Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல் »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
நூன்முகம் - பெரியநாயகியம்மன் திருவூஞ்சல்<<
சங்கரண்டாம்பாளையம் அரண்மனை - திருவாதிரைக் கலியாண நடைமுறை - பொன்னூஞ்சல்

தூரி புங்கங்கால்:

புங்கங்கால் தென்புறமும் புளியங்கால் வடபுறமும் நாட்ட வேண்டும் புங்கங்கால் ஊதியூர் கருக்கம் பாளையம், கள்ளி மேட்டுப்பாளையம் ஊர்ப் பெரிய வீட்டுக்காரர், புங்கங்கால் கொடுப்பது வழக்கம். இப்பொழுது பெரிய வீட்டுக்காரர் குமாரர் இராமசாமிக் கவுண்டர் கொடுத்து வருகிறார். தேவைக்குமுன் நாம் அவர்களுக்கு ஞாபகக் கடிதங் கொடுத்து அனுப்பும் வழக்கம் உண்டு. கால் கொண்டு வரும் பணியாளர் இருவருக்கு 2 படி அரிசி ஆளுக்கு ஒருபடி வீதம் கொடுக்க வேண்டும். பின் முகூர்த்தக் கால் போடவேண்டும் முகூர்த்தக்கால் நாகரசு வட்டமலைபாளையம் குள்ளம்பாளையம் முதலிபாளையம் பெரியவீட்டு அருமைக்காரர் போடுவது வழக்கம் (செம்பூத்தகுலத்தார்)

புளியங்கால்:

முகூர்த்தக்கால் போட்டபின் புளியங்கால் வெட்டப்போக வேண்டும் போகின்றவர்கள் முதலில் புளியமரத்துக்குப் பூசை செய்து பின் வெட்டி எடுத்து வரவேண்டும்.

தூரி:

தூரியை ஆசாரி வீட்டுக்குக் கொண்டு போய்த் தங்கத் தகடு அடித்துப் பூசை செய்து கொண்டு வந்து பின் நிலை பெறுத்துதல் செய்தல் வேண்டும். தூரியை ஏற்றுவதற்கு ஆசாரி பொங்கல் வைக்க வேண்டும். பொங்கலுக்கு ஆசாரிக்கு அரிசி கொடுப்பது வழக்கம் புண்ணியார்ச்சனை செய்த பின் தூரியாட்டுதல் நியதி. தூரி போடும் சமயம் எஜமானர் அவர்கள் சாமியார் புலவர் ஆகியோர் இருந்து நடத்துதல் வேண்டும். குலகுருவாகிய சாமியாரும் எஜமானரும் உறவின் முறையாரும் அமர்ந்திருக்கும் சமயம் புலவர்கள் பெரியநாயகியம்மன் ஊஞ்சல் பாட்டைப் பாடி ஆட்டுதல் நியதி தூரியில் அமருங் குழந்தைகள் நிமித்தம், புலவர்கள் ஊர் அழைக்கப் போதல் மரபு.

தூரிக்குக் கொடுக்க வேண்டிய சாமான்கள்:

தூரியில் அமரும் ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய கட்டணம் பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், மஞ்சள், பாக்கு, வெற்றிலை, காணிக்கை ஆகும். மேற்கூறிய சாமான்கள் கொண்டு வராதவர்கள் காணிக்கையுடன் செலுத்துதல் வேண்டும்.

தூரியில் அமருங் குழந்தைகளை மிராஸ்படி முறைப்படி, நடத்துதல் வேண்டும். உள்ளூர், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், வேலப்பம் பாளையம், ஆண்டிபாளையம் என்ற வரிசையில் குழந்தைகளைத் தூரியில் அமர்த்த அனுமதிக்க வேண்டும்.

முதற்பங்கு:

முதலில் அரண்மனைக் குழந்தைக்கு இடம் அளிப்பது சம்பிரதாயம் பின் உள்ளூர்ப்பங்கு தொடங்கப்பெறும் உள்ளூர்ப்பங்கில் உள்ளூர் ரங்கபாளையம் கோவில்பாளையம் கன்னங்கோவில், முதலிய ஊர்கள் அடங்கும்.

2-வது பங்கு:

புதுப்பாளையம் செ-புதூர், கவுண்டயன் வலசு, எருக்கலங் காட்டுப் புதூர் முதலிய ஊர்கள் அடங்கும்.

மூன்றாம் பங்கு:

குள்ளக் காளிபாளையம் - நான்காம் பங்கு:

வேலப்பம்பாளையம் எரிசனம்பாளையம் வெள்ளைக்கவுண்டன்புதூர் ராசிபாளையம் கருக்கம்பாளையம் கள்ளிமேடு ஆண்டிபாளையம், முதலிய ஊர்கள் அடங்கும் மற்றைய ஊர்க் குழந்தைகளை மாமூல் வழக்கம்படி வைத்து ஆட்டுதல் முறைமை.

