Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
குமார ரத்தின வேணாவுடையார்<< >>S.V. பெரியண்ண வேணாவுடையார் வரலாறு
S.V. பெரியண்ண வேணாவுடையார் அவர்கள்

குமார ரத்தின வேணுவுடையார் அவர்களுக்கு அருந்தவப் புதல்வராகப் பட்டத்தைத் தாங்கும் தலைவராகக் கலியுகாதி 4984 இல் சுபானு வருடம் ஆடி மாதம் 17-ம் தேதி அன்று இப்புவியில் பெரியண்ண வேணுவுடையார் தோன்றினார்கள். அவர்களுடைய இளம் பருவத்தில் இவருக்கு நல்லாசிரியராக எங்கள் ஆதீனப் புலவர் பழனியப்ப வாத்தியார் அமர்த்தப்பட்டார் பின்பு தாராபுரத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர் இவருக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்தார்.

இவர் தமிழறிந்த சான்றோர் ஆதலால் தமது குமாரர் தமிழிலும் பாண்டித்யம் பெற வேண்டும் என்று எண்ணி அவ்வமயம் சிறப்புடைய வித்வானாக இருந்த உடுமலை சரபம் முத்துசாமிக் கவி அவர்களைக் கொண்டு தமிழ்க் கலையும் பயிலச் செய்தார். பெரிய தந்தையார் பெரியண்ண வேணுடுடையார் அவர்களது 30-வது வயதில் பாட்டனார் காலஞ்சென்றார். அந்த நாள் முதல் பெரிய தந்தையார் நாட்டு்த் தலைமையை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவர்கள் துணைவியாகவும் பட்டத்துத் தேவியாகவும் பீலிக்காம்பட்டித் திருமதி லட்சுமி அம்மையார் வந்து வாய்த்தார்கள். நள வருஷம், வைகாசி மாதம் இவருக்குப்பட்டாபிஷேகம் நன்கு நடந்தது. பட்டாபிஷேகம் கொண்டது முதல் இவர் பட்டக்காரர் ஆகித் தமது பகுதியை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். இவர்கள் காலத்தில் இவர்களது ஆணை கொங்கு நாட்டின் பல பகுதிகளிலும் செல்லத் தொடங்கியது. இவரது ஆணையைக் கடக்கும் ஆற்றல் இங்கு எவருக்கும் இருந்ததில்லை. எங்கேனும் கட்சிப் பூசலோ சாதி சமயக் கோளாரோ நடந்து அதனால் சச்சரவுகளோ அடிதடிகளோ நிகழ்ந்தாலும் எளியவரை வாட்ட நேர்ந்தாலும் அப்போது எஜமான் மேல் ஆணை என்று கூறப்படும். இவரது ஆணையால் வலியவர் எளியவரை வாட்ட முடியாமல் போகும். எளியவரை அடிக்க ஓங்கிய கை அவ்வமயமே தாழ்வுறும். மீறினவர்கள் உடனே அரண்மனைக்கு அழைக்கப்படுவர், குற்றம் செய்தவர் விசாரிக்கப்படுவர். குற்றம் என்று தெரிந்தால் அக்குற்றத்திற்கேற்பத் தண்டம் விதிக்கப்படும். வலியவர் திமர் அடக்கப்படும் எளியவர் கண்ணீர் துடைக்கப்படும் இவ்வாறு இவர்களது ஆணை பல வழிகளிலும் போற்றப் பெற்றதாயிற்று.



Copyright © 2010 - 2017 konguvenadar.org