Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வள்ளிமுத்து வருகை<< >>மருந்து வகை
அவதானியின் ஆசை

பூவையை நாடிப் புனிதநீ ரூறுதெப்ப
வாவியின் மேட்டின்மேல் வந்துநின்றேன் – பாவைதன்
தாதிமார் வெண்கவுரி தான்வீசிச் சூழ்ந்து வர
கோதில்லாப் பந்துக் கொலுசுடனே – ஆதவன்
தன்சுடர்கள் போலத் தரளமணி மின்னலிடப்
பொன்கொலுசு பாடகம் பூண் சதங்கை – மின்னக்
கலீர்கலீ ரென்னவே கால்மெட்டி வைத்தே
ஒலிமுக வீட்டின்கண் உற்றாள் – வலையினுக்குள்
சிக்கியமான் போலத் திகைத்துநின்றே னவ்வேனை
பக்குவமாய்க் குஞ்சானும் பையவந்து – திக்கெனவே
ஆரென்றே கேட்டு அடுத்தென்னை யிங்குவரும்
காரியம்மா தென்று கடுகடுத்தான் –வீரியமாய்
பந்துமுலைச் சுப்பியெனும் பாங்கியவனைப்பார்த்து
லந்தநல் லோரை வரவேற்கா – திந்தவிதம்
யேசல் சரியல்ல யேசாதே யென்றதட்டி
கூசி மொழியேசிக் குறுகியே – மாசுடையோய்
கற்றோரை அந்தணரை கற்புடைய மங்கையரை
நற்றவத்தை யுற்றவரை நல்லோரை – பெற்றெடுத்த
மாதா பிதாவை மரபுதனில் உள்ளோரை
வேதாந்தச் சற்குருவை வீரியரை – தாதாவை
மூத்தோரை வேத முனிவோரை வந்தபயம்
காத்தோரை நல்ல கவிவலரை – பார்த்து மிக
துன்மார்க்க வார்த்தைகளைச் சொல்லார்கள் சொன்னவர்க்கு
நன்மார்க்க மில்லையென்பர் நானிலத்தோர் – முன்னி நீ
அஞ்சாமல் பேசாதே அப்பாலே போவென்று
குஞ்சானைத் தள்ளியே கோட்டு முலை – வஞ்சியேனும்
சுப்பி யெனையடுத்துச் சொல்லுமுங்கள் பேரென்ன
எப்பவந்தீர் உங்களூர் ஏதென்றாள் – செப்புகின்றேன்
கோயமுத் தூரில் குடியிருக்கும் குஞ்சய்யன்
சேயனுள் என்தமையன் சேசய்யன் – ஆயத்
துரை மணியம் செய்கின்ற சுப்பயரென் தம்பி
கரைவழி யின்மணியக் காரன் – கெருடயனும்
குப்பையரும் மைத்துனமார் கோட்டைக் குடியான
திப்பய்யர் என்சிறிய தோப்பனார் – செப்புகவி
சுந்தரய்யர் தாய்மாமன் சூலூர்த் தியாகய்யர்
தந்தனரே என்றனுக்குத் தன்மகளை – என்றன்பேர்
செந்தமிழைப் பாடியுரை செப்புகவி ராசனென்பார்
சொந்த மனை யாள்வெறுத்த சூழ்ச்சிபினால் – வந்து விட்டேன்
இப்பதியில் அப்பர மேசர் தனைத் தொழுது
செப்புமுகைத் தாசியவள் சித்திரம்போல் – இப்புவியில்
வேந்தர்துரைப் பாங்கா மிகவந்தாள் – பாங்கியெனும்
ஏந்திழை யேயவள் ரென்னென்றேன் – கூர்ந்ததமிழ்
கற்றீர்கொங் குத்தென் கரைநாடன் நற்குமர
ரத்தினவேணுட ராசதுரை – கொற்றனூர்
