Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொங்கு வேணாடர் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
அருள்மிகு. இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில் கும்பாபிடேக நிகழ்ச்சிப் பாடல்<< >>ஸ்ரீ வேணுடர் பூந்தேரில் வரும் பவனி
கருப்பராய சுவாமிபேரில் சத்துரு சங்கார மாலை

சங்கரண்டாம்பாளையத்தில் எழுந்தருளியிருக்கும்
இரத்தினமூர்த்தி சுவாமி சேனைத்தளபதி


கருப்பராய சுவாமிபேரில் சத்துரு சங்கார மாலை

விநாயகர் வணக்கம்

முத்தமிழ்சேர் கொற்றைநகர் மூர்த்தி கருப்பணன்மேல்
சத்துருசங் காரத்தமிழுக்கு – சித்திதரும்
கும்பமுனிக் கன்றுபொருள் கூறுகந்தன் முன்னுதித்த
கம்பமதத் தந்திமுகன் காப்பு

சீர்கொண்ட தேன்கரை நாட்டினில் மேவுஞ் செழிக்குங்கொற்றை
ஏர்கொண்ட ரத்தின தேவன்றன் சேனைக் கிறைவனென
பேர்கொண்ட ராஜவுத் தாரவிஸ் தாரப்பிர தானியெனுங்
கார்கொண்ட மேனி கருப்பண ராயன் கழல்துணையே

பொன்னு டரசருந் தேவரும் போற்றுநின் பொற்பதத்தை
யென்னுவிற் பாட வரமருள் வாயிந்த மானிலத்தில்
பன்னுக பூஷணன் தென்னீசர் வாழ்கொற்றை யம்பதிக்கு
மன்னு கருப்பண ராயா துரந்தர மாதுங்கனே

நீர்கொண்ட கங்கைக் குலாதிபன் தென்கொற்றை நீள்குவளைத்
தார்கொண்ட ரத்தின தேவன்றன் சேனைத் தளபதியாய்
ஏர்கொண்ட சூர ரணகொலு வுல்லாச வேந்திரனே
பேர்கொண்ட தீரக் கருப்பண வீரப் பிரபலனே

இடித்தொனி யார்த்திடும் வான்முக டோங்கி யிலகுமுடி
யடித்தலஞ் சேடன் முடிபட வூணி யழ குசெம்பொன்
கொடிப்பட ராகக் குவடெனு மாண்புயக் கொற்றவனே
படிக்கும் தமிழ்கேட் டருள்வாய் கருப்பண் பாக்கியனே

குருப்பா தகஞ்செய்யுஞ் சண்டாள னீன குலாமனிங்கு
நெருப் பாரும் பஞ்சா யழிந்திடச் செய்குவாய் நீள்நிலத்தில்
விருப்பாக என்னுளு முன்றனை வேண்டி விரும்பியன்புத்
திருப்பாத தஞ்சம் மறவேன் கருப்பண தேசிகனே

காங்குரு மாலு மிடுப்பினிற் கட்டிய கச்சையுடன்
வாங்குகைச் சூரி வளைதடி கொண்டுஎன் மாற்றலரை
ஓங்கி யடித்துயிர் வாங்கி எமதர்ம னூர்க்கனுப்பு
பாங்குடன் கொற்றை நகர்வாழ் கருப்பண பாக்கியனே

வங்காளர் சித்தர் மராடர் கெவுடர்கள் மச்சர்குந்தர்
கொங்கீழ ரெட்டியர் கேகயத் தோர்பகர் கோசலரும்
எங்கே யிருக்கினும் வந்தேயுன் பாதத்தை யேற்றி நிற்கும்
சிங்கார மான கொலுவா கருப்பண தேசிகனே

காணு விடத்திலுங் கண்டிடும் போதுங் கருதிநம்மைப்
பேணு துரைக்கின்ற வஞ்சக நெஞ்சரைப் பேருலகில்
வாணுத் தடிகொண் டடித்தூன் உடலை வதைத்துயிரை
சேணுடு சென்றிடச் செய்வாய் கருப்பண தேசிகனே

எல்லென்று மூடாக் கமலமென் பாதத்தை யேற்றிநிற்கும்
சொல்லென்றும் நெஞ்சினில் யான்மற வேன்நின் துணைக்கரத்தால்
வில்லொன் றெடுத்துக் கணையொன்று பூட்டியென் வெம்பகையை
கொல்லென்று சொல்லித் துதித்தேன் கருப்பண கொற்றவனே

சூராதி சூரா துரந்தர தீரா சுமுகமெனும்
வீராதி வீரா ரணகொலு வாவெந்தன் வெம்பகையைக்
கூராக வெட்டி எமதர்ம னூர்க்குக் கொடுத்தனுப்பு
யீராறு திங்களில் ஐயா கருப்பண வேந்திரனே.

