Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
>>பெரியநாயகியம்மன் திரு ஊஞ்சல்
கொற்றை ஆதீனப் பழம் பாடல் - பெரியநாயகி அம்மன் கீர்த்தனை

நாராயணீ லக்ஷிமி பிரஹதீஸ்வரி பெரியநாயகி
நாராயணீ லக்ஷிமி

அநுபல்லவி
புன்னைவனக்காரி புஷ்ப அலங்காரி
ஸ்வர்னகிரியானைப் பெற்ற அன்னதான லக்ஷிமி (நாராயணீ)

சரணம்
சடைய பரமேஸ்வர பண்டிதகுரு சிவ
சந்தான பாலருக்கு சிந்தையில் குடியிரம்மா (நாராயணீ)
கொற்றை நகராளும் குமாரரத்தின வேணுடர்
சித்தத்தில் குடியிருந்து செங்கோல் செலுத்தும்மா (நாயணீ)

இயற்றியவர்: லக்ஷ்மண பாரதியார், மடவளாகம்

அப்பரமர் பங்கிலுறை பெரியநா யகித்தாயே
அன்பு கூர்ந்து
எப்பொழுதும் சடையபர மேசுரபண் டிதருடனே
எழிலார் கொற்றைச்
சற்புனித குமாரரத்ன வேணுடர் போற்றுமொரு
தருமச் செல்வி
விற்பனியே உனதுசரண் போற்றி நின்றோம் கருணையருள்
விழைந்து நன்றே

அப்பரமேயர் – யமககவி துதி
அப்பர மேயகண் ணுளுமை பங்கர்சம் பந்தருடன்
அப்பர மேயவன் றெண்டர் மணிவா சகர்தொழுஞ்சீர்
அப்பர மேயவ ரானசர் வேசுரர் ஆர்ந்தகொற்றை
அப்பர மேயர் அடிதொழு வார்க்கில்லை அல்லல்களே

பதப்பிரிவு
1வது வரி அப்பு அரம் ஏய் அ கண்ணுள்
அப்பு அரம் சமான மான கண்களை உடையவள்
2வது வரி அப்பர், அம் மேய வன்தொண்டர்
அப்பர் சுவாமிகள், அழகு பொருந்திய சுந்தரர்
3வது வரி அ பரமே அவர் ஆன
அந்தப் பரம் பொருளே அவரான
4வது வரி அப்பரமேயர் – அப்பரமேஸ்வரர்

இயற்றியவர் இல. பழனிச்சாமிக் கவுண்டர், பதிப்பாசிரியர்




Copyright © 2010 - 2017 konguvenadar.org