மாணிக்கி யென்ன வழங்கப்பேர் தான்கொடுத்த
காணிக்கு வந்த கனதனத்தை – ஆணிமுத்தை
மாரி தவத்தினால் வந்தவள்ளி முத்தென்று
பேருல கெலாமறிந்த பெண்ணரசை – நீரறி
யாதவரைப் போலே அவள்பெயர் கேட்கதென்ன
வேதியரே யென்று மிகவுரைத்தாள் – மாது தனை
நாடிவரு மாப்பிள்ளைமார் நங்கையவட் கெத்தனைபொன்
கூடிவிளை யாடக் கொடுப்பதென்றேன் – ஆடவரே
தாய்க்கிழவிக் கைம்பதுபொன் தாய்க்கிழவி யைப்பெற்ற
பேய்க்கிழவிக் கைம்பதுபொன் பேசியே – பார்க்குளொரு
காசொன்றுந் தப்பாமல் கற்றவரே முன்கொடுத்து
வாச மலர்க்குழலின் மாதுக்கு – நேசமுடன்
எண்ணூறு பொன்னுடனே என்றனுக்கு நாவலரே
தொண்ணூறு பொன்னும் தொனப்படியாய் – எண்ணிநீர்
தந்தாலே யான்தூது தையல்பால் சென்றும் மை
வந்தணையச் சேர்த்தியே வைப்பனென்றாள் – செந்துவர்வாய்
கன்னி பொருட்டினால் கட்டழகி சுப்பியவள்
சொன்னதொளாயிரத்து தொண்ணூறு – பொன்னதனை
ஓர்முடிப்பா யான்முடிந்தேன் ஒன்பதுபொன் தானழுவி
தாரணி யைச்சேர்ந்து தப்பினதும் – பாராமல்
கட்டிமுடித் துச்சுப்பி கைக்கொடுத் தனுப்பி விட்டேன்
தொட்டிமனைக் குள்ளிருந்து தோழிமார் – எட்டுப்பேர்
வந்தார் எனைத்தொழுதார் வாருமனைக் கென்றுரைத்தார்
குந்தாணி மொண்டிக்கால் குப்பியுமே – முந்தியே
சந்தனத்தை என்மார்பில் தான்பூசிக் சென்னிதனில்
சுந்தாஞ்சேர் மல்லிகைப் பூச் சூட்டினாள் – பந்துமுகை
சுப்பி இலைக்காய்ச் சுருளென்றன் கைக்கொடுக்க
செப்புமுகைச் சேமியே சித்திரம்போல் – அற்புதமா
வெண்கவரி வீசிவர மிக்கவண்ட மல்லாரி
பண்கட் டியம்தான் படித்துவர – எண்டிசையாள்
ராசனைப்போல் யானுமங்கே நல்ல மனதுடனே
வேசி மனைக்குள் மிகச்சென்றேன் – மாசில்லாச்
செம்பவளக் கால்நாட்டிச் செய்யமணிப் போதிகையும்
பைம்பொன் கொடுசமைத்த மண்டபத்தில் – கும்பமுகைத்
தாதிமார் திண்டொன்று தான் போட்டார் நான்பாக
சாதனனைப் போலங்கு சாய்ந்திருந்தேன் சூதாடும்
வட்டமுகை வள்ளிமுத்து மாதுமெனைக் காணவென்று
தட்டமதில் தாம்பூலந் தன்னுடனே மட்டுலவும்
மல்லிகைப்பூச் செண்டும் மருக்கொழுந்தும் சந்தனமும்
நல்ல வெலுமிச்சை நண்கனியும் – சொல்லரிய
விண்டலததை விட்டுவந்த மிக்கரம்பை தான்போல
கொண்டுவந்து முன்வைத்துக் கும்பிட்டாள் – ஒண்டொடியும்
மெத்தச் சுகியம்போல் மெள்ள ரகசியமா
அத்தைமகள் போல அறைகின்றாள் – வித்தாரத்
