Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பெரியநாயகியம்மன் திரு ஊஞ்சல்<< >>சங்கரண்டாம்பாளையம் அரண்மனை - திருவாதிரைக் கலியாண நடைமுறை - பொன்னூஞ்சல்
நூன்முகம் - பெரியநாயகியம்மன் திருவூஞ்சல்

பெரியநாயகியம்மன் திருவூஞ்சல் என்ற இத்திருநூல், கோவை மாவட்டம், தாராபுர வட்டம், சங்கரண்டாம்பாளையத்துக்கு அண்மையில் உள்ள மறவர்பாளையத்தில் கோவில் கொண்டுள்ள அப்பரமேஸ்வரர் பாகம்பிரியா நாயகியம்மன் மீது பாடப்பெற்றது. இது பழங்காலமுதல் வழங்கி வரும் தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களைச் சார்ந்ததொரு பிரபந்தம்.

இந்தப் பனுவல் இங்கு ஆலய விழா நாட்களில் பெரியநாயகியம்மன்

சந்நதியில் ஓதுவார்களாலும் சங்கராண்டாம்பாளையத்தில், பட்டக்காரப் வேணுடுடையார் அவர்களது கொலுமன்றத்தில் பெரியகுலக் கன்னியர்களுக்காக மார்கழி திருவாதிரை நாளில் கொண்டாடும் பொன்னூஞ்சல் விழாவின்போது அந்த ஆதீனப் புலவர்களாலும் பாடப்பெறுஞ் சிறப்புக் குரியதாகும்.

இப்பிரபந்தம் செவிவழியாகவே கேட்டுப் பாடப்பெற்று வந்த பழம் பெருமைக்குரியது. ஆதலால் இது இன்னமும் நெடுங்காலந் துலங்கிவர வேண்டும் என்ற ஆர்வத்தால் இதனை அச்சிட்டுப் போற்ற எண்ணிய எங்கள் ஆதீனகர்த்தர், உயர்திரு, S.K.குமாரரத்ன வேணுடுடையார் அவர்கள் தங்கள் குலதெய்வமான அருள்மிகு இரத்தினமூர்த்தி திருக்கோயில் கும்பாபிடேக மலராக மண்டல பூசை நாளில், விறலிவிடு தூது, கொலு விலாசம், குருபரன் ஆற்றுப்படை, காணிப்பாடல்களுடன் இதனை வெளியிட்டுப் போற்றுகின்றார்கள். இப்பெருமகனரது பண்பு வாழ்க எனவும் இவர் நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்றுப் புவியில் பொலிக எனவும் வாழ்த்தி இதனை இங்கு நிறைவு செய்கிறேன்.

இங்ஙனம்
முத்தமிழ்மணி, வித்துவான்
க. பழனிச்சாமிப் புலவர்
ஆதீனப் புலவர்
சங்கரண்டாம்பாளையம்



Copyright © 2010 - 2017 konguvenadar.org