Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
கொற்றை ஆதீனப் பழம் பாடல் - பெரியநாயகி அம்மன் கீர்த்தனை<< >>நூன்முகம் - பெரியநாயகியம்மன் திருவூஞ்சல்
பெரியநாயகியம்மன் திரு ஊஞ்சல்

காப்பு

நாரணன் சகோதரியை நானிலத்தி லேயதிக
காரணி யாம்பெரிய நாயகிமேல் – தாரணியில்
ஊஞ்சலெனும் நூலிதனை உண்மையுடன் நானுரைக்க
வாஞ்சையுடன் கற்பகமே வாழ்த்து.

சீரான வயிரத்தால் கால்கள் நாட்டி
சிறந்த வயிடூரியத்தால் வளைகள் பூட்டி
நேரான பவளத்தால் பலகை சேர்த்து
நித்திலத்தால் பந்தலிட்டு நிழலதாக
ஏரான மாணிக்கம் புருட ராகம்
இலங்குபசும் பொன்னினுல் வடங்கள்தூக்கி
பேரான அப்பரமர் பங்கில் வாழும்
பெரியநா யகித்தாயே ஆடீரூஞ்சல்

சந்திரரும் சூரியரும் வடந்தொட் டாட்டத்
தவமுனிவ ரெல்லோரும் வடந்தொட் டாட்ட
இந்திரரும் தேவர்களும் வடந் தொட் டாட்ட
இனியமறை வேதியரும் வடந்தொட் டாட்ட
செந்திருவாழ் நெடுமாலும் வடந்தொட் டாட்ட
திசைமுகனும் செவ்வேளும் வடந்தொட் டாட்ட
மந்திரஞ்சேர் அப்பரமர் பங்கில் வாழும்
மகிழ்பெரிய நாயகியீர் ஆடீ ரூஞ்சல்
வீரமங்கை விஜயமங்கை விசிறி வீச
விண்ணின் மங்கை கற்பூர தீபமேந்த
ஆரவடம் பூண்ட மங்கை அடைப்பந் தாங்க
அகிலமங்கை கமலமங்கை கவரி சாய்ப்பச்
சீருலவும் மங்கையர்பல் லாண்டு கூற
செல்வமங்கை முதலானோர் சிறப்புஞ் செய்ய
பேருலவு மப்பரமர் பங்கில் வாழும்
பெரியநா யகித்தாயே ஆடீ ரூஞ்சல்

பாடகக்காற் சிலம்புகொஞ்சச் சதங்கை யாடப்
பவளத்தா வடமாடப் பணிகள் ஆட
சூடகக்கை விளங்குதங்க வளைகள் ஆடத்
துடியிடையில் பட்டாடை துவண்டே ஆட
ஏடவிழும் மலர்மாலை குழலில் ஆட
இருகாதில் பொன்னேலே எழுந்தே யாட
ஆடகப்பொன் கொப்பாடப் பணிகள் ஆட
அருள்பெரிய நாயகியீர் ஆடீ ரூஞ்சல்

ஆரணியா யுலகமெல்லாம் பெற்று மீண்டும்
அழியாத கன்னியுமாய் ஆதி வேதப்
பூரணமாய்த் தனுகரண புவன போகம்
பொறுப்பவளாய் பொருப்பரசன் மகளு மாகி
காரணியா யெவ்வுர்யிர்க்குந் தாயும் ஆகி
கற்பகா லங்கள் தமைக் கடந்தே நின்ற
சீரணிகொள் அப்பரமர் பங்கில் வாழும்
திகழ்பெரிய நாயகியீர் ஆடீ ரூஞ்சல்
அந்நாளி லோரிடையன் ஆடு மேய்த்து
ஆமணக்கின் விரையெடுத்து கல்லில் தாக்கப்
புன்னக வனந்தனிலப் பரமர் தோன்றி
பொதியெடுக்குஞ் செட்டிதனை மிளகு கேட்க
சொன்னாவால் மிளகல்ல பயிறே யென்று
சொன்னவுடன் மிளகெல்லாம் பயிற தாகப்
பின்னுமதை மிளகாக்கும் பெம்மான் பங்கில்
பெரியநா யகித்தாயே ஆடீரூஞ்சல்,

தும்புருநா ரதர்கள்வந்து கீதம் பாடத்
தூயமறை யோர்களெலாம் வேதம் பாடக்
கிம்புருடர் கின்னரர்கள் வீணை மீட்டக்
கெருடகாந் தருவர் வந்து தம்பூர் மீட்ட
நம்புசித்தி வித்தியா தரர்கள் போற்ற
நாட்டியஞ்சேர் விஞ்சையர்கள் ஆட்டம் ஆட
அப்புவியி லப்பரமர் பங்கில் வாழும்
அருள்பெரிய நாயகியீர் ஆடீரூஞ்சல்.

மத்தளங்கள் பம்பைதுடி சத்தங் காட்ட
மல்லரியுங் காகளமும் வணங்கிப் போற்ற
தித்தியுடன் நாதசுரம் கொம்பு தாளம்
சின்னமுடன் பூரிகையும் சங்கும் ஊத
எத்திசையும் பல்லியங்கள் முழக்க மெல்லாம்
எழுகடலின் முழக்கம்போல் எழுந்தே யார்ப்ப
அத்தரெனும் அப்பரமர் பங்கில் வாழும்
அருள்பெரிய நாயகியீர் ஆடீ ரூஞ்சல்
கொஞ்சு கிளி பெண்ண்ணங்கீர் ஆடீ ருஞ்சல்
குயிலினமே மயிலினமே ஆடீ ரூஞ்சல்
நஞ்சமிர்த கண்மணியீர் ஆடீ ரூஞ்சல்
நகைமுகத்தீர் கனதனத்தீர் ஆடீ ரூஞ்சல்
மஞ்சனைய குழல்மடவீர் ஆடீ ரூஞ்சல்
மயேஸ்வரியே பூரணியே ஆடீ ரூஞ்சல்
பிஞ்சுமதி யணிந்த அப்பரமர் பங்கில்
பெரியநா யகித்தாயே ஆடீ ரூஞ்சல்

சீர்வாழி மறையோர்கள் வேள்வி வாழி
தேன்கரைநா டனுதினமும் சிறக்க வாழி
கார்வாழி கோவிலுள்ள சனங்கள் வாழி
கல்வியொடு நீதியெனுங் கலைகள் வாழி
பார்வாழி கொற்றையில் வேணுடன் வாழி
பரவுறுசீர் செம்பூத்தர் பரிவாய் வாழி
பேர்வாழி கொற்றைநகர் தன்னில் வாழும்
பெரியநா யகித்தாயே வாழி வாழி.
Copyright © 2010 - 2017 konguvenadar.org