Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வள்ளிமுத்துவின் பசப்பும் புத்திமதியும்<< >>வள்ளிமுத்தை விரும்புபவரின் தன்மை
கூடவேண்டியவர்

ஆயர் குலத்துக் கதிபன் சிவன்றனது
சேயனாம் நாச்சிமுத்துச் சீமானும் – தோயவிவண்
வந்திருந்து மெள்ள வசனிப்பார் நம்மளுக்குச்
சொந்தமவர் காசுதரச் சொல்லாமல் – அந்திமட்டும்
தூங்குமஞ்ச மீதில் சுரதவிதங் காட்டியே
தாங்காமல் சேர்ந்தனுப்பு தையலே – பாங்குடனே
இந்நிலத்தோர் போற்றும் இரத்தினதே வேந்திரன்மேல்
பன்னுதமிழ் செப்புகின்ற பாவலரும் – உன்மீதில்
ஆசைகொண்டு தான்வந்தால் ஆசையாய்ச் சேர்ந்தனுப்பு
காசொன்றுங் கேளாதே கண்மணியே – வீசுபுகழ்
கன்னன்இவ் வூருக் கருணைப் பதிபிள்ளை
தன்னை யழைத்துமஞ்சந் தன்னிலே – பொன்னவரைக்
கேளாமல் புல்லு கிளிமொழியே காமுகரைத்
தாளில் விழமருந்து தான்தருவார் – ஆளுகின்ற
வீட்டுவரி மாப்பாக விட்டிடுவார் தென்கரைநன்
னாட்டிற் சலுகை நமக்குண்டு – சீட்டுடனே
கிள்ளாக்கு நாட்டும் கெடியரசர் வந்தணைந்தால்
உள்ளாயங் காட்டுமுன் ஒன்றுசெப்பு – தெள்ளுகின்ற
மூவா யிரம்பொன் முடிப்புவைத்துக் காத்தாலும்
தேவரீர் பாத தெரிசனமே – யாவருக்கும்
சிக்குமோ மன்னவரே சிற்றரசர் கப்பணத்தில்
கைக்குள் அகப்பட்டுக் கண்டதென்று – பக்குவமாய்
தாசிமகள் சொல்முறமை தப்பாமல் தானுரைத்துக்
காசுகே ளாமல் கலந்தனுப்பு – கூசாமல்
நாள்தோறும் நம்ம நடுவீட்டுத் தெய்வமென்று
வேளாளர் வந்தால்நீ மேவிவிடு – பாளையப்
பட்டுத் துரைமக்கள் பட்சமுடன் வந்தணைந்தால்
மட்டடங்காச் செல்வமே வந்திடுமால் – இட்டமுடன்
உம்பளமும் தந்திடுவார் ஊழியஞ்செய் பாங்கிகட்குச்
சம்பளமும் தந்திடுவார் தையலே – நம்பிமிக
உத்தியோ கஸ்தர்வந்தால் ஓரிரவுக் கன்பதுபொன்
சுத்தாமல் சேராதே சுந்தரியே – மெத்தவுமே
தட்டார மாப்பிள்ளைமார் தான்வந்து பொன்கொடுத்தால்
தட்டாமல் வாங்கியணை தையலே – பட்டம் சேர்
சேருவை காரனவன் சேர்ந்தணைய ஆசை கொண்டால்
காரியமாய் நீயுங் கலந்தனுப்பு – வீரியணை
காசொன்றுங் கேளாதே காவாலி யாட்கள்வந்து
காசு கொடாமல் கலவிசெய்தால் – தூசணையாய்
மிரட்டி யடித்துதைத்து மேவிரைவில் பொன்னை
திரட்டாக வாங்கியே சேர்த்து – தரிக்குளியான்
மங்காமல் பொன்கொடுக்க வந்தால் அவனையுமே
தங்காமல் சேர்ந்தனுப்பு தையலே! – கங்குல்
கருமாடன் வந்துபணங் கையில் கொடுத்தால்
குருபீடம் போலெண்ணிக் கூடு – ஒருவேளை
சின்னாள தீரனுனைச் சேர்வதற்குச் பொன்கொடுத்தால்
பொன்னின் அளக்கரெனப் புல்லிவிடு – நன்னயஞ்சேர்
கோவிலய்யர் தன்னிலே கொற்றனூர்ச் சுப்பையனை
மேவு நமக்கும் விசுவாசம் – பூவனமே
