Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
S.V. பெரியண்ண வேணாவுடையார் அவர்கள்<< >>ஸ்ரீமான் S.K. குமார ரத்தின வேணுடுடையார் வரலாறு
S.V. பெரியண்ண வேணாவுடையார் வரலாறு

சமூக சேவை:

இவர் தோன்றிய சமூகம் கொங்கு வேளாளர் சமூகம். இச்சமூகத்தின் தலைவர் இவர். இச்சமுதாயத்தின் முன்னேற்றம் கருதி இப்பெரியார் செய்த செயல்கள் எண்ணற்றன. அவைகளுள் சிலவற்றை ஈண்டு எழுதுகிறேன். இப்பகுதியில் அண்டர் நாட்டை ஒட்டிய மண்மாரி என்ற பிரதேசத்தில் கொங்கு வேளிர்கள் பலர் வாழ்ந்து வந்தனர் அவ்வூருக்கு அண்மையில் உள்ள பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி முதலிய இடங்களில் வாழ்ந்த முசல்மான்கள் கொங்கு வேளிர்களுக்குப் பல வழிகளி்ல் துன்பம் கொடுத்து வந்தனர். அது சம்பந்தமாக அங்குப் பெரிய கலகங்களும் நிகழத் தொடங்கின. இச்செய்தி எங்களது பெரிய தந்தையார் காதிற்கு எட்டிய உடனே இவர் அத்தலத்திற்கு விரைந்து சென்று அவ்விருசாராரையும் சமாதானப்படுத்தி நலம் செய்து அங்குள்ள வேளிர்களுக்கு உண்டாகிய இடரைத் தவிர்த்தனர்.

தாராபுரத்திற்கு அண்மையில் உள்ள காளிபாளையத்தில் கொங்கு வேளிர்களுக்கும் முகமதியர்களுக்கும் நிகழ்ந்த பூசல் ஒன்று மிகுந்த கட்டத்தை உண்டாகிற்று உடனே இவர் அப்பூசலில் தலையிட்டு அங்குள்ள வேளாளர்களுக்கு துன்பத்தைப் போக்கி இருசாராரையும் சமாதானப் படுத்தி நல்வாழ்வு வாழச் செய்தனர் இவரது காப்பால் அங்குள்ள வேளிர்கள் துன்பம் நீக்கி இன்பம் எய்தினர்.

நாட்டுச் சேவை:

இவர் ஈரோடு தாலூகா போர்டு உறுப்பினராக 15 ஆண்டுகளும் தாராபுரம் தாலூகா போர்டின் தலைவராக 1 ஆண்டும் சேவை செய்துள்ளார். கோவை ஜில்லா போர்டின் உறுப்பினராகப் பல ஆண்டுகளும் அதன் தலைவராக ஒரு ஆண்டும் இருந்து சேவை செய்துள்ளார். சென்னை சட்டசபை உறுப்பினராக 1929 வரையிலும் பின் 1936-முதல் 1939-வரையிலும் சுமார் ஏழு ஆண்டுகள் சேவை செய்துள்ளார்.

இங்ஙனம், நாடு, வளநாடு, மாகாணம் ஆகிய பல இடங்களிலும் சேவை செய்த பெரியார் இவர்கள் என்று கூறுதல் மகிழ்ச்சி தரத்தக்க தொன்று.

இவர் செய்த தெய்வச் சேவை:

பெரியண்ண வேணுவுடையார் அவர்கள் செய்து வந்த தெய்வச் சேவையையும் இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருந்தும், தமது காணிக்குரிய கொற்றை சிவலாயம் ஒன்று ஒன்றரை லட்ச ரூபாயளவில் செய்து முடித்தார்கள். மேலும் அவ்வாலயத்திற்குரிய மானிய நிலங்களில் வருகிற வருமானத்தை நல்லமுறையில் போற்றிச் சிவப்பணி செய்துள்ளார். மறவர்பாளையம் அப்பரமேயர் ஆலயத்தை நல்ல முறையில் பூசை நடைமுறை ஒழுங்கில் செய்யப்பெற இவர்கள் தந்த படிப்பறம் ஒழுங்கு பெற்றதென்பர். அவ்வாலயத்தில் மாணிக்க வாசகர் திருநாள்விழா இனிது நடைபெற இவர்கள் செய்த மான்யம் போற்றத் தக்கது. சங்கரண்டாம்பாளையத்தில் புதிதாகக் கணபதி ஆலயம் ஒன்று 15,000/- ரூபாய் செலவில் கட்டி அக்கோவிலில் காசியில் இருந்து கொண்டுவந்த வெள்ளை விநாயகரைப் பிரதிட்டை செய்த அக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். குண்டடம் வடுகாத சாமி ஆலயப் புனருத்தாரணம் இவர்களது பெருந்துணையால் தான் நடந்தது. இத்தகைய தெய்வச் சேவை செய்த இவர்களது வாழ்க்கை தெய்வ வாழ்க்கை தெய்வ வாழ்வாக விளங்குவதாம்.

இவர்கள் செய்த கல்வித் தொண்டு:

தாராபுரத்தில் உள்ள பட்டக்காரர் விடுதியில் ஏழை மாணவர்கள் பலபேர்களுக்கு உணவளித்து வரும் நற்செயலை இவர்களது தந்தையார் போலவே 30 ஆண்டுகள் இவர்கள் செய்து வந்தார்கள். கோவை ஜில்லா தேவஸ்தான டிரஸ்டியாகவும், பழனி தேவஸ்தான கவுரவ டிரஸ்டியாகவும் தமது ஆவி பிரியும் வரையிலும் செய்துவந்தனர். தமது ஆதீனப் புலவர்கள் வழிவந்த திருப்பூர்த் தமிழாசிரியர் பழனிச்சாமிப் புலவர் என்பவரை நல்ல புலமை பெறும்படி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலச் செய்த பெருமையும் இவர்களையே சாரும். இதற்கு நன்றியுணர்ச்சியுடன் அப்புலவர் இவர்கள் மீது குருபரன் ஆற்றுப்படை என்ற நூலைச் செய்து ஆதீனத்தைப் பெருமை கொள்ள வைத்தார்கள். முத்தமிழ் மணி, வித்வான் க. பழனிச்சாமிப் புலவர் என்ற இப்புலவரே இன்றும் ஆதீனப் புலவராக இருந்து வருகிறார்.

இவர் 17-10-51 கர வருஷம் ஐப்பசி மாதம் 1-ஆம் நாள் இறைவனது திருவடி நிழலை அடைந்தார்கள்.Copyright © 2010 - 2017 konguvenadar.org