தண்டமிழ்ப் பாவலரே சந்நதிக்கு ளும் மைநான்
கண்டு மனதாகிக் காதலுற்று – வண்டமல்
லாரியைக்கூப் பிட்டழைத்து வாவென்றேன் என்னவுமூ
தாரிச் சிருக்சி சதிசெய்தாள் – நீருமதிற்
கோட்டைசூ ழப்பாமர் கூட்டி வந்து மெள்ள வெந்தன்
வீட்டில்விட்டார் அன்புநல மிக்கவே – தாட்டிகரே
வெட்கமென்ன வூர்வாவி மேட்டினிலே நிற்பானேன்
மைக்குழலி தூதென்ன மன்னவென்று – பக்குவமாச்
சொன்னாள்பா சாங்குத் தொழிலென் றறியாமல்
என்மனதில் மெய்யென் றிருந்துவிட்டேன் – கன்னியெந்தன்
முன்னிருந்தாள் பாங்கி முகத்தை மிகப்பார்த்தாள்
சன்னை தெரிந்தொருத்தி தானேடிக் – கி்ன்னரத்தைக்
கொண்டுவந்து தான்கொடுத்தாள் கோதை யவள்வாங்கி
பண்ட தனிற்பூதப் பாண்டியனை மண்டலத்தோர்
போற்றவே தான்கடிந்த புண்ணியன்மேல் கீர்த்தனைகள்
சாற்றினாள் நல்லவெல்லச் சாறுபோல் – நாற்றிசையில்
நற்றவஞ்சேர் வேதாந்த நாதனெனும் மன்குமர
ரத்தின வேணுடன் நயந்துரைத்த கொச்சகத்தைத்
தேனின் மொழிமாது செப்பிநின்றாள் – மானிடவர்
உற்பத்தி யாகுகின்ற வுற்பனமும் மாந்தர்கள் தாம்
கற்பதத்தைத் தானுண்ணுங் கைமுறையும் – அற்புதஞ்சேர்
தத்துவத்தின் தன்பிரிவும் தானந் தவநிலையும்
சித்தி பெறு மட்டகற்பஞ் செய்முறையும் – முத்திதரும்
முப்பாற் பொருள்முடிவும் மூல முதலாகும்
செப்பரிய வாசித் திறமைகளும், முப்பூவைச்
செய்யும் வரலாறும் தேன்மொழி யார்தவசும்
மையும் திலதமிடு மார்க்கமும், பையரவு
பூணும் மனோன்மணித்தாய் பொற்பீடத் தின்கொலுவை
காணும் புருவமையின் காரணமும், பேணுகின்றோர்
காட்சி பெறும்நிலையுங் கன்னிப்பெண் தான்படித்தான்
ஆச்சரியப் பட்டுமிகயானுமே – ஆச்சியெனத்
தங்கப் பதக்கமொன்று தந்தே னவள்தனக்குத்
தொங்குமுடல் தாய்க்கிழவி தோன்றியே – தங்கையில்
கோலொன்று தானூன்றித் கூன் முதுகைத் தான்திருத்தி
சாலமொட்டை முக்காடு தானணிந்து – சீலமுற
வாங்களெனக் கேட்டு மறைந்தாளோர் தூணமொன்றில்
யாங்கண்டு மாமி யெனவறித்து - பாங்காக
ராசதுரை மோடிகொண்டு நானிருந்தேன் – பூசுவிசு
வாசமிலாப் பொட்டிமகள் வார்த்தைசொன்னாள் நேசமுடன்
கற்றவரே நல்ல கவிராச சிங்கமே
நற்றவரே வந்திருக்க நம்வீடு – பெற்ற
தவமோ எனதுமகள் தன்தவமோ முன்னோர்
தவமோயான் செய்த தவமோ – சிவபெருமான்
சந்நிதியில் ஆடிமகள் தான்வந்த போதுமஞ்சந்
தன்னிலுறைகவுளி சாற்றியதும் – என்மனையில்
