Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » வேணாடர் வம்சாவளி »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
இரும்பிடர்த் தலையார் வேணாடர் ஆன வரலாறு<< >>வேணுடருக்குரிய வேறு சிறப்புக்கள்
வேணுஒடயாக் கவுண்டன் வம்சாவளி

பாளையப் பட்டுக்களின் வரலாறு

தமிழ்நாடு அரசு, கீழ்த்திசைச் சுவடி நூல்கள்

தாறாபுரம் துக்குடி கசுபா தாறாபுறத்துக்ருச் சேர்ந்த தெங்கரை நாட்டு பட்டக்காறன் யிறுவத்தினாலு நாட்டுக்கும் பெறிவீட்டுக்காரனான பட்டக்கார குமார ரற்றின வேணுஒடயாக் கவுண்டன் வம்சாவளி கைபீது புக்கு. தாறாபுரம் துக்குடி கசுபா தாறாபுறம் தாலுகாவுக்கு சேர்ந்த தெங்கரை நாடு வேணஒடயாக் கவுண்டன் யெண்ணப்பட்ட பட்டக்காறுடைய வம்சாவனி முதலான கைபீது யென்ன வென்றால்:

பூற்வத்தில் குலோதுங்க சோளறாசா றாச்சிய பிரபுத்துவம் பண்ணிக்கொண்டு வறும் நாளையிலே, அக்காலத்தில் சோள றாசியத்திற் சேந்த

காவேறிபூம்பட்டணம் வணிகேசற் பிறபலமாஇ சோளறாசவுக்கு அடங்காதே நடந்து கொண்டு பட்டம் வயிறமுடிப்பட்டம், சேனாதிப் பட்டம் யிவற்கள் பிறபல மாயிறுக்கும் நாளில், சங்குனாறாயண செட்டிமகன் சாதினிலைகுலைந்தான் யென்று அவனை குலை செயித படியனாலே, சங்குனாறாயண செட்டி குளோத்துங்க சோள றாசாயிடத்தில் வந்து பிள்ளை பளி தீத்து குடுக்கச் சொல்லி முறை செயிதபடியனாலே அப்போது சலியுக சகாபுதம் வருஷம் 800-க்கு மேல்.

அப்போ மந்திறி தலைமையாகிய அர்த்தனாறி வேணுஒடயானுக்கு அறமனை பசுவும் குடுத்துக் காவேறிப் பூம்பட்டணம் திறை கொண்டு வறசொல்லி வுத்திரவு கொடுத்தபடியனாலே, அற்தனாறி வேணுஒடயாக் கவுண்டன் தளமும் கூட்டிக்கொண்டு போஇ காவேறிப்பூப்பட்டணமும் வெட்டி திரை சொண்டு அயினூறு குலவணிகரையும் கைவசம் பண்ணிக் கொண்டு வந்து குலோத்துங்க சோளறாசா வேணுஒடையார் கவுண்டன்.

யிடத்தில் வந்து அறிக்கை செய்யும்போது சோளராசாவும் மிகுதியும் சந்சோ ஷப்பட்டு காவேறி பூம்பட்டணத்துக்கு செட்டி வேணுஒடையான்யென்று பட்டாபிசேகமும் செயிது முடிசூட்டி, நாற்பத்தி யெண்ணாயிரம் கோத்திரத்துக்கு பெறிய கோத்திரம் தொண்டமண்டலம் யெளுவத்தி ஒன்பது வளநாடு, யிறுவத்தினாலு கோட்டத்துக்கும் பெறிய வீடு ரற்றிணகிரி, சிவாயம் யிந்த ரெண்டு காணி னிலைமையாக தந்து புஷ்ப்பக விமானத்தின் பேறில் பட்டண பிறவேசம் செயிது விறுது சிங்ககொடி, யன்னக்கொடி, நிசபக்கொடி, குயிலுக்கொடி, பஞ்சவற்ன்னடால், வெள்ளைக் கொடை, வுபய விண்சாமரம், வெட்டுப்பாவாடை, திமுறுதப்பு, வீரகண்டாமணி, வீர வெண்டயம் இது முதலான விறுதுகளும் குடுத்து, னாற்பத்தி யெண்ணாயிரம் குடியும் வறவளைத்து கட்டின யேறுக்கு ஒரு பணம் வறி குடுக்கும்படி வுத்திரவு செயிது அயினூறு குலவணிகறும் தலைக்கட்டு வறி சூரியகுல பணம் வீடு 1-க்கு ஆறு பணம் மேரைக்கு குடுத்து வறச்சொல்லி வுத்திரவு செயிதாற்கள்.

அதே மேரைக்கு பட்டம்கட்டி கொண்டு செட்டிவேணு ஓடையான்யென்று பேற்பிறசுத்திப்பட்டவறாயி காணியும் அனுபவிச்சு கொண்டு பட்டமும் அனுபவிச்சு கொண்டு வந்தார்கள்.

அதின் பிற்காலம், கலியுக சகாதம் 1100-க்கு மேல் றிஷபகிறி சோளன் மகளை சேறுமான் பெறுமாள் பாணிகிறஹணம் பண்ணிக் கொண்டபடியனாலே: சோளறாசவின் மகள் தனக்கு சீதனம் தன் தோப்பனாரை கேட்டது யென்னவென்றால், யெனக்கு சிறுது வேளாளற்குடி வேணுமென்று கேள்க்க னாற்பத்தியெண்ணாயிரம் குடி சீதனம் குடுத்தபடியனாலே சேறுமான் பெறுமாள் கொங்கு மண்டலத்துக்கு கொங்குவேளாளரென்று பேறும் குடுத்து, பிடாரன் வேணஒடையானுக்கு பட்டாபிஷேகமும் சூட்டி, யெண்ணாயிரம் கோத்திரத்துக்கு பெரிய கோத்திரம், யெண்ணாயிரம் வீட்டுக்கும் பெறிய வீடுயென்று கொங்கு மண்டலத்துக்கு அழைத்து வந்ததின் பேரில் இந்த யெண்ணயிரம் குடியும் கொங்கு மண்டலம் இறுளுரைந்த காண்டாவனமெல்லாம் வெட்டி இறுவத்தினாலு கோட்டத்துக்கு யிருவத்திநாலு நாடு இதுக்கு வுப கிறாமமும் வுண்டுபண்ணி யெண்ணாயிரம் குலம் வேளாளருக்கும் அயினூறு குல வணிகறுக்கும் காணினிலைமை உண்டுபண்ணி குடுத்துயிருக்கும் நாளில் இந்த கொங்கு மண்டலம் பாற்க்கவெண்டிய னிமித்தியம் சேறன், சோளன், பாண்டியன் மூன்று றாசாக்களும் தென்கரை நாட்டில் நாடு காண் மேடைக்கு வறுகும்போது யிந்த யிருவத்தினாலு னாட்டுக்குள்வுள்ள யெண்ணாயிரம் குல வேளாளறும் ஆயினூறு குல வணிகறும் சந்திப்பு செயும் வேளையில் திட்டிக்கிடாயி நேற்படாதபடியனாலே,

பூந்துரையில் பட்டம் ஆண்ட புடாரன் வேணு ஒடயான் பேறன் வேணு ஒடயான் தன் புள்ளையை வெட்டி கிடாயும் வெட்டி திட்டி கத்தினபடியனாலே, மூன்று றாசாக்களும் பிள்ளையை வெட்டினான்யென்று மிகவும் சந்தோஷப்பட்டு, ஆருகால் பீடத்தில் வைத்து பட்டாபிஷேகமும் செயிது இறுவத்தினாலு நாட்டுக்கும் பெறிய னாடு யெண்ணாயிறம் குலவேளாளறுக்கும் பெறிய குலம் புள்ளை வேணு ஒடயான்யென்று பெறும் குடுத்து, பட்டாபிஷேகமும் பண்ணி புஷ்பக விமானமும் மேல் பட்டண பிறவேசம் பண்ணி பொன்வூஞ்சலும் தந்து தென்ங்கரை நாடு யெல்லை, தலையனாட்டுக்கு மேற்க்கு, நறயனூற் நாட்டுக்கு வடக்கு, புங்கலூற் நாட்டுக்கு கிளக்கு, காங்கய நாட்டுக்கு தெற்கு, இந்த நால் சதிறத்தில் கிளமேல் முக்காதம் தென்வடல் இறுகாதம், யிதுக்குள்ப்பட்ட கிராமமும், 12ல் கொற்றைனூறுக்கு சேந்த சங்கரண்டான் பாளையம் கிறாம அஞ்சா நல்லுற் கிராமமும் இந்த ரெண்டு கிராமமும், கிளமேல் ஆறுனாளிகை வளி தென்வடல் னாலு நாளிகை வளிக்குள்ப்பட்ட ரெண்டு கிராமமும், நறயனூற் நாட்டுக்கு சேந்த சோளமாதேவி கிராமமும் இந்த மூணு கிராமமும்-உம்பிளிகையாக் குடுத்து தென்ங்கரை நாட்டு மகமையும் தயவு செயிது, தென்ங்கரை நாட்டுக்கு சேர்ந்த மத்த கிராமமும் அறமனைக்கு னிகுதிக்கு வுண்டான பகுதியும் குடுத்துக் கொண்டு தெங்கரை நாட்டு பட்டக் காறரெண்டு பேறும் குடுத்தாற்கள்.

அந்த நாள் முத தென்கரைநாடு பட்டக்காற்ரெண்டு பேற்பிறசுத்திப்பட்டவர்களாஇ, சங்கரண்டான் பாளையம் கிராம்ம் 1ம் அஞ்சா நல்லூற் கிராமமும்-1, நறயனூற் நாட்டில் சோளாமாதேவி கிராமமும்-1, இந்த மூணு கிராமமும் தெங்கரை நாட்டு மகமையும் எதாச்சாறியாகஇ அனுபவிச்சுக் கொண்டு – தென்கரை நாட்டுக்கு சேந்த மத்த கிராமங்களுக்கு அறமனையாற்கட்கு பண்ணின னிகுதிபடிக்கு மிகுதியும் குடுத்து கொண்டு சகல பிறுதுகள் ஆயுதங்களுடனே தெங்கரை நாட்டு பட்டக்காற வேணு ஒடயாக் கவுண்டற் யென்று பேற் பிறசுத்தி பட்டவராயி, மானியமும் மயிசூறு சமுஸ்தானம் கிறஷ்ணறாச ஒடையாற் அதிககாரத்து வரைக்கு அனுப்பிவிச்சு வந்தார்கள்.

அதின் பிற்க்காலம், அதுக்கு மயிசூறு சமுஸ்தானத்துக்கு கற்த்தறாகிய கற்த்தாக்கள் நாளையில் வும்பள கிராம்மும், மூணும் சபுத்தி பண்ணியெங்களுக்கு குத்தகை நிகுதி செயிவிச்சு குடுத்து, யெங்கள் பெறியோற்களுக்கு மானியம் தெங்கரை நாடு சங்கரண்டான் பாளையத்தில் புஞ்சைவம் 50-குறுச்சி கிராமத்தில் வம் 50 ஆக யிந்தரெண்டு கிராமத்திலும் னூறு வள்ளக்காடும் நாட்டு மகமையும் வும்பிளிக்கையாக தயவு செயிது மத்த கிராமத்தில் னிகுதி செய்விக்சு குடுத்தாற்கள் அந்தநாள் முதல் யெங்கள் வம்ச பறம்பரையாஇ மானியம் னூறு வள்ளக்காடும் மானியமாஇ அனுபவிவிச்சு கொண்டு மகமையம் அனுபவிச்சுக் கொண்டு கிராமங்களுக்கு அந்தந்த காரியத்துக்கு அந்தந்த்துரைகள் கட்டு பண்ணின மேரைக்கு நிகிதியும் செலுத்தி விச்சு, தென்ங்கரை நாட்டுப் பட்டக்காரர் வேணு ஒடயாக் கவுண்டன் யென்று பேற் பிறசுத்திப் பட்டவற்களாஇ சகல பிறுதுகளுடனேயும் துரைகள் வுத்திரவுபடிக்கும் நடந்து கொண்டு மானியமும் அனுபவிட்ச்சுக் கொண்டுமஹாராசஸ்ரீ கும்பிணியாறுக்கு சீற்மை சேந்ததின் பிறகும் ஹாறச றாச ஆறடீசு சாயபு அவற்கள் துறத்தனத்து வரைக்கும் மானியமும் மகமையும் அனுபவிச்சு கொண்டு வந்தார்கள்.

கொங்கு தேசத்தில் இறுவத்தினாலு நாட்டுக்கு பேற்களாண்ட விபரம்:

 1.  தென்ங்கரை நாடு
 2. பூந்துரை நாடு
 3. ஆர நாடு
 4. தலைய நாடு
 5. காங்கய நாடு
 6. வெங்கல நாடு 
 7. தட்டய நாடு 
 8. அண்டனாடு
 9. வய்யாபுறி நாடு 
 10. வாரக்க நாடு 
 11. ஆனைமலை நாடு 
 12. சோறக்கா வடிக்க நாடு 
 13. நல்லுறுக்க நாடு 
 14. பொங்கலூற் நாடு 
 15. நறயனூற் நாடு 
 16. வடகரை நாடு 
 17. உடுவங்க நாடு 
 18. காஞ்சி கோவில் நாடு 
 19. குறுப்ப நாடு 
 20. பூவாணி நாடு 
 21. றாசிபுற நாடு 
 22. அரைய நாடு 
 23. மண நாடு 
 24. வாளவந்தி நாடு

யிந்த யிறுவத்தி னாலு நாட்டிலேயும் முன்னூத்தி யெண்பது சிவாலாயமும் கொங்கேளு தேவற் சபைக்கு விபரமும்.....

 1. கரூறு—பருபதீஸ்வற சுவாமி 
 2. வெஞ்சமா கூடல் – விகுறுதீஸ்வர சுவாமி
 3. கொடுமுடி – மகுடீஸ்வற சுவாமி 
 4. அவனாசி – அவனாசி லிங்கற் 
 5. பாவனீகூடல் – னன்னா ஒடயாற் சுவாமி 
 6. பேறுரு – பட்டீஸ்வற சுவாமி 
 7. திறுமுறுகன்—ண்டி – முறுகனாத சுவாமி

கொங்கு தேசத்துக்கு யெல்லை விபரம்.

மறம் கௌக்கைலை-மதுக்கரைக்கு மேற்கு, வராஹகிறிக்கு வடக்கு வெள்ளி மலைக்கு கிளக்கு, பால மலைக்கு தெறுக்கு இந்த சதிறத்தில் கொங்குனாடு 24.

கொங்கு யிறுவத்தி நாலு நாட்டுக்கும் பெறிய வீட்டுக்காரனான தெங்கறனாட்டு பட்டக்காரனான வமிசாவளிப் பட்டங்களுடைய விபரமும் யிதின் கீள்யெளுதி வறுகுரது.Copyright © 2010 - 2017 konguvenadar.org