Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொங்கு வேணாடர் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
சரமகவி அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்<< >>கருப்பராய சுவாமிபேரில் சத்துரு சங்கார மாலை
அருள்மிகு. இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில் கும்பாபிடேக நிகழ்ச்சிப் பாடல்

பதினாறடி இரட்டையாசிரிய விருத்தம்

பூமிமெச் சிடுமினிய பொன்கொங்கு மண்டலப்
புனிததென் கரைநாடு சூழ்
பொற்புவளர் சங்கரண் டாம்பாளை யத்தரசு
புரிமகிபர் வேணுடர் சீர்
புனைபெரிய குலவேளிர் குலதெய்வ மாகியே
போற்றுபச் சிமவா கினி
பொங்குமான் பொருனைமணி பொன்கொழி கரைப்பாங்கர்
புங்கமிகு கோயில் கொண்ட
சாமியருள் ரத்னமூர்த்திக் கடவுள் ஆலயம்
சந்நிதி விநாயக ரருட்
சத்திசெல் லாண்டியம் மன்கன்னி மாருடன்
சார்ந்தசெல் லம்ம னங்கு
தங்குபுகழ் நல்லம்மன் ஊரம்மன் வேணுடர்
தார்புனை கருப்ப ராயன்
தளிவிமா னங்கள்மண மண்டப முதற்பரவு
தழைதிருப் பணிகள் செய்து
ஆமிதற் கிசைகாணி யாளர்சுற் றங்குலவ
அதிபொருட் செலவில் விபவ
ஆண்டுமிது னத்திங்கள் பதின்மூன்று திகதிதனில்
ஆர்ந்தகும் பாபிடே கம்
அம்புவி மதித்திடச் செய்து மண் டலபூசை
யதுநிறைவு பெறுநாளினில்
ஆட்சியுயர் வேணுடர் மாட்சிவர லாறுநனி
யருள்வி றலி விடுதூ துடன்
மீமிசைப் புகழோங்கு கொலுவிலா சத்தமிழ்
மிளிர்முருக ராற்றுப் படை
மிகுகாணி யின்பாடல் முதலவச் சிட்டுதவு
விதரண குமார ரத்ன
வேணுட நிருபரிவர் அப்பரமர் தென்னீசர்
மேன்மைரத் தினமூர்த்தி யின்
விலகாத வருள்கூடி நலமான் புகழ்சூடி
விழைவாக நனிவாழ்க வே

அருள்மிகு இரத்தினமூர்த்தி சுவாமி துதி

விநாயகர் காப்பு

உற்ற கருணை உதவுரத்ன மூர்த்திமிசை
நற்றமிழின் பாடல் நனிபாட-விற்பனங்கூர்
உம்பர் முனிவர்பணி ஓங்காரத் துட்பொருளாம்
தும்பிமுகன் பாதம் துணை

இரட்டையாசிரிய விருத்தம்

சீர்பெற்ற சங்கரண் டாம்பா ளையத்தில்வளர்
திருவா லயத்தெய்வ மே
செல்வவே ணுடர்தம் பெரியகுல மூர்த்தியே
தென்கரையின் வளநாட னே
பேர்பெற்ற பொன்முடி யிலங்கிடச் சூடியருள்
பெருகுமற் புதநாத னே
பேணிய சிவாயத் தலத்தினின் றிங்குவரு
பிரசன்ன அருளாள னே
ஏர்பெற்ற குவளைமலர் மாலிகா பரணனே
என்றும்ந ன்றுதவுமுத லே
இயல்வீர மோங்கும் கருப்பண்ண ராயணுடன்
இசைவுபெற நின்ற பதியே
தார்பெற்ற வேணுடர் வேளிர்குல மக்கள்குடி
தழைவுபெற வருள்புரிகுவாய்
தருமவிற் பனமூர்த்தி விருதுபொற் பருள்மூர்த்தி
சரதரத் தினமூர்த்தி யே

பண்புநல மதிமேன்மை கல்விசௌ பாக்கியம்
பாங்குநிறை ஆயுள் கீர்த்தி
பரவுதா னந்தரும மன்புமிகு செல்வமிசை
பக்தியெழில் வாய்மை வெற்றி
திண்புநல மனைமக்கள் சுற்றமது சூழ்வாழ்வு
சீர்மைதந் தெந்தநா ளும்
செந்தமிழ்ப் புலவர்புனை கவிமாலை குவளையின்
திருமாலை யணிமார்ப் னே

