Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
அவதானியின் ஆசை<< >>பொன் கவரத் திட்டம்
மருந்து வகை

தன்னெலும்பு செந்நாய்த் தலைகழுகின் முன்மூக்கு
வன்னமயிற்கால் வரிப்புலியின் – தன்நகங்கள்
பச்சோந்தி வாலும் பருவரணை தன்மலமும்
சிச்சிலிதன் னீரலும் செய்யானும் – பச்சைக்
கிளிமூக் குடும்புவால் கெண்டைமீன் கண்ணும்
முளியான் நரித்தொண்டை மூளை – குளியாத
கல்லெலிப் பல்லும் கரடிப் பிடரித்தோல்
நல்ல கரும்பூனை நாவிரத்தம் – வல்லானைக்
கோடுசெம் பூத்துக் கொழுப்பு சிவல்காடைப்
பேடுநுரை யீரல் பறப்பிச்சு – கூட
வருச்சாளி நற்றலை வலியான் கொழுப்பு
சருவான நாரைவத்தல் சத்தி – துருவாம்
கருவெல்லாங் கொண்டுவந்து கைமுறைதப் பாமல்
ஒருமாதம் வெய்யில் உணர்த்தி – பருமிடா
வில்லிட்டு மேல்மூடி மிக்கமண் செய்துபினர்ச்
சில்லிட்டுத் தூரிலே சின்னதாய் – கொல்லைக்குள்
வெட்டிக் குழிபறித்து மிக்ககருக் குன்னிலொரு
சட்டி வைத்து மேல்மூடி தட்டெருவோ – டட்டியின்றி
ஆயிரத் தெட்டும் அடுக்கிப் புடம்போட்டு
நேயமுடன் மிக்கமண்ணை நீக்கியே – காய்ச்சிய
காரித் தயிலத்தைக் கைக்கொண்டு வீடுசென்று
ஆரவைத்து நல்லெண்ணை ஆவுநெய்யும் – சேரவே
நாலி லொருபங்கு நன்மையாய்த் தான்கலந்து
சாலவே சிற்றடுப்புத் தானிட்டு – மேலே
குளம்பிட்ட சட்டிவைத்துக் கூட்டுதயி லத்தால்
வளம்பெற விளக்கெரித்து வாகாய் – விளைந்தவொரு
மையதனை வாங்கி மகள்தனக்குப் போதித்துக்
கையினில் தந்திட்டாள் கைக்காரி – பொய்மையல்
உற்றவள்போல் சுண்ணாம் புடன்கலந்து எந்தனுக்கு
வெற்றிலையில் தந்திட்டாள் மிக்கவே – பற்றிமனம்
பேராசை கொண்டுநான் பித்து மிகப்பிடித்தேன்
சாராயந் தான்குடித்த தன்மைபோல் – நேரிழையைக்
காணா திருக்கக் கருத்துமிகக் கூடாது
பேணாது மற்றோரைப் பேசாது – பூணியொரு
வேற்றிடஞ் செல்லாது மிக்கரசங் கொள்ளாது
கீற்றுநுத லாள்கையில் கிட்டியே – நேர்த்தியாய்க்
காமபூசை செய்து கருத்தில் மகிழ்வதல்லால்
நேமபூசை தன்னையே நீக்கினேன் – காமியவள்
குத்து முகைபிடித்துக் கொஞ்சுங் கலவியல்லால்
நித்தியகன் மத்தை நிறுத்தினேன் முத்தமிடும்
கிஞ்சுகவாய்க் கன்னியுடன் கேரள லீலையல்லால்
அஞ்செழுத் தோதல் அகற்றிவிட்டேன் – ரஞ்சிதப்பெண்
Copyright © 2010 - 2017 konguvenadar.org