குட்டியையன் ஆசைவைத்தால் கூடிவிடு ஊரவர்மேல்
பட்டிசொன்ன கொண்டயனைப் பாராதே – தட்டாமல்
மந்திரய்யர் வந்தால் வரவழைத்து வீட்டினுக்குள்
தந்திரமாய் சேர்ந்தனுப்பு தாழ்குழலே! உந்தனுக்கு
அய்யமார் சொன்னபணம் அட்டிவர மாட்டாது
தைமாதந் தந்திடுவார் தையலே – அய்யவுன்னை
ஆட்டிவைத்த நட்டுவனார் ஆசை கொண்டால் வாயிதழை
ஊட்டவிட்டுச் சேர்ந்தனுப்பு ஒண்டொடியே – வீட்டினுக்குள்
மத்தள வெள்ளையுந்தன் மாமனவன் வந்தாலுன்
அத்தையறி யாமல் அணைந்தனுப்பு – தித்திதனை
ஊதிச் சுதி கூட்டுவோன் உன்னாசை கொண்டுவந்தால்
பாதிரவில் கூடிவிடு பைங்கிளியே! சாதகமாய்
நஞ்சானைக் கூடுபொன் நாளையென்பான் நம்பாதே
குஞ்சான் பிணைசொன்னால் கூடிவிடு அஞ்சாதே
நாதசுரக் காரனைநா டாதே அவன்மகனைப்
போகவரக் கண்டாலும் பூணாதே – மோகமுற்று
மாலைகட்டி ஆசையாய் வந்தா லவனைநீ
மாலையிலே கூடிவிடு மாதரசே! – சாலமிக
ஓதுவார் வந்தாசை யுற்றேனென் றேதினால்
ஓதிவிடு நாளையென் றெண்டொடியே! மாதே
திருவேலை செய்கின்ற சின்னானும் நாடி
வருவான் அவனை மருவு – ஒருவேளை
சந்நதிக்கு வந்தவர்தாம் தாசிமே லாசைகொண்டால்
உன்வீடு காட்டிவைப்பான் ஒண்டொடியே! மன்னர்முன்னர்
சாட்சி சொலும் ரட்டாண்டி தான்வந்து காசுதந்தால்
ஏச்சவனைச் சொட்டுப்போ டேந்திழையே – தாச்சியில்லான்
ஆயியாண்டி யுன்மீதில் ஆசைகொண்டு காசுதந்தால்
வாயிலிதங் காட்டி மருவிவிடு – நேயமுடன்
கைக்கோளார் வந்துனையே காதலித்தால் கைமுதலைக்
கைக்கொள்ளு மட்டும் கவர்ந்துவிடு – வெக்கமென்ன
வத்தாக் கிணறுபோல் வைத்திருந்து பொன்கொடுப்பான்
எத்தாத தாசன்வந்தா லேந்திழையே! முத்தையர்
தன்னுடனுன் பாட்டியுண்டு தானுமுண்டு நானுமுண்டு
பொன்கொடுத்தால் நீயும் புணர்ந்து விடு – சொன்ன மொழி
மாறாத மாப்பிள்ளைமார் வந்தால் அவர்தமக்குச்
சாராய முட்கொளவே தான்கொடுத்துப் – பூரணமாத்
தன்னினைவு தோன்றாமல் தானிருக்கும் வேளையினில்
பொன்முன்னூ றென்றால் பொழிந்திடுவான் –அன்னேரம்
பொன்னே யணைந்துவிடு போதை யதுதெளிந்த
பின்னே யதுபற்றிப் பேசிடான் – உன்னிடத்தில்
மாப்பிள்ளைமார் பொன்கொடுத்து வந்தணையும் போதுதண்டல்
சேப்பிள்ளையான் வந்துசைகை செய்திட்டால் – தோப்புமுகைப்
பாட்டியன்ன முண்டதுவும் பார்த்து நடைக் கதவைப்
பூட்டிவாரே னென்று புறப்பட்டு – வீட்டுமுனை
வாசல் தனில்சென்று வந்தபொன்னை வாங்கி விசு
வாசமுடன் அந்தரங்க வார்த்தைநீ – பேசியே
கொஞ்சி விளையாடிவிடு கோதையே வீட்டினுக்குள்
பஞ்சணை மீதுசென்று பாங் கனையும் – ரஞ்சிதமாய்
கூடிவிளை யாடிக் குலாவி யணைந்து விடு –
பாடினால் அத்துயர்போம் பாவையே! தேடியுணும்
