னன் திருமாலாவான் அவன்பால், திருமகளாகிய பெருமாட்டி அவன் வாழ்வை செல்வநலம் தோன்ற சுபம் செய்து வைப்பாள் என்ற தத்துவத்தை இப்பிரபந்தம் உணர்த்துகிறது.



Copyright © 2010 - 2017 konguvenadar.org