Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொலு விலாசம் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பாட்டுடைத் தலைவர்<<
குமார ரத்ன வேணாடுடையார் கொலு விலாசம் - நூல்

கணபதி துதி
விருத்தம்
1. பொன்னுர மணிமார்பன் கொற்றைநக ராதிபதி புலவோர்க் கன்பன்
நன்னுக ரிகன்குமார ரத்தினவே ணுடர்கொலு நாட்யம் பாட
முன்னுக மங்களுக்குச் சரியாகப் பாரதத்தை மொழியமேரில்
தன்னு வலக்கோடு ஒடித்தெழுதுங் கணபதியைச் சாற்றுவோமே.

தோடயம்
2. ஏர்கொண்ட மணிமௌலி எழில்கொண்ட முடிகொண்ட
இந்த்ர தருவாய்வந்த தந்த்ர உபாயா
பார்கொண்ட பூபாலர் பகையரசர் பணிசீமா
பார்த்திபர்கள் மனதுமெச்சும் பாக்யயோகா
வார்கொண்ட முலைமாதர் மயல்கொண்ட பருவங்கொள்
வடிவுபெறு கின்றதிருப் பெரியகுலனே
பேர் கொண்ட புகழ்கொண்ட விநயவுத் துங்கனெனும்
விருதுசேர் குமாரரத்ன வேணுட தீரா

பல்லவி
3. ஜெயமங்களம் நித்ய, சுபமங்களம்
ரதிமதனனுக்கு மங்களம் குமார ரத்ன
ராசனவனுக்கு மங்களம்
வீராதி வீரனுக்கு விஜய சங்கிராமனுக்கு
பாராள வந்ததொரு-பார்த்திபர்க்கு
ஜெயமங்களம்-நித்ய சுபமங்களம்
தாராள குணமுடைய தாட்டீக யோகனுக்கு
ஏராளசெல்வ சுகம் ஏய்ந்தவர்க்கு
ஜெயமங்களம் நித்யசுபமங்களம்
விருத்தம்
4. உற்றவர் சூழ்ந்து காணு, யோகமே உயர்ந்தெந் நாளும்
கொற்றனூர் தன்னில் வாழும் குவலையம் ஆண்ட மன்னன்
பெற்றமால் குமார ரத்ன வேணுட பேகன் மெச்ச
கற்றவர் புகழ்ந்து பேசும் கட்டியக் காரன் வந்தான்
கட்டியன் வாழ்த்து
விஜயீபவ
5. இந்த்ரவை போகனே ! விஜயீபவ
எங்கள் வேணுடனே-விஜயீபவ
குடகர் வடவர் திறை கொண்டு செலுத்து புகழ்
கொற்றை நகருடையானே விஜயீபவா
குமாராத்ன வேணுடனே விஜயீபவ
சரணம்
நலமதுபுரிய நாவலர்மகிழப்
பலதமிழ்ப் பொருள்பகர் பார்த்திபனே
வலிமை பெறுகுமார ரத்னவேணுடனே
இலகியபுகழா விஜயீபவ
இவ்வுல காள்பவா விஜயீபவ
அண்டர் முனிவர்துதி கொண்டு புகழுங்கறைக்
கண்டரா மப்பரமர் தண்பதந் தொழுபவ
மண்டலம் புகழ்குமார ரத்னவேணுடனே
மாதவர் பூசிதா-விஜயீபவ !
மன்னவர் மன்னவ ! விஜயீபவ !

