Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
S.V. பெரியண்ண வேணாவுடையார் வரலாறு<< >>திருமண வாழ்த்துப் பாடல்கள்
ஸ்ரீமான் S.K. குமார ரத்தின வேணுடுடையார் வரலாறு

கொங்கு மண்டலம் இருபத்து நான்கு நாடுகளில் ஒன்றாகிச் சிறப்புப் பெற்று விளங்குவது தென்கரைநாடு. இது பன்னிரண்டு கிராமங்களைக் கொண்டது. இந்தக் தென்கரை நாட்டின் தலைநகர், கொற்றை நகர்.இன்று சங்கரண்டாம்பாளையமாக அமைந்துள்ளது.

இந்தக் தென்கரை நாட்டுப் பட்டக்காரர்களான குறுநில மன்னர்கள், கரிகாற் பெருவளத்தான் மாதுலரான இரும்பிடர்த்தலையார் மரபினர்களே என்பர்.

குலோத்துங்க சோழ மன்னனின் அமைச்சராக இருந்து, வணிகர் குலத்தைக் காத்துத் திறைகொண்டு செட்டி வேணுடர் என்றும் சேர சோழ பாண்டியர்களால் மும்முடி சூட்டப் பெற்று மும்முடி வேணுடர் என்றும் இரும்பிடர்த்தலையார் மரபில் பெரியராய்ப் பெரியண வேணுடர் என்றும், சோழ நாட்டிலுள்ள சிவாயம் ரத்தினகிரியிலிருந்து வந்து கொங்கு நாட்டுத் தலைவரான குமார ரத்தின வேணுடரென்றும் பட்டப் பெயர் பெற்றனர் என வரலாறு கூறும்.

இவர்கள் கொங்கு தென்கரை நாட்டுப் பட்டக்காரர் கொங்கு மண்டலம் இருபத்து நான்கு நாட்டிற்கும் முதன்மை பெறும் உரிமையும் பெற்றவர்கள். கொங்கு வேளாளர் மரபில் பெரிய குலம், பெரிய வீடு என்னும் சிறப்புப் பெற்றவர்கள். கொங்கு வேளாள சமுதாயத்திற்கும் பதினெண் குடிமக்களுக்கும் சாதி நியாயம் வழங்குவதும், சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத நல்ல செயல்கள் புரிவதும் இவர்களின் கடமையாகும்.

இவர்கள் செல்வர்களாகவும், ஆற்றல்மிக்கவர்களாகவும், கல்வி கேள்விகளில் வல்லவர்களாகவும், கற்ற தமிழ்ப் புலவர்களை ஆதரிப்பவர்களாகவும் விளங்கினார்கள் என

“தண்டா மரைதனில் மீனவன் சங்கப் பலகைதனில் உண்டாம் புலவரை மலையோர மாயெதி ரோடிவந்து கண்டா தரிக்கும் பெரிய குலேந்த்ரன் கனகமுடி வண்டாடும் பூங்கொற்றை வேணுடன் வாழ்கொங்கு மண்டலமே”

என கொங்கு மண்டல சதகங் கூறுகின்றது.

இதன் பொருள் பாண்டிய நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மதுரை சங்கப் புலவர்கள் கொங்கு நாட்டையடைந்தனர். சங்கப் புலவர்கள் வருகையை உணர்ந்த வேணுடர், ஊதியூர் மலை வழியாக எதிர்சென்று புலவர்களை அழைத்துவந்து உண்டியும், இருப்பிடமும் கொடுத்தும் பாதுகாத்தார் என்பதாம்.

இந்நூல் எழுமாத்தூர் வேலம்பாளையம் பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களால் வெளியிடப் பெற்றது இந்த நூலுடன் மற்றும் இரு நூல்கள் இணைத்த கொங்கு மண்டல சதகங்கள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மணிவிழா வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள் மற்றும் கார்மேகக் கவிஞர் பாடிய கொங்கு மண்டல சதகத்தில்,

“ஒருவிதை யைத்தட்டும் ஆயர்மதலை உவமையில்லா அரியஞா னம்கொளச் சென்னியில் செந்நீர் அருவியெனச் சொரியநின் றன்னான் தனையாண்ட முக்கண் சுயம்பு வென்றும் மருவி வளர்தென் கரைநாடு சூழ்கொங்கு மண்டலமே

அணித்திகழ் சேர்தென் கரைநாட்டில் அப்பர மேயருக்கு பணித்தொழி லான தளர்ச்சியி னுல்வெறுப் பாயொர்செட்டி எணித்தொலை யாத மிளகைப் பயிறென எம்பெருமான் மணிப்பயி றாக்கிய தும்புகழ் சேர்கொங்கு மண்டலமே

கொற்றையில் வீற்றருள் அப்பர மேயர் கொடிஞ்சிசெலப் பெற்றதன் பிள்ளையை வெட்டிவிட் டானற் பெருமையுற உற்றுள ராயர்பொன் சிம்மா சனத்தி லுவந்துவைத்த மற்செறி நீள்புய வேணுடன் வாழ்கொங்கு மண்டலமே”

என அப்பரமேயர் வரலாறும் வேணுட மன்னரின் ஆட்சி மாட்சிமையை புலப்படுத்துவதாம்.

குலோத்துங்க சோழ மன்னனிடம் முதல் அமைச்சராக சோழ மண்டலத்திலிருந்து இங்கு வந்த இம் மரபினர் கருவூரின் அண்மையில் உள்ள சிவாயம் ரத்தினகிரி காணியாகப் பெற்றவர்கள். ரத்தினகிரியில் இருந்து கொங்கு தென்கரை நாட்டுக்குக் கொண்டுவந்து பிரதிட்டை செய்த மூர்த்திதான் இவர்களின் குலதெய்வமான இரத்தின மூர்த்தி சுவாமி என்பது கர்ன பரம்பரைச் செய்தியாகும். இவர்கள் சைவ நெறிப்படி தீட்சை பெற்று சிவபூசை செய்யும் நியமம் உடையவர்கள்.

“கற்றனக ராமலகங் கடுப்பவுணர் கவிபுகழ முற்றனக ராமுழங்கும் முன்றில்வே ணுவுடையான் தெற்றனக ராதியைந்தும் செபிக்கின்ற சிவபக்தன் கொற்றனக ராதிபதிக் கோவாழங் கொங்கணமே”

என்று கூறும் வேளாள புராணப் பாடல் இவர்களின் சிவபூசை நெறியைப் புலப்படு்த்துவதாம்.

1 வது வரி கற்றன கர ஆமலகம்-கடுப்ப ஆமலகம்-நெல்லிக்கனி கடுப்ப-நிகர்க்க 2 வது வரி முற்ற நகரா முழங்கும் நகரா-முரசு 3 வது வரி தெற்ற நகராதி ஐந்தும் தெற்ற-தெளிவாக, நகராதி ஐந்தும்-நகார முதலான பஞ்சாக்கரம்

இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற பெரியகுல வேணுடர் மரபினில் 34வது பட்டவர்த்தனராக முடி சூட்டப் பெற்றவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் ஸ்ரீமான் S.K. குமார ரத்தின வேணுடுடையார் ஆவார்கள்.

ஸ்ரீமான் S.K. குமார ரத்தின வேணுடுடையார்

இவர், 33வது பட்டம் பெற்று விளங்கிய பேராற்றலிமிக்க ஸ்ரீமான் பெரியண்ண வேணுடர் அவர்களின் தம்பியார் ஆன சீரும் சிறப்பும் பெற்ற தாளாளர், பெருஞ்செல்வர், உயர்திரு. குப்புசாமிக் கவுண்டர் முத்துலட்சுமி அம்மாளின் திருக்குமாரராக கருவிலே திருவுடையவராக 23-10-1933ல் தோன்றினார். இவருக்கு ஒரு அக்காள். இரு தங்கையர். ஒரு தம்பியர் என நால்வர் உடன் பிறந்தவர்களாவார்கள்.

33-வது பட்டவர்த்தனரான இவரது பெரிய தந்தையார் ஸ்ரீமான் பெரியண்ண வேணுடுடையார் அவர்கள் 17-10-1951 கர வருடம் ஐப்பசி மாதம் 1-ஆம் நாள் இறைவனது திருவடி நிழலையடைந்தனர். அவர்களின் குமாரர் இளம் பருவத்திலேயே அமரரானதால் அவருக்குப் பின் பட்டத்து வாரிசாக தம்பியின் திருமகனரான இவருக்கு இளவரசுப் பட்டம் அன்றே சூட்டினார்கள்.

பின்னர், போற்றுதற்கும் பாராட்டுக்கும் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குட்டப்பாளையம் திருமிகு K.N. சாமிநாத கவுண்டர் விசாலாட்சி அம்மையின் செல்வமகள் புவனேசுவரி அம்மையை பட்டத்து தேவியாக 29-6-1961ல் இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின், நாடு வள நாடு சுற்றம் சூழ முறைமையின்படி, 14-9-1961ல் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரராக பட்டாபிஷேகம் செய்யப் பெற்றார். அதுமுதல் தென்கரை நாட்டின் கொற்றை அதிபராக ஸ்ரீமான் குமாரரத்தின வேணுடர் இருந்து வருகிறார்.

இவரின் தம்பியார் உயர்திரு S.K. கணேஷ் என்ற பெரியசாமிக் கவுண்டர், ஆற்றலும் அன்பும் மிக்கவர். எல்லோராலும் பாராட்டுதற்கு உரியவர். தாழ்ச்சியில்லாத மேன்மை பெற்றவர். அமரரான ஸ்ரீமான் பெரியண்ண வேணுடரின் திருமருகரும், குட்டப்பாளையம் தாளாளர் பெருஞ்செல்வர். அருச்சுன கவுண்டர் திருமகனரும் வாழ்த்துதற்கும் வணக்கத்துக்கும் உரிய பழனி பாராளுமன்ற உறுப்பினருமான திருமிகு. அ. சேனாபதிக் கவுண்டர் நல்லம்மையின், திருமகள் தனலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.Copyright © 2010 - 2017 konguvenadar.org