பெலாவெடு புன்னை வனஞ்சூழுங் கொற்றைப் பெருநகரில்
சலாமிடச் பெற்ற ரணகொலு வாவெந்தன் சத்துருவை
விலாவழி தன்னிற் புகுந்தே உடலை மிகக்கிழித்துச்
சலாமிடச் செய்வாய் கருப்பண் ராயனும் தாட்டிகனே

நஞ்சுமை நாக மணிமுடி மீதணி ஞானமூர்த்தி
நெஞ்சினி லுன்பாத நான்மற வேன்எந்தன் நீள்பகையை
வஞ்சின மீட்டி உடலூ டுருவ வதைத் தழிப்பாய்
மஞ்செனக் கொற்றை நகர்வாழ் கருப்பண மாதுங்கனே

பாக்கியந் தந்தருள் செய்வாய் தமிழ்க்கவி பாடுதற்கு
வாக்கியந் தந்தே யெனைரட்சி யையாவென் மாற்றலரைக்
சீக்கிரமாசு வளைதடி கொண்டு சிரமறுத்துத்
தூக்கிடச் செய்வாய் கருப்பண ராய துரைச்சிங்கமே

அன்பாக உன்பாதந் தன்னையே போற்றும் அடியவர்கள்
முன்பாக நின்றே யெதிர்க்கின்ற சத்துரு வின்முடியை
துன்பாக வெட்டி உடல்கிழித் தூன்தனைத் தூளிதமாய்
யென்பா னதைத்துவைப் பாய்நீ கருப்பண வேந்திரனே

தண்டா மரையென்னு முன்னிட பாதத்தை தஞ்சமென்றே
கொண்டாடிப் போற்றுதல் யான் மறவேன் யெந்தன் கூர்பகையைத்
தெண்டா யுதங்கொண்டு மெய்சோ ரடித்துச் சிரமதனைத்
துண்டாக வெட்டி யெரிவாய் கருப்பண துங்கவனே

வீர பராக்கிரம தீர கெம்பீர விகிர்தரண
சூர சிலாக்கிய ராஜமன் னுநின் துணைப்பதத்தை
வாரம்வைத் தேதினம் போற்றிசெய் யன்பர்தன் மாற்றலர்மெய்
சோர வடிப்பாய் கருப்பண ராய சுதந்திரனே

பாங்காக வுந்த னரவிந்த பாதத்தைப் பண்புடனே
நீங்காமல் நித்தந் தொழுகின்ற அன்பர்தன் நீள் பகையை
ஆங்காரங் கொண்டு உடைவா ளுருவி அலரவெட்டித்
தேங்காது மாய்க்க வருவாய் கருப்பண தேசிகனே

அலைகொண்ட சத்தக் கடலது சூழு மவனிதனில்
நிலைகொண்ட கொற்றை நகர்க்கதிபா யெந்த னீள்பகையைத்
தலைதுண்ட மாக்கு உதிரமாம் நீரில் தசையருந்திக்
கொலைகொண்ட வேலினை யேந்துங் கருப்பணக் கொற்றவனே

வார்வண் டமிழி லுனைத்துதிக் கன்பர்தன் மாற்றலரை
கூர்கொண் டறுத்து குடல்கிழித் தூணென்பு மூளைதன்னைப்
பார்கொண்ட ரைத்துப் பசாசுக்குப் பூதப்ப சிக்களிப்பாய்
தார்கொண்ட வண்டப் படைசூழ் கருப்பண்ண தாட்டீகனே


இயற்றியவர்
மகா-எ-ஸ்ரீ கோயமுத்தூர் எஜமானார்
பெரியண்ண வேணுடுடையார்Copyright © 2010 - 2017 konguvenadar.org