Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொங்கு வேணாடர் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
கடவுள் வாழ்த்து<< >>அருள்மிகு. இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில் கும்பாபிடேக நிகழ்ச்சிப் பாடல்
சரமகவி அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர்
அமரர் ஸ்ரீமான் பெரியண்ண வேணுடர் அவர்களின்

சரமகவி
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

திருவளரு மான்பொருந்த நதிக்கரையில் நலம்நிறைந்து திகழ்நாலாறு பெருவளநாட் டினிற்பிறங்கும் தென்கரைநாட் டரசுரிமை பெற்ற சிங்கம் அருள்வளரு மப்பரமர் பாததுதி மறவாத அண்ணல் எங்கள்
திருமகுட வேணுடர் பெறும்பெருவீட் டின்பநிலை செப்பற் பாற்றே

மறைகண்ட பெருஞ்சோழன் காவிரிநன் நதிநாடன் மாவல் வேந்தன்
பிறைகண்ட முடிவேணிப் பெருமானின் துதிமறவாப் பெரியோ னுளும் தறைகண்ட வமைச்சர்குழாத் தலைவனென வந்தவழி தழைத்த தோன்றல்
திறைகண்ட செட்டிவே ணுடர்குலச் செம்மலெங்கள் சிங்கந் தானே

மேகம்போற் கொடையுடைய வேந்தர் சென்னி விறற்சேரன் வேம்பின் றரோன்
வாகம்பெற் றிடுமிவரை மதியாமற் பெரும்வெற்றி வாய்மை கண்ட
வேகம்ப வாணனெனும் பெருக்காளன் றனைநிகரா மெங்கள் தோன்றல்
மாகம்ப னடிமறவா மதியரசைக் காண்பதென்றே மகிமே லம்மா

அடுத்தவரை யாதரித்து மடையலரைப் பொடிபடுத்தி யழித்துமென்றும்
எடுத்ததெல்லாம் வெற்றிகண்டு மிறைவனடி மறவாத இறும்பூ தெய்தி
நடுத்தவற மொழியுடைய நற்சனகன் றனைநிகர்த்த நல்வேணுடர்
தொடுத்தழியாப் புகழ்படைத்த தோன்றலைநாம் காண்பதென்றே சொல்
வல்லோரே
கரவருடந் துலாத்திங்கள் கார்த்திகைநாள் தனிற்குமரன் கதிர்வேற் கந்தன்
அரவணையெம் மான்மருக னுலையச்சீ்ர் நன்னுளிலமரர் போற்றிப்
பரவுமுரு கப்பெருமான் பாதமலர் நீழல்சென்ற பருணி தத்தாய்
கரவர்செய்த சூழ்நிலைவஞ் சனைவழியால் வந்தவிதி கணிக்க லாமோ

செப்புபுகழ் நாவலர்க்கும் தேர்ந்தபுவி மாந்தருக்கும் சிறப்பு நல்கும்
குப்புசா மிப்பெரியோ னும்கனிட்டன் பெருமிதமும் கூர்ந்த சீர்த்தி
நற்புனித வேள்சேனா பதிமருகன் வாழ்க்கை வெற்றிநலமுங் கண்டு
இப்புவியி லெழில்வளர்க்க எண்ணுமற் சென்றதவும் இசைவதாமோ

வார்படைத்த தனமடவார் மனங்குலையப் பேரரசர் மயங்கச் சூழ்ந்த
கார்படைத்த மனத்தவருங் கசிந்தழுக மற்றுமுளார் கலக்க மெய்தத்
தார்படைத்த புயவாகைத் தலைவர்மனந் தடுமாறத் தரணி யாளு
மேர்படைத்த வேளாள ரேங்கவிட்டுச் சென்றனைநீ யிதுநன் றம்மா!

திக்கனைத்தும் புகழ்படைத்த செழுங்குவளைத் திருமார்பன் சிறந்த வீர
விக்கிரமா தித்தனைநேர் வெற்றிகண்ட வேணுட்டு விஜய சிங்கம்
சக்கரத்தான் மருகனெங்கள் வேற்குமரன் துதிமறவாத் தரும சீலன்
அக்கிரமந் தனையடக்கும் வாளரசு சென்றவிட மறியோமம்மா

சொல்லனைத்தும் வெற்றிபெறத் துட்டர்வலி கெட்டுவிழத் துகடீர் வாகை
வல்லனைத்தும் நனிவிளங்க மங்காத பெருங்கீர்த்தி வளர நாளும்
புல்லர்குலம் பொடியாகப் புவியில்நல்லோர் சீர்மைபெறப் பொருந்தார்வீய
நல்லிசைக ளினிதோங்க வளர்த்தவருன் போலுளரோ நரேந்த்ரகோவே.

கொங்குவே ளாளகுலக் குணவிளக்கே பகைவருக்கோர் கொடிய கூற்றே
யெங்குமென்று மெப்பொழுது மழியாத பெருஞ்செல்வ மீட்டுங் கோவே
திங்கள்முடிப் பரமர்துதி யைந்தெழுந்து மறவாத தெய்வச் சைவ
சங்கரண்டாம் பாளையத்தின் சரபமுனைக் காண்பதென்றே தமிழ்க் கோமானே

தசாங்கம்வகுத் தராசாண்ட சைவவே ணுடுடைய தலைவா நான்கு
திசாங்கமெலாம் வெற்றிகண்டு புகழ்பெருக்கும் செங்கோலாய் செல்வம் பூமி
கசாங்கமுதல் நால்வகைச்சே னைக்கரசே யுன்புகழைக் கருதுவோர்க்கே
புசாங்கவலி யோங்குமெனிற் பெருமிதத்தோ யுனதுதிறம் புகல லாமோ

நேரிசை வெண்பா
கொற்றைநக ராளும் குலவரசு வாழிபுகழ்
வெற்றிவே ணுடர் மிகவாழி – நற்றமிழோர்
வாழிதமிழ் வாழியிந்த மானிலமும் சீரறமும்
வாழியெந்த நாளும் வளர்ந்து

முற்றுப் பெற்றது.
1951 கர வருடம் இயற்றிவர்
ஐப்பசி மாதம் இல பழனிச்சாமிக் கவுண்டர்
கோட்டைத்துறை, பழனி வட்டம்
Copyright © 2010 - 2017 konguvenadar.org