Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வழக்குரைத்தல்<< >>வேணுடன் பங்காளர்
ரத்னமூர்த்தி வேணுடமன்னரிடம் செல்கவெனல்

கொங்குநா டாளுகின்ற கோமான் பெரியகுலத்
துங்கனென வந்த சுபலளிதண் – இங்கிதஞ்சேர்
பூந்தேர்பொன் னூஞ்சல் புகழ்கீர்த்தி யாதிபதி
சாந்தன் புவியரசர் தான்பணியும் – ஆய்ந்தகவி
வாணர் கலியகற்றும் மாமதன னானசெட்டி
வேணுட னீன்றசீர் விற்பனமால் – நீணிலத்தில்
மூவேந்தர் சூடும் முடிபெற்றேன் அன்பனெழிற்
பூவேந்த னென்று புகழ்பெற்றான் – தேவருடன்
இன்னிலத்தோர் போற்றும் இரத்தினதே வேந்திரன்மேல்
பன்னுதமிழ் மாலையது பாடினால் – சொர்னமுடன்
யானை புவிசிவிகை ஆடைமுத லாபரணம்
தானே தருவரெனத் தானுரைத்தான் – யானவர்பால்
சென்றேன் இடப்பால் செகரட் சகனென்னும்
வென்றிக் கருப்பணனும் வீற்றிருந்தான் – குன்றெனவே
மும்மதங் கொண்டு முழங்கிவீ றிட்டுலவிச்
செம்மைக் கடகயத்துக் சேனைநிற்க – தம்முறவே
பஞ்சக் கதிகொண்டு பாய்ந்துசண்ட வேகமுற்று
கொஞ்சும் நடப்பரிகள் கூடிநிற்க – மிஞ்சுபுகழ்
இந்திரவி மானமென எண்டிசையோர் கொண்டாடும்
சுந்தரஞ்சேர் புட்பரதந் தோன்றி நிற்க – விந்தைமிகு
வேலும் எறியீட்டி மிக்கதண்டு நீள் சவளம்
கோலும் உடைவாளும் கொண்டுமே – சாலவே
விற்றெழிலின் மிக்காம் விஜயனுக்கு நேரான
சுத்தவீ ரர்கள் தொழுதுநிற்ப – உற்றமணி
சிங்காச னாதிபதி தீட்சணமு லாவுகன
துங்க விஜயரண சுந்தரிகன் இங்கிதவான்
வேதாந்த முற்றுணரு மிக்க குமணனென
நாதாக்கள் போற்றவளர் நாகரிகன் – மேதகவின்
ராசன் எனுங்குமர ரத்தினவே ணுடதுரை
நேசமுடன் யாவரும் நின்றேத்த – தேசம்



Copyright © 2010 - 2017 konguvenadar.org