உச்சித்தெற் குப்பல்லி ஓயாமல் சொல்லியதும்
பச்சைமயி லோன்மாமி பற்குறியும் – நிச்சயமாய்க்
கோதைக்குக் கண்ணையர் கூர்ந்து படித்துரைத்த
சாதகம்பொய் யாது தமிழ்வலரே! ஈதல்லால்
கன்னியவள் தன்னிடது கண்துடிக்கு தென்னென்றாள்
மன்னவரைச் சேர்க்குமென்று மாதுடனே – சொன்னேன் நான்
அந்தப் படியே அருமைத் துரைமகனே
வந்தீர் மகளின் மனமறிவீர் – இந்தவூர்
தன்னில் பிறர்மனை தான்மிதியாள் செண்டுசெண்டாப்
பொன்னூறு தந்தாலும் பொய்யுரையாள் – சின்னநடப்
பொன்னும் பருவமிது பூவைக்கென் – றுன்னிதமாய்ச்
செப்பியே தாய்க்கிழவி சென்றாள்தன் வீட்டினுக்குள்
வெற்பிற் கனதனத்து மெல்லியலாள் – சப்பரத்தில்
பாயல் விரிக்கக்கண் பாங்கியர்க்குக் காட்டினாள்
நாயக்கச் சுப்பியது நன்கறிந்து நேயமுடன்
பள்ளியறையில் படுக்கை யலங்கரித்து
மெள்ளவந்து சைகை மிகச்செய்தாள் – கள்ளுலாம்
தாமரையைப் போன்றெளிசெய் தன்கையிலென் கைகோர்த்து மாமன்மகள் போலவே வள்ளிமுத்தும் நேயமுடன்
வீட்டுக்குள் வாருமென்றாள் மிக்கமனைக் குட்சென்றேன்
கூட்டுக்குட் சிக்கும் குறும்புட் போல் – வீட்டினுக்குள்
சித்திரவி சித்திரமோ செய்தபொம்மைச் சூத்திரமோ
சுத்திநிலைக் கண்ணாடித் தோற்றமோ – வித்தார
கச்சிப படலக் கவியடக்கு நன்நகரோ
மெச்சுநிலைப் பாவை லிளக்கமோ குச்சுவுடன்
அஞ்சுவர்ன வேலை அடர்ந்தமேற் கட்டியோ
பஞ்சிட்ட மென்மெத்தைப் பாயலோ – ரஞ்சிதமா
ஏற்றிய தீபமோ ஏந்தி மிகப்படிக்கம்
போற்றிப் பிடிக்கும்பொற் பாவையோ – நாற்சுவரில்
வேங்கைப் புலிக்கரணம் என்விதமோ சித்திரத்தில்
பாங்குபெறத் தாடனஞ்செய் பாவனையோ – ஆங்குள்ள
சம்பிரமம் தன்னையிங்குச் சாற்றமுடியாது சொன்னேன்
செம் பொன்னால் செய்தமஞ்சஞ் சென்றிருந்தேன் – வம்பியாம்
தாதிமார் நல்லவெள்ளித் தட்டமதில் தாம்பூலம்
கோதில்லாக் குங்குமம் சவ்வாது – தீதில்லாச்
சந்தனக் குழம்பு தமனியக் கிண்ணத்தில்
செந்தூரம் தங்கச் சிமிழதனில் கந்தமது
வெண்கடு தாசுதனில் மிக்க வெள்ளி டப்பியதில்
தண்புனுகு கத்தூரி தானுமே – சண்பசுமும்
மல்லிகைப் பூச்செண்டும் மருக்கொழுந்துங் கோதில்லா
நல்ல தொருசாதிநன்பூவும் – முல்லைப்பூ
பன்னீரும் நல்ல படிகத்தின் குப்பிதனில்
வென்னீரும் ஓர்குடத்தின் மிக்கவே முன்னமே
மங்கையர்கள் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போயினார்
செங்கமல மாமுகத்துச் செல்வியெனும் –சிங்கார
வள்ளிமுத்து வீட்டின் மணிக்கதவைத் தான்திறந்து
மெள்ளவந்தென் பக்கம் மிகவிருந்தாள் – கள்ளியவள்
பேசிப் புதுமணப்பெண் போலத்தான் மெள்ளவே
கூசி ரகசியமாய்க் கூறினாள் – நேசமிக
என்மடியில் தான்படுத்தாள் ஏந்தி யிருப்பவள்
தன்மடியில் நான்படுத்தேன் தானுரைத்தாள் – மன்மதன்றன்
சாத்திரத்தைத் தான்தெரிந்து சாமிநீர் தானணைந்த
நேர்த்தியைப்போ லேயொருவர் நேரந்ததிலை – பார்த்திதுநாள்
இந்திர போகத்துக் கீடாக நீரெமக்குத்
தந்தஇன்ப போகத்தைச் சாற்றலாம் உந்தமக்குத்
திட்டி படுமென்று சேயிழை கையுருவி
கட்டழகுக் கன்னமேல் கைநெரித்தாள் – கொட்டியே
கட்டிக் கரும்புபோல் கையா யுனதுறவை
விட்டுப் பிரிய விடேனென்று – செட்டியை
தெட்டின நீலியைப்போல் செப்புகின்றாள் தேன்போல
கெட்டியாய் மெய்யென்று கேட்டிருந்தேன் – வட்டமுலைக்
கன்னி பொருட்டினால் காயத்திரி மந்திரம்
தன்னை மறப்பனெனத் தானெண்ணி – என்னிவனைச்
சோதிப்பே னென்றெண்ணித் தொல்லிருளைத் தானகற்றி
ஆதித் தனும்உதய மாகினான் – மாதுமவள்
தன்னுடம்பு பூசியே தான்குளித்த மஞ்சளுமே
என்னுடம்பி லெங்கணு மேகலந்து – பொன்னுடம்பு
போலிலங்கக் கண்டு புளகித்தேன் சேலொடுவ
ராலினங்கள் பாயுமெழில் ஆன்பொருனை கோலநதி
தான்சென்று மோகநீர் தான் பெருக வேண்டிப்பூ
லான்கோலைக் கொண்டுபல் விளக்கினேன் – தேன் நிறைபூ
மொய்குழலை யேநினைந்து மூழ்கினேன் தாடனங்கள்
செய்யும் வகைநினைந்து சேவித்தேன் – சையோக
வித்தகியை விட்டு வெகுநேர மாச்சுதென்று
நித்தியகன் மத்தை நிறுத்திவிட்டேன் – மெத்தவுமே
ஆடவர்கள் தானகைக்க யானதிக சீக்கிரமாய்
நாடகப்பெண் வீட்டையே நாடிவந்தேன் – சூடகக்கைச்
சுப்பி யெதிர்சென்று தோகை மொழிப்படியே
அப்பையர் வீட்டிலன்னம் ஆச்சுதென்றே – செப்பொன்றில்
வாசத் தயிருமிக்க வாழைப் பழத்துடனே
ராசிபுரச் சர்க்கரையோர் நாழியும் – மாசில்லா
நெய்யுமொரு பாத்திரத்தில் நேரிழையாள் கொண்டுவந்து
அய்யரே வாரு மெனவழைத்தாள் – பய்யவே
போசனங்கள் செய்யுமென்றாள் போசனங் கொள்ளவில்லை
வாசத் தயிர்பசிக்கு வாங்கியுண்டு – நேசமுடன்
கையீர மாறுமுனே கன்னிவள்ளி முத்துடனே
சையோக பீடத்தில் தானிருந்து – வைபோக
சம்போகந் தானே சரிபோகங் கொண்டிரந்தேன்
வம்பக் சிழட்டோரி மாமியென்கைச் – செம்பொன்னைCopyright © 2010 - 2017 konguvenadar.org