எண்புனித ரத்தின கிரீடபொன் னுபரண
வெழில்மிகுங் கட்டழக னே
இனியகங் காகுலத் திலகனே பெரியகுல
ஏந்தலே வாய்ந்த வண்மைத்
தண்கருணை வேணுடர் வேளிர்குல மக்கள்குடி
தழைவுபெற வருள்புரிகுவாய்
தருமவிற் பனமூர்த்தி விருதுபொற் பருள்மூர்த்தி
சரதரத் தினமூர்த்தி யே

அப்பரமர் பெரியநர யகியன்னை தென்னீசர்
அகிலாண்ட வல்லி யம்மை
அருள்பெருங் கருணைநல மெந்நாளும் விலகாத
அரசுபுரி வேணுடர் கொள்
ஒப்பிலாச் சடையபர மேசுரப் பண்டிதர்சொல்
உயர்வுபெறு வேணுடர் சீர்
உற்றபஞ் சாக்கர மகாமந்த்ர செபதபத்
துறுதிநிறை வேணுடர் முன்
செப்புபூ தப்பாண்டி யனைவென்ற வேணுடர்
செட்டிவே ணுடர்பூந்த தேர்
செல்வமிகு பொன்னூஞ்சல் வேணுடர் தென்கரைத்
திருநாட்டு வேணுட ராம்
தப்பிலா வேணுடர் வேளிர்குல மக்கள்குடி
தழைவுபெற வருள்புரிகு லாய்
தருமவிற் பனமூர்த்தி விருதுபொற் பருள்மூர்த்தி
சரதரத் தினமூர்த்தி யே

சொல்லார்ந்த நல்லபுகழ் தோய்தரும தானமிசை
தூயநெறி வாழ்வோங் கவும்
தொன்மைநன் னீதிமுறை மாதமும் மாரிபொழி
துங்கம் வளர்ந்தோங் கவும்
வல்லாண்மை தருவெற்றி வாய்மைதெய் வீகநெறி
வளர்மேன்மை யினிதோங்க வும்
மனுதரும் மிசையுமர சாட்சிபுரி செங்கோன்மை
வையகந் தனிலோங் கவும்
நல்லா தரங்குலவு நின்பாத சேவைபுரி
நற்குடி தழைத்தோங்க வும்
நவில்தமிழ்க் கவிமாலை நாட்டுசொற் கவிவாணர்
நாளும் செழித்தோங்க வும்
சல்லாப வேணுடர் வேளிகுர்ல மக்கள்குடி
தழையவும் தண்ணரு ளருள்
தருமவிற் பனமூர்த்தி விருதுபொற் பருள் மூர்த்தி
சரதரத் தினமூர்த்தி யே

பரவுபொன் கொங்கிலுயர் சங்கரன் டாம்பா
ளையத்திலான் பொருனைநதி நீர்
பயில்தரள மணியலை கொழிக்குங் கரைப்பாங்கர்
பண்புறுங் கோயில் கொண்டு
விரவுநின் னுலயமு மிகுகருப் பணராயன்
விபுதகண பதிகன்னி மார்
மிளிரத்த னூரம்மை செல்லாண்டி யம்மைபுகழ்
வேணுடர் செல்லம்மை மெய்
வரதநல் லம்மைவளர் கோபுர விமானதளம்
மண்டபம் பலசெய் மகிபன்
மதிகோட்டை மாரியம் மன்பெரிய நாச்சியருள்
மாண்புயர் குமார ரத்ன
தரணிபதி வேணுடர் வேளிர்குல மக்கள்குடி
தழைவுபெற றேங்கவருள்கூர்
தருமரத் தினமூர்த்தி விருதுபொற் பருள்மூர்த்தி
சரதரத் தின்மூர்த்தி யே

அருள்மிகு கருப்பராய சுவாமி துதி

கொட்டமிடு மருவலர்கள் கற்கோட்டை தூள்படக்
குலவுதள மேசெலுத் திக்
கூர்பூத பாண்டியனை மூன்றுமுறை வென்றதிக
கொற்றமது கொண்டிசைந்து
வட்டமிடு பரிநகுல வேணுடர் குலதெய்வ
மகிமைரத் தினமூர்த்தி யின்
மாண்புபெறு மந்திரித் தலைமைபூண் டொன்னலர்கள்
வழிவழி குலைந்தோ டிடத்
திட்டமிடு கெம்பீர செயவிசய மார்த்தாண்ட
தெய்வக் கருப்பரா யா
செப்பமிகு நினதருட் பொற்பதம் வணங்கினோம்
திட்பமினி தருள்செயல் முறைச்
சட்டமிடு புகழ்பெற்று வளர்கொங்கு மண்டலந்
தன்னிலர சாட்சி நாட்டும்
சத்ரபதி வேணுடர் பெரியகுல வேளிர்துதி
சதுரங்க தளநிருபனே

கட்டாரி கத்தியோடு கணை அம்பு றத்தூணி
கருதுவில் லுடைவாளு டன்
காங்குகச் சைக்கார னுகிவெடி தடிகொளுங்
கனகக் கருப்ப ராயா
ஒட்டார்கள் பகைகள்குடி கெட்டோட வீணர்வம்
பொவ்வாத தீமை விலக
உற்றவே ணுடர்சொல் சத்ருசங் காரகவி
உசிதனே காப்பாற்று வாய்
மட்டார் மலர்க்குழல் மடந்தையர்கள் பல்லாண்டு
வளருதென் கரைநாட் டினில்
மாபலா வாழையொடு தாழைவளர் பொழில்கழனி
வளமோங்கு பொருனை நதிநீர்
தட்டாத செல்வமலி மாடகூ டங்களுயர்
சங்கரண் டாம்பா ளையச்
சத்ரபதி வேணுடர் பெரியகுல வேளிர்துதி
சதுரங்க தளநிருபனே

வாங்குகைச் சூரிவாள் வல்லயங் கேடயம்
வல்லசமு தாடுதண் டம்
மருவுவில் லம்புகைக் கொண்டுவரு பகைவர்குடி
மாளவே சங்கரிக் கும்
ஓங்குவெற் றிக்கருப் பணராய னென்னவே
உலகுபுகழ் ரத்னமூர்த் தி
உன்னதச் சன்னிதியி லுற்றகன தீரனே
ஒப்பிலா வதிவீர னே
ஈங்கெமை எதிர்த்துவரு பகைபில்லி சூனியம்
ஏவல் கடப்பு பிணிநோய்
எப்போது மெம்மிடத் தணுகாத வண்ணம் நீ
இனிதுவந் தாதரிப் பாய்
தாங்குமுகி லோங்குபொழில் சூழ்கொங்கு தென்கரைத்
தனிநாட்டி னதிபர் கொற்றைச்
சத்ரபதி வேணுடர் பெரியகுல வேளிர்துதி
சதுரங்க தளநிருபனே

மதிபாளை யப்பட்ட வர்த்தனர்கள் போற்றுமுயர்
மாண்புபெற் றிடுகொங்கர் கோன்
மன்னுமப் பரமர்பத மறவாத கொற்றைநகர்
மகபதி தராதலத் தோர்
துதிபெரிய பெரியண்ண வேணுடர் அன்புவளர்
துணைவனென வந்த தோன்றல்
துரைமகிபர் குப்புசா மிப்புரவ லர்க்கினிய
சுதனென்ன வந்த பூமன்
நிதிபெறு குமாரரத் தினபுனித வேணுடர்
நிதிதனத பதிக ணேச
நிருபனைத் தம்பியென உற்றமகி பாலனிசை
நேயமொடு வேண்டு நலமெத்
ததியினு மிவர்க்குதவு ரத்னமூர்த் திக்கடவுள்
தளபதி கருப்ப ராயா
சத்ரபதி வேணுடர் பெரியகுல வேளிர்துதி
சதுரங்க தளநிருபனே

வாழ்த்து

வாழ்கரத்ன மூர்த்தி வளர்கோயில் வேணுடர்
வாழ்க வேளாளர் மரபுகொங்கு வாழ்கமழை
வாழ்கசான் றோர்கள் மகிதலத்தில் செங்கோன்மை
வாழ்கதமிழ் வாழ்க மகிழ்ந்து

இயற்றியவர்
புலவர் இல. பழனிச்சாமிக கவுண்டர்
கோட்டைத்துறை, பழனி வட்டம்Copyright © 2010 - 2017 konguvenadar.org