கட்டியன் புகழ்ச்சிப் பரவல்
அகவற்பா
தசாங்கம்
6. ஏரணி மிகுந்த தாரணி யதனில்
இந்திர தருவாய் வந்த சுந்தரனே !
பூரண வதனம் ஆரணம் பொழிய
நந்தியே யனைய மந்த்ர தியானன்
தருமனை நிகரான் மறுமையும் உடையான்
தாட்டிக னுன மேட்டிமை யாளன்
பருவரைப் புயமான் வருபவர்க் கினியன்
அணிநவ ரத்னப் பணியணி வேந்தன்
தண்பத வரசர் கண்மணி யனையான்
சண்முகப் பெருமான் தண்மலர்ப் பதத்தை
பத்தியாய்ப் பணியும் சித்ர வித்தாரன்
பாவலர் துதிக்கும் நாவலங் காரன்
எத்திசை புகழும் சித்திர மதனன்
பொன்னூதி மலையான் பொருனைமா நதியான்
தென்னூதி வளஞ்சேர் தேன்கரை நாடன்
கொற்றையம் பதியான் குவளையந் தாரன்
மதகரி பரியோன் மாண்படை யுடையோன்
விதரணம் பேசும் மும்முர சுடையோன்
சுதைபெறு செங்கோல் துலங்கு கைக்காரன்
ரத்ன வேணுடன் நற்பதி அருளே !
பெற்றருள் செட்டி வேணுட பூபன்
குருமன்னர் பணியும் குமாரவேணுடன்
இருதய மகிழ்வாய் ஈன்றருள் குணவான்
கற்ற வேதியர்கள் கவிவலர் சூழ
உற்றமாண் கொலுவில் உவந்தர சிருப்போன்
தந்தை:
வெற்றிசேர் முத்து ரத்ன வேணுடன்
பெற்றருள் யோக பேகனும் ஆனேன்
அறிவினில் உயர்ந்தோ னுமென வந்தோன்
நறுமலர்க் குழல்சேர் நாரியர் மதனன்
குமார சின்னையமால் குலவிடும் ரத்தின
அழகா பரணன் அழகு சொக்கையனை
ரத்னமே யணியும் ரத்ன பூபதியாம்
கொற்றையில் பெரிய குலத்தினில் வந்த
விந்தைசேர் புயத்து விளங்கு சின்னையனைச்
சொந்தமாய்ச் சிறிய தந்தையென்று ரைப்போன்.
உடன்பிறந்தோர்:
பார்த்திப ரிலகும் பகைவர்கள் பணிய
போற்றிய குமார பூபதி தனையும்
அங்கசன் எனவே அரிவையர் சூழும்
துங்கசங்க் ராம துரைமுத்து ராயனை
பல்லிய முழங்கும் பரதநாட்டிற்கு
நல்லவன் குமாரு ரத்ன பூமானைத்
துணையெனப் படைத்த துரந்தர யோகன்
மாமன்:
நனிமலர்க் குமார ரத்ன சின்னையனை
காமனும் முத்துக் களிகொள் தீர்த்தயனை
மாமனுர் எனவே மகிழ்வாய் அழைப்போன்
மைத்துனர்:
கற்றிடுங் குமர காங்கய மன்றடி
சொற்றவ ராத தொண்டைமான் சின்னையன்
கொடுவாயில் வாழும் குமார சின்னையனை
திடவான் எமது தெய்வ சிகாமணியை
இத்தலம் புகழ இவர்களை என்றும்
மைத்துன ரெனவே மதித்திடும் பெரியன்.
பவனி வரல்:
அப்பர மேயன் அடியிணை பரவி
இப்புவி யதுவும் இனிய பாதளமும்
ஆனையும் சகடமும் அரிய ஒட்டகமும்
வானளா வியநல வாத்தியம் முழங்க
பூந்தேரி லேறிப் புகழது பெருக
மாந்தர்கள் துதிக்க வந்தனன் பவனி
குரகதக் கூட்டம் குலவிமுன் நடக்க
மரகதக் கடகரி மாறாது நடக்க
இடக்கையில் மேழி இலகிய விருது
கடற்கரை அலைபோல் கதித்துமுன் நடக்க
வீதியில் உலவி மிரவணை வந்து
சோதிசேர் கூடம் துலங்கிய முன்றில்
மரகதத் தூண்கள் வரிசைய தாக
நிலைபெற நிறுத்தி நிலவுமுத் தரத்தால்
பலவகைத் திறத்தில் பாகுகள் செய்து
தவளமுத் தணியால் சரம்பல தூக்கி
மாணிக்க தீபம் மண்டபம் தோறும்
காணிக்கை யெனவே காந்திகொண் டொளிர
தோரணம் நெருங்கத் தொடைகள் வில்வீச
ஆரணம் முழங்க அடையலர் பணிய
வந்தனன் குமார ரத்ன வேணுடன்
இந்திரன் சபைபோல் இருந்தனன் கொலுவே.