வேசிகளில் பக்கத்து வீட்டிருக்கும் காமாக்ஷித்
தாசிமகள் குப்பமுத்துத் தானுமே – நேசமுடன்
வந்தமாப் பிள்ளையரை வாழ்த்தித் துதிப்பதுவும்
தந்திரமா வீட்டினுள் சம்பரத்தில் – அந்திமட்டும்
கூடுவதும் கொஞ்சுவதும் கூடிவிளையாடுவதும்
பாடுவதும் ராகம் பனுக்குவதும், தேடிவருங்
காமுகர்தங் கையிருக்குங் காசெல்லாம் வாங்கி வைத்துப்
பூமியினி லேவிளக்கம் பெற்றுவிட்டாள் மாமயிலே
கோதையே மானே குலவித்தை கல்லாமல்
பாதிவரும் ஒருவர் பாருலகில் – போதிக்க
வேணுமோ பொற்கொடியே மெல்லியலே யென்றுபுத்தி
பூணிக்கவே யனந்தம் போதித்தாள் – காணிக்குத்
தான்வந்த தையலுமே தாய்புத்திக் கெண்மடங்காத்
தானுமிக வுத்தியது தான்படைத்தாள் – மாநிலத்தில்
காமுகர்தம் மோகக் கடல்தனிலே தண்டமென
மாமுகையைக் கம்பமா நாட்டியே – காமகலை
என்றமுத்தம் பூட்டி யிருகக் கயிறுகொண்டு
துன்றுமதன் கையால் சுழற்றியே – நன்றுபெற
வாயிதழின் நீருட்டி மாப்பிள்ளைமார் தம்பொருளைப்
பாயமுதம் போலப் பறிக்கலுற்றாள் – நாயகியாள்
தன்மன துக்கேற்ற தாதிமார் குள்ளியென்றும்
சொன்னவுரை மாராட்டச் சோபியென்றும், பன்னுகின்ற
வார்த்தை தனிற்பனுக்கும் மாமதுரை எத்தியென்றும்
தோத்திரப்பா சாங்குசெயுஞ் சுப்பியென்றும், தூத்துகிற
வண்டமல் லாரியென்றும் மாரீசக் கள்ளியென்றும்
குண்டுணிசொல் லும்மொண்டித் குப்பியென்றும் – கண்டதொரு
மாப்பிள்ளைமார் தம்மை மயக்கி யழைத்துவரும்
தோப்புமுகை கொண்டமுத்துச் சொக்கியென்றும் – கேப்பமா
ரிக்கள்ளி யென்றும் இணங்கவருங் காமுகர்க்குச்
சொக்குப் பொடிபோடும் தூதியென்றும் – வெக்கமற்ற
தஞ்சை நகரத் தசுக்கியென்றும் பிச்சியென்றும்
கஞ்சாசா ராயக்கைக் காரியென்றும் – கொஞ்சிப்பொன்
தாராத மாப்பிள்ளையைத் தண்டிப்பார் தாசிமுகம்
பாராத பேரையுங்கை பார்த்திடுவார் – காராரும்
ஆகாசந் தன்னில் அணைகட்டி வைத்திடுவார்
வாகான தாதிமார் வாழ்த்திடவும் – நாகரிக
வள்ளிமுத்துந் தெட்டில் மனதுவைத்து வந்தமாப்
பிள்ளைமார் பொன்னைப் பிடுங்கலுற்றாள் மெள்ளவள்தன்
செந்துவரின் வாயூரல் தேனுண்டும் மாகனகச்
செந்தனத்தைக் கொண்டும் சிறப்பாக – விந்தையாய்
தாமரையைப் போன்ற தனது முகஞ் சேர்த்தும்
காமனது மோகமதைக் கண்ணதனில் – நேமமுடன்
கண்சேர்த்தி மெல்லக் கனிவாக முத்தமிட்டும்
பண்புடனே காமகலை பாராட்டிக் – கொண்டணைய
வேனுமென்று சிந்தை மிகக்கொண்டு பொன்னூறு
காணிக்கை தான்முடிந்து காப்பாரும் – பேணி வள்ளி
முத்து மோர் முத்தமிட்டால் மூவேழ் தலைமுறையில்
தெத்தமெலாம் தொண் டெனவே செல்வாரும் சத்தகடல்Copyright © 2010 - 2017 konguvenadar.org