குறிப்பு:

குள்ளக்காளிபாளையம் புதுப்பாளையம் ஆகிய ஊர்க் குழந்தைகள் இரண்டையும் ஒன்றாய் வைத்து ஆட்டுதலும் உண்டு. செலவு தொகை திருவாதிரை பொன்தூரிக் கலியாணத்தில் அரிசி மற்ற சாமான்கள் வகையில் செலவு நீக்கி எஜமானர் அவர்களுக்கு இரண்டு பாகமும் சாமியார் புலவருக்கு ஒருபாகமும் பகிர்ந்தளித்தல் முறைமை. புண்ணியார்ச்சனைக்கு ரூபாய் 5-00 கோயில் அய்யருக்கு இரண்டு கோவிலுக்கும் 20-00 கோயில் பண்டாரத்துக்கு இரண்டு கோவிலுக்கும் 20-00 தட்டாசாரிக்கு 2-00 கொத்தனூர் மேளத்தாருக்கு 10-00 மராபாளையம் மேளத்தாருக்கு 10-00 மாணிக்கத்தாளுக்கு 5-00

அரிசி கணக்கு:

கொத்தனூர் கோயிலுக்கு அரிசிவள்ளம் 3-00 மராபாளையம் கோவிலுக்கு அரிசி வள்ளம் 3-00 ரத்தின மூர்த்தி கோவிலுக்கு அரிசி வள்ளம் 3-00 பெரியநாச்சி அம்மன் கோவிலுக்கு அரசி வள்ளம் 3-00 வண்ணனுக்கு அரிசி வள்ளம் 5-00 நாவிதனுக்கு ” 3-00 குயவருக்கு ” 4-00 ஆசாரிக்குத் தூரிப் பொங்கல் வைக்க அரிசி 10 படி

புலவருக்குத் தூரிப் பொங்கல் வைக்க அரிசி 10 படி

இந்தக் திருவாதிரைக் கல்யாணப் பொன்னூஞ்சல் தூரியின் முறைகள், கொங்கு மண்டலத்திலும், பிற இடங்களிலும் குடியிருக்கும் பெரிய குலக் கோத்திரத்தார் அனைவர்க்கும் உரியது, ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளில் முதற் பெண் குழந்தையைத்தான் தூரியில் வைக்க வேண்டும். முதற் பெண் குழந்தைக்கு நல்லம்மாள் என்று பெயர் வைக்க வேண்டும்.

இந்த தூரிச் செலவு தாய்மாமன் செய்யவேண்டும் திருமணத்தின் சீர்போல பட்டம்கட்டி பெண்ணெடுத்துத் தூரிக்குத் தாய்மாமன் கொண்டு வரவேண்டும்.

மற்றும் தூரியில் வைக்கும் குழந்தைகளை அமராவதி நதியில் உள்ள ஏழு துறைகளிலும் நீராட்டி தென்னீசர் அகிலாண்ட வல்லியம்மன் பெரிய நாச்சியம்மன், ரத்தின மூர்த்திசுவாமி கருப்பராயசுவாமி கோட்டை மாரியம்மன், நட்டாத்து ஈஸ்வரன் அப்பரமேஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோயில்களுக்கு அழைத்துச் சென்று பூசனை வழிபாடு செய்து அரண்மனைக்கு குழந்தையை கொண்டுவந்து தூரியில் வைக்கவேண்டும். பொன்னூஞ்சல் நடைபெறும் அரண்மனையில் குலகுரு சடையபர மேஸ்வர பண்டிதருடன் தென்கரை நாட்டுக் கொற்றை நகர் அதிபதி வேணுடர் சுற்றம் சூழ அமர்ந்திருக்கச் சமஸ்தானப்புலவர், பொன்னூஞ்சல் பாடல்கள் பாடித் தூரியாட்டுவது மரபு.

பூந்தேர்:

குறுநில மன்னரான வேணுடர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் கொடுக்கப் பெற்ற பூந்தேரும் பொன்னூஞ்சலும் உடையவர்கள் இந்தப் பூந்தேர் பெரியகுலம், செம்பூதகுலத்தைச் சேர்ந்த இருமுதன்மைக்கும் உரியது. திருமணத்தின் போது மணமக்கள் பூந்தேரில் ஊர்வலம் வருவது தொன்று தொட்டு வந்த மரபு.

பூந்தேர் எடுப்பதற்கு பட்டக்காரர் ஸ்ரீ வேணுவுடையார் அவர்களிடம் அனுமதி பெற்று அரண்மனையில் இருந்து கலசத்தைப் பெற்றுக் கொண்டு அதற்குரிய காணிக்கை செலுத்த வேண்டும். பூந்தேரில் மணமகன் ஊர்வலம் வரும்போது, பல்லக்கில் குலகுருவும் மேனாவில் பட்டக்காரரும் உடன் வருவார்கள். எனவே இந்தமூன்று ஊர்திகளும் வலம் வருவனவாம் முதலில் பல்லக்கில் குலகுருவும் இரண்டாவது மேனாவில் ஸ்ரீ வேணுடரும் மூன்றாவது பூந்தேரில் மணமகனும் வருவார்கள் இதற்குரிய காணிக்கைகள் அரண்மனையில் செலுத்த வேண்டும்.

மணமகன் அழைப்பின் போதும் மணமகன் நாட்டுக் கல்லுக்குப் போகும் போதும், மணவறைக்கு வரும் போதும், சமஸ்தானப் புலவர்கள் நாட்டுப் பாடலும் காணிப்பாடலும் பாடி வருவார்கள். அதற்குரிய காணிக்கையும் புது வஸ்திரமும் சாமியாருக்கும் எஜமானருக்கும் புலவர்களுக்கும் வழங்குவதுடன் சிவியாருக்கும் மணமகன் வீட்டார் புது வஸ்திரம் வழங்குவது வழக்கம். மற்றும் ஆந்தை குலத்தாருக்கும் பூந்தேர் பெறும் மரபு உண்டு என்பதை “ஈந்தேர் பெற்ற கொற்றைநகர் இறைவன் வேணுவுடையான்தன் பூந்தேர் முதலாம் விருதருளப் பொலியுங் குறிச்சிக் கதிகாரன்” என்று வேளாள புராணம் கூறுவதால் இவர்களும் பூந்தேர் உரிமை உடையவர்கள் என்பதும் விளங்குவதாம்.



Copyright © 2010 - 2017 konguvenadar.org