Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
விருத்தம்<< >>யாத்திரை
இரத்னமூர்த்தி தசாங்கம்

வங்காளர் சிங்கர் மருவு கெவுடருடன்
கொங்கணர்கள் போற்றிடுயர் கோசலரும் – சிங்களரும்
மச்சர் கலிங்கர் மகதர் குருதருடன்
கொச்சை மிகுகுறும்பர் ஒட்டியரும், செச்சைபுனை
எல்லா வரசர்களும் ஏத்தித் துதிபுரியும்
சல்லாப மிக்குடைய தாரணிவான் – மல்லாரும்
சங்கெறியும் நீர்சூழ்ந்த தாரணியில் வந்துதித்த
கொங்கணராம் சித்தர் குடியிருந்த – பைங்கனக
சித்த ரசவாதம் செய்யக் குருமுடித்து
வைத்ததெனும் பொன்னூதி மாமலையான் – நத்துடனே
ஆனை மருப்பினையும் ஆணிமுத்தும் கொண்டு வரும்
மாநலத்த ஆன்பொருனை மாநதியான் – தேனூறும்
பூமடந்தை வாழுமொரு பொன்னுலகம் நேரான
நாமகள்வாழ் தென்கரைநன் னாட்டினான் – நேமமுடன்
கல்லா தவரைக் கடிந்துகலை கற்றுணர்ந்த
நல்லா ருலவு கொற்றை நன்னகரான் – சல்லாப
சங்கீத லீலா சரசகுண மோகமுறும்
மங்கைமனப் பூங்குவளை மாலையினுன் – கொங்குதனில்
மீரியிரு கண்சிவந்து மிஞ்சