Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
ஸ்ரீமான் S.K. குமார ரத்தின வேணுடுடையார் வரலாறு<<
திருமண வாழ்த்துப் பாடல்கள்

திருச்சிற்றம்பலம்
சங்கரண்டாம்பாளையம்
உயர்திரு S.V. குப்புசாமிக் கவுண்டர் அவர்கள் குமாரரும்
தேன்கரை நாட்டு இளைய பட்டக்காரரும் ஆன,
உயர்திரு S.K. குமாரரத்னவேணுவுடையார் அவர்களுக்கும்
குட்டைப்பாளையம், பெருநிலக்கிழாரும்,
ஓமலூர் புனிதா தியேட்டர் உரிமையாளரும் ஆன
உயர்திரு K.N. சாமிநாத கவுண்டர் அவர்கள் குமாரி
திருமதி புவனேசுவரி அவர்களுக்கும்
26-6-61 “வியாழனன்று”
நிகழ்ந்த திருமணத்தின் போது படித்தளித்த
திருமண வாழ்த்துப் பாடல்கள்

கலி விருத்தங்கள்
பூமாதும் புகழ்மாதும் பொற்புடைய ஞானநவில்
நாமாதும் வீற்றிருக்கும் நலஞ்சாரும் கொற்றைபுரிப்
பூமான்கள் கொண்டாடப் புவனியெலாம் போற்றிசெயக்
கோமானாய் வீற்றிருந்த கொற்றவன்றன் குலமணியே !

போற்று கரிகால் புகழ்மன்னர் கொண்டாடும்
சேற்றுவயல் சேர்பிடவூர்ச் சேமநல நல்லாயன்
சாற்றும் பிடாரன் தமதுகுடிப் பொற்புயரும்
ஆற்றல்சால் பெரியகுல மாமதனில் வந்துதித்தோய்

பொற்றேரும் பொன்னூஞ்சல் பொற்பந்தல் மற்றநலம்
உற்றதிரு வாழ்வுநலம் உவமையிலா யோகநலம்
பெற்றிலகும் பேராளர் பேசரிய சீர்மையுள
நற்றவஞ்சேர் வேணுடர் நற்குடியின் கற்பகமே!

ஆற்றல்சா லும்பூதப் பாண்டியனை அன்றடர்த்து
நாற்றிசையுங் கொண்டாட நல்வெற்றி பெற்றிலகும்
ஏற்றம் பலபடைத்த ஏந்தல்கள் தம் பொற்குடியில்
போற்றும் படியுதித்த புண்ணியனே பூந்திருவ!

மும்மண்டி லம்போற்றும் முத்தமிழ்தேர் வித்தகராம்
மும்மன்னர் தம்வருகை மும்முரமாய்க் கொண்டாடத்
தெம்மன் னரும்மதிக்கத் திட்டிக் கிடாயாகத்
தம்மன்புப் பிள்ளைதனைத் தந்தார் குலவிளக்கே

அப்பரமர் பாதம் அதனை யனுதினமும்
இப்புவியல் போற்றி யிருந்தாணை சாற்றுகிற
ஒப்பெவருங் காணுத உலகர் துதிகனஞ்சார்
செப்புபுகழ் வேணுடர் சீரமைக்குஞ் செம்மலே

ஒப்பில் குணநலஞ்சேர் ஓங்கு புகழ்படைத்த
குப்புசாமிப் பெயர்கொள் கோமானுர் தம்தேவி
செப்புநலம் படைத்த சீராரும் முத்தம்மை
இப்புவியில் தந்தருளும் எங்கள் இளவரசே !

இமையம் எனவே எவரும் அசைக்காத
கமையும் பொறைபிறவும் காட்டுதிறல் மற்றவையும்
அமையக் குடிமுதலாய் ஆர்ந்தகலை கொண்டமைந்த
குமாரரத்ன வேணுடன் எனும்பெயர்கொள் கோமானே !

செல்வப் பெருமிதமும் சீர்மைமிகக் கொண்டுயரும்
மல்கும் புகழெனுநல் மாண்புப் பயிர்வளர்க்கும்
எல்லையில்சீர் நற்றமிழை யேற்றுப் பரிசுதரும்
தொல்லைப் பயிரகுலந் தோன்றும் திருமதியே !

பண்ணை வளமும் பயிர்வளமும் பார்புகழும்
கண்ணதெனப் பேணும் காளைகளும் மிக்குலவும்
வண்ணமிகு செல்வம் வளர்வாவிப் பொற்பதியின்
தண்ணென் புகழ்வளர்க்கத் தாரணியுள் வாழ்திருவே !

அன்பின் உயர்நலத்தால் ஆர்வலரை யேயணைத்து
இன்புக் குணச்சிறப்பால் ஏழையரை யாதரிக்கும்
தன்மனெம் மன்புக்குச் சார்வாகும் சாமிநாத
மன்னன் விசாலாஷி மாண்புத் தவசுதையே

வீரப் பெருமிதமும் மேதகவும் மேம்பாடும்
ஈரப் பெருமனமும் இவ்வுலகில் கொண்டுயர்ந்த
தீரர்எம் நல்லதம்பிச் செம்மல் பரம்பரையில்
ஆரமெனத் தோன்றி அணிபரப்பும் ஆரமிர்தே

பெண்மைக் குரிய பெருங்குணத்துக் காதல்நிறை
எண்ணும் மடம்நாணம் ஏற்கும் பயிர்ப்புடனே
நண்ணும் பலகுணங்கள் நாளும் வளரவளர்
தண்ணருள் புவனேஸ்வரி யென்னும் தண்மதியே !

அன்புத் திருமணிகாள்! அப்பரமர் தண்ணருளால்
இன்பச் சுபயோகம் ஏற்கும் மணவரையில்
மின்புக் கிலகுநல வேல்முருகன் வள்ளியெனப்
பொன்புக்க யோகம் பொருந்தும் மணம் சிறக்க

அருமைப் பெரியோரும் ஆர்ந்த உறவினரும்
தெருள்சேர் குருமாரும் சேர்ந்து அருமையிடப்
பெருமையுடன் நல்யோகம் பேணும் முறைநடந்த
அருமைத் திருமணங்கண் டானந்தங் கொண்டனமால்

கொங்குவேளிர் பலரும் கொண்டாடும் சீர்மையினில்
இங்கும் புகழ்பெருக எல்லாவிதச் சீரும்
தங்குதடை யில்லாது தானடந்த வாகண்டு
பொங்கும் களிப்பாலே பூரித்தார் இவ்வுலகர்

ஜெயங்கொண்ட சோழீசர் திவ்யத் திருவருளால்
நயம்கொண்ட உங்கள் திறம் நாளும் சிறந்திடுக
தயையும் கொடைநலமும் சார்வாக இப்புவியில்
வியன்செய் நிலையில் விளங்கிடுக உங்களறம்

அற்புதமாங் கூட்டுறவில் ஆர்ந்த வுமதுபசும்
பொற்புயரும் இல்லறந்தான் பூமிதனில் மிக்குயர்க
நற்பதமும் யோகநலம் நாளும் மிகப்பெருகி
கற்பகமாஞ் சோலையெனக் கவினுறுக உங்கள்மனை

பெரியகுலந் தன்னுடனே பேணும் பயிரகுலம்
உரிய கலப்பில் உயர்வுடைய சம்பந்தம்
அரிய பெருமையுள அப்பரமர் தண்ணருளால்
பெரியநலந் தாங்கிப் பேருலகில் வாழியவே

அருளார் மணிகாள்! நும் ஆயுள் நிறையுறுக
பொருளால் உயர்ந்துலகில் பொற்புடன்நீர் வாழ்ந்திடுக
மருளாத நல்லருள்சேர் மாண்பெரிய நாயகியார்
தெருளார் அருளால் நீர் சீர்பூத்து வாழியவே
இங்ஙனம்,
தமிழாசிரியர், உங்கள் நல்வாழ்வை விரும்பும்
நஞ்சப்பா உயர்நிலைப்பள்ளி க பழனிச்சாமிப் புலவர்
திருப்பூர், 29-6-61 கொற்றை ஆதீன வித்வான்Copyright © 2010 - 2017 konguvenadar.org