7. கட்டியன் கொலுவில் வாழ்த்துதல்
தரு..... தாளம் ஆதி
பல்லவி
வந்தான் கொலுவி லிருந்தான்
உல்லாசமாகவே. (வந்தான்
அனுபல்லவி
விந்தைபெறு குமார ரத்ன
வேணுட மன்றடிராயன் (வந்தான்
சரணம்

மாதர்இருபால் வரவே-வெற்றிலைச் சுருள்
மாறாது வந்து தரவே
நீதிபுரிந் துலகாளும்
சேதிவரவே மகிழ்ந்து (வந்தான்
வசீகரச் சலாம் செய்திருந்தும் – வட்டணைவாங்கி
வண்ணம் திகந்தம் பொருந்தும்
சுசீலன் அவதாரன் சுகாதாரன்
சந்தோஷமாகவே. (வந்தான்

கொற்றை முத்துரத்னவே ணுடன்அருள்
குமாரன் எழில்மிகும்தீரன்
வெற்றிபெறு குமாரரத்ன
வேணுடதீரன் ஒய்யாரமாகவே. (வந்தான்
8. விருத்தம்
ஓகைபுரிந் துலகாளுந் திறமை யெண்ணி
உலகரெலாம் புகழ்பேசி உவந்தே நிற்ப
வாகையணி குமார ரத்ன வேணுடராசன்
மாண் கொலுவி னழகையெலாம் மகிழ்ந்தே எண்ணி
நாகை தடுமாறாமல் மோகமயல் மீறாமல்
நண்பா யெண்ணித்
தோகைமயி லெனநடந்து இடைதள் ளாட
சுந்தர மோகினிமாது தோன்றி னாளே.
9. மோகினி வருதல்
தரு, ஆதிதாளம்
உல்லாச மோகினி வந்தாள்
ஒய்யாரமாகவே. – (உல்லாசமோகினி
அனுபல்லவி
நல்லோர்புகழ் குமாரரத்ன வேணு டுடையமன்னன்
சொல்லாலரிச் சந்த்ரன் என்று துரைமகா ராசர்மெச்ச
கண்டத் தொனிகுமிரவே – காற்சிலம்பு
கலகலெனப் பரவவே (உல்லாச
சரணம்
தொண்டைக் கனியமுது கண்டு - மன்மதனும்
தொண்டு செய்யுமிடைகொண்டு
மிண்டும் அனநடை கொண்டு – தொடை
இரண்டும் செவ்வாழையின் தண்டு கொண்டு (உல்லாச
மங்கைப் பருவமுலைச் செண்டு - வளம்பெறவே
வஞ்சிவயது பனிரெண்டு – எழிலிலகு
திங்கள் வதனவல்லி சிங்கார மோகமெல்லி
அங்கசன் கணைசொல்லி அழகு புருவவில்லி (உல்லாச
பெரியகு லத்தின் வளர்பேகன் – குபேரனைப்போல்
பிரபலமிகுந்த வைபோகன் – தினந்தினமும்
உரிமை செறிகுமார ரத்னவேணுட மன்னன்
பெருமைபெறுங் கொலுமுன்பு பேடையன்னம் போல் நடந்து (உல்லாச

10. மோகினி பேசுவது
விருத்தம்
கன்னியர்கள் மடலெழுதும் முத்துரத்ன வேணுடன் கனிவாய் ஈன்ற
மன்னவனும் குமாரரத்ன வேணுட மன்ன்னழகால் மயக்க மானேன்
தென்னன்மதன் மலரம்பு தொடுத்ததனால்
மயக்கமதால் தியக்க மானேன்
தன்மனதுப் படிமுடிந்த தென்மனது சகியாது வெண்ணி லாவே.
11. மோகினி நிலவை வெறுத்தல்
கண்ணிகள்
என்மனது நோகுதடா வெண்ணிலாவே
உனக்கு – இத்தனையேன் வர்மமடா வெண்ணிலாவே

