Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
>>வேணுஒடயாக் கவுண்டன் வம்சாவளி
இரும்பிடர்த் தலையார் வேணாடர் ஆன வரலாறு

சேரன் ஆட்டன் அத்தி, நடனக் கலையில் வல்லுநன், உல்லாசப்பிரியன்; ஆதலால் அவன்தனது அரசைக் கவனியாது வாழ்ந்தனன். அவ்வமயம் அச்சேரன், நன்றம்மலையின் அண்மையில் உள்ள இருங்கழார் என்னும் பதியல் வாழ்ந்தனன். இங்குக் குறித்த இருங்கழார் தற்பொழுது ‘பவானி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மேற்குறித்த நன்று என்ற மலை ஊராட்சிக்கோட்டை மலை என்று பேசப் பெறுகின்றது. சேரனது சோர்ந்த நிலையை அறிந்த முத்தூருக்கோட்டத்துத் தொன் முதிர் வேளிர்கள் மிகைத்தெழுந்து அச்சேரன் அத்தியுடன் போரிடுவாராயினர்.

இங்குக் குறித்த முத்தூருக்கோட்டம் என்பது காங்கேயம், வெள்ளகோயில், கொடுமுடி, தாராபுரம் தாலூக்கா, இவை சேர்ந்த பகுதியாகும். இப்பகுதியில் நடந்த போரில் அத்திக்குத் துணையாகச் சோழன் கரிகால் வளவனும் இரும்பிடர்த் தலையாரும் கலந்து போரிட்டனர். வளவனது சேனையின் மிகையாலும் பிடர்த் தலைப் பெரியாரின் படை நடத்துந் திறந்தாலும் அத்திக்கு வெற்றி கிடைத்த்து. தோற்ற அவ்வேளிர்களது நாட்டை ஒன்று சேர்த்து வேணாடு என்ற பெயரை அதற்குச் சூட்டிச் சேரமான் அத்தி என்பவன் அந்த வேளிர் நாட்டை ஆளும் உரிமையை இரும்பிடர்த் தலையாருக்கு ஆக்கி வேணாடன் என்ற பட்டப் பெயரையும் அளித்து மேற்கூறிய இரும்பிடர்த் தலையாரைச் சிறப்பித்தான். அந்த நாள் முதல் இரும்பிடர்த் தலையார் என்பவருக்கும் அவர் பரம்பரையில் தோன்றிய யாவருக்கும் வேணாடர் என்ற பட்டப் பெயர் வந்து பொருந்துவதாயிற்று.



Copyright © 2010 - 2017 konguvenadar.org