Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொங்கு வேணாடர் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
>>சரமகவி அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
கடவுள் வாழ்த்து

புலவர் இல. பழநிச்சாமிக் கவுண்டர்
பதிப்பாசிரியர்

இரத்தின விநாயகர் துதி

சீர்போற்றும் கொங்கிலுயர் தென்கரைநன் னாட்டில்வளர்
செல்வம் ஓங்கிப்
பார்போற்றும் சங்கரண்டாம் பாளையத்தின் பெரியகுல
பதிவே ணுடர்
நேர்போற்றும் குலதெய்வ நேமரத்ன மூர்த்திதளி
நிமல நாதன்
ஏர்போற்றும் வேழமுகத் தெந்தைபதம் சிந்தையில்வைத்
தினிது வாழ்வாம்

இரத்தின மூர்த்தி சுவாமி துதி

முத்தினணி முடிவேந்தர் மூவர்மகிழ் வேணுடர்
முதன்மை வாய்ந்த
சித்தினருள் வடிவாகித் திகழ்பெரிய குலகாணித்
தெய்வ மாகி
எத்தினமும் நல்லதின மெனவருட்சீர் இனிதுநல்கி
இசைந்து காக்கும்
ரத்தினமூர்த் திக்கடவுள் நளினமலர்ப் பதம்பரவி
நாளும் வாழ்வாம்

செல்லாண்டியம்மன், ஊரம்மன், செல்லம்மன் நல்லம்மன்
கன்னிமார் வேணுடர் துதி

சீரம்ம னுனவொரு செல்லாண்டி யம்மனிசை
கிறப்புப் பெற்ற
ஊரம்ம னிவர்களுடன் உயர்வுபெறு செல்லம்மன்
உரிமை வாய்ந்த
பேரம்ம னெனவுற்ற பெருமைசேர் நல்லம்மன்
பேசுங் கன்னி
மாரம்மன் வேணுட மன்னர்பத மலர்பணிந்து
வாழ்வோம் நன்றே

கருப்பராய சுவாமி துதி

கலி விருத்தம்

திருப்ப ராவிய செல்வவே ணுடர்தம்
விருப்ப ராயமர் வீர விதரணன்
ஒருப்ப ராயவொன் னுர்பகை செற்றிடும்
கருப்ப ராயன் கழலிணை போற்றுவாம்




Copyright © 2010 - 2017 konguvenadar.org