என்மேனி கருகுதடா வெண்ணிலாவே
உனக்கு – என்னபிழை செய்தனடா வெண்ணிலாவே

எண்ணரிய புதழ்படைத்தாய் வெண்ணிலாவே
எனக்கு – இன்னல்பல செய்வதேனே வெண்ணிலாவே

பெண்ணென்று பிறந்துவிட்டேன் வெண்ணிலாவே
உன்னுலென் – பேதமையும் வெளியாச்சே வெண்ணிலாவே.

அண்ணல் குமாரரத்தின வேணுடன் இன்று
அணையவரின் என்னசெய்வாய் வெண்ணிலாவே.

மோகினி தென்றலை வெறுத்தல்
கண்ணிகள்
சித்தசன் மனமுடன் ஒத்துலா விவரு தென்றலே!
உன் – புத்தமிர்த குணம் இத்தனை கோரமேன் தென்றலே!
இத்தனை சத்ராவித் தனமேன் என்மேல் தென்றலே!
இன்று எங்கள் குமாரரத்ன மன்வரில் என்செய்வாய் தென்றலே!
சொல் தென்றலே!
பாங்கி வருதல்
கொச்சகம்
12. மன்றல்கமழ் காவிமலர் மாலையணி தாளாளன்
என்றுமிசை குமாரரத்ன ஏந்தலவன் இன்றுதந்த
மாமயலால் வாடியவள் வதங்துகின்ற நேரமதில்
தாயனைய பாங்கிஅங்கு தான்வந்தாள் நன்றுறவே.
பல்லவி
தாளம் ஆதி
13. பாங்கி வந்தனளே ! – உயிர்ப்
பாங்கி வந்தனளே !
அனுபல்லவி
பாங்கி காமுகர் ஏங்கியே மயல்
தாங்கியே சித்தி ராங்கி ஆகிய (பாங்கி
சரணம்
இலகுவளை கலகலெனவே – நடை
விலகுவிலகென விளம்பவே
திலக ஒளியினில் உலகமே – மயல்
பயில விசைப் பொருள் பகரவே (பாங்கி வந்
ஆரவடமது சேர அணிபவன்
ஆரமாலைகள் சோரவே. நல
மாரனரண்மனை ஆகும் அரவதில்
பாரமேகலை ஊறவே.
குத்துமாமுலை சுத்தியே படர்
பத்தியால் மயல் முத்தியே
குமாரரத்னவே ணுடபூபதி
மோகனக் கொலு முன்றிலே (பாங்கி
14. பாங்கியின் வினாவும் மோகினி விடையும்
விருத்தம்
அடையலர் பணிந்த சூரன் ஆதுலர்க் கருள்கு பேரன்
திடமிகு குமார ரத்ன வேணுட தீரன் மீது
மடவனப் பிடியேமோக மாகியே கொங்கை தாங்கி
இடைதுவண் டிருந்த சோகம் ஈதெனக் கியம்பு வாயே.

மோகினி விடை
கண்ணிகள்
என்னசொல் வேனடி பாங்கியே – இவன்
இந்திரனேவடி பாங்கியே
என்னிரு கண்ணிலே பாங்கியே – கொலு
விருப்பதைக் கண்டேண்டி பாங்கியே,
அன்னமே நீதூது சென்றுமே – எனது
ஆவலைத் தீரடி பாங்கியே
மன்னன் குமாரரத்ன வேணுடன் – தந்த
மையல் கொண்டேனடி பாங்கியே.
விருத்தம்
15. பார்புகழும் பெரியகுலத் தவதரித்த
துரைராசர் பண்பும் கீர்த்தி
மேருவென வளர்குமார ரத்தினவே
ணுடுடையார் மெச்சவேதான்
ஏர்பரவு மோகினியே என்வார்த்தை
அவர்க்கியம்பி அவர்தம் மாலைத்
தார் அணிய வேவிரும்பும்
தமிய னெனக் காதரவு தான்செய்வாயே

16. பாங்கி தலைவனிடம் தூதுசொல்லல்
தருவு
ஆசை கொண்ட பேரைக் கூடி
அனுபவிக்க வேண்டுமய்யா
வீசுபுகழ் குமார ரத்ன
வேணுட துரைச் சாமி (ஆசை
அங்கசன் படை கூடி
அடுக்கும் அவனை நாடி
திங்கள் தென்றலும் வாதாடி
தியங்கினுள் உந்தனைத் தேடி
சித்திரத் திலதம் தீட்டாள்
சிங்கார ஆபரணம் பூட்டாள்
கந்த மலர் மாலை சூட்டாள்
கனதம்பூரு வீணைமீட்டாள்
கொற்றை யம்பதி வாழ்தீரா
குறுநில மன்னர் பணிபாதா
கொற்றவர் மகிழும் நேசா
குமார ரத்தின வேணுட ராசா (ஆசை

விருத்தம்
17. அதிமதுர வசனமுள அரிவையுன்றன் மேன்மயலால்
மதியனல்கொண் டிரவுபகல் மதிமயங்கி வாடுகிறாள்
சதுர்விதுர சுமுகனெனும் தாட்டீக கொற்றையில்வாழ்
விதுரனெனும் குமாரரத்ன வேணுடபூபதியே

தருவு
பல்லவி
18. விரகம் பெறவே மையலானுன் – இப்ப
மேவி யணைந்து சுகந்தாராய் – ஸ்வாமி
விருதுபெறு குமாரரத்ன
வேணுடுடைய தீரா
மெல்லியலாள் உனைநினைந்து
தேடுகின்றாள் ஐயா. (விரகம்

சித்ர மணி மேடையின்மேல் – நின்று
தினமுமுனைத் தேடுராளையா
குத்துமுலை குலுங்க
குழையில் ஓலையிலங்க
சித்ரப் பாவையை நீ
சேரய்யா. (விரகம்

விந்தை பெறும் குமாரரத்ன
வேணுடுடைய அரிச்
சந்திரனே ஸ்வாமி தந்த்ர உபாயா ! மதி
மந்த்ரி சகாயா (விரகம்

வேணுடன் மோகனாங்கியுடன்
இணங்க ஒப்புதல்
விருத்தம்
19. இத்தரைக் கதிபன்எங்கள் ஏந்தலாம் குமார ரத்னம்
நத்திய விதமேபேசி நயமோக னாங்கியோடு
சித்தசன் ரதியும்போலச் சேர்ந்தினி யிருப்போ மென்று
பத்திசேர் மாலைதந்து பரவசந் தந்தான் மன்னே.

பாங்கி வாழ்த்து

20. மாலைதந்தான் குமாரரத்ன மன்னன் தானும்
மங்கையே உனைக்கூட வருவேன் என்றான்
பாலனைய மொழிமாதே நல்லயோகம்
பாடிவரு கின்றதுன்றன் வீடுதேடி
சோலையுறு கிளிமொழியே சுகமேசேரும்
சொன்னேன்யான் அம்மன்னன் பூந்தேர் ஏறி
மாலையே வந்திடுவான் வார்த்தை மாறன்
வயங்கிடுக நெடுங்காலம் வாழ்க மாதே.

நூல் வாழ்த்து
21. கொற்றைமா நகரதிபன் குமார ரத்னக்
கோமான்தான் சொன்னபடி அந்தநாளில்
நற்றவத்தோர் கவிவாணர் நன்கு போற்ற
நலமிகுபூந் தேரேற நலமோடந்த
விற்றிருவாம் மோகினிமான் தன்னைத் தேடி
மிகுந்தமகிழ் வோடவள்தன் மார்பம் சேர்ந்தான்
வெற்றி மிகும் அவன் புகழ்தான் வாழ்க வாழ்க
மிகப்பொழிக மழை உலகம்மிளிர்க நன்றே.


Copyright © 2010 - 2017 konguvenadar.org