Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » கொங்கு வேணாடர் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
கருப்பராய சுவாமிபேரில் சத்துரு சங்கார மாலை<< >>இரத பந்தன நேரிசை வெண்பா
ஸ்ரீ வேணுடர் பூந்தேரில் வரும் பவனி

பல்லவி

சாரியிதிலே வாரார் – எங்கள்
தருமனெனுங் குமார ரத்னவேணுடதுரை (சாரியிதிலே)

அநுபல்லவி

சேரனுஞ் சோழனும் பாண்டியன்மூவ ரரசர்கள்
செழிக்குங் கொங்குதேசத் தைப்பார்க்க வருகையில்
நேராகவே காணி நாடு மன்றந்தனில்
நிச்சயமுடன் நாட்டார் வந்து சந்திப்புக்காண
தோரணக் கடாய் வல்லையென்று சோழராசன்
சொல்லியே கோபிக்க வேணுட ராசேந்த்ரன்
பூரணமாகவே புத்ரன் தனையழைத்து
பிள்ளையைத் திட்டிக்கடா யென்று தான்வெட்ட
பிற்பாடு கடாய்வந்து வெட்டினதிடங் கண்டு
தாராள மாகவே சோழன் மனமகிழ்ந்து
தரணியில் உனக்கிணை ராசன் இல்லையென்று
சீராக வேபுஷ்ப ரதமும்பொன் னூஞ்சலும்
சிறந்தபூம் பந்தரும் முற்பேறும் பிற்பேறும்
ஏராள மாகவே பிள்ளை வேணுட ரென்று
இனிமையுடனே கொற்றை நகர்தனில் முடிசூட்டி சாரியிதிலே

மத்தாள கைத்தாள லவண்டை பூரிகையுடன்
மல்லாரி யெக்காள நாகசின்னந்தவில்
சத்த மிகுந்த தொனி வெங்கலத் திடுமவோசை
தரணியில் கேட்கவே மன்னர் வந்து சூடி
சுத்த வீரியனெனும் ரத்னவே ணுடதுரை
துரகத சதுரங்கம் தினந்தினம் ஆடவே (சாரியிதிலே)

காரண மாகவே கவுரிகள் பரிமாற
கதிக்கு மெட்டுப் பாவாடை வெண்சா மரைகள்வீச
பாரினில் முழக்கமாய்ப் பாவலர் கொண்டாட
பக்ஷமுடனே கட்யக் காரன் கட்டியங்கூற
கூரியமுடனே வாலி நடனகல் யாணியேறிக்
குமண னெனுங்குமார ரத்ன வேணுடதுரை சாரியிதிலே




Copyright © 2010 - 2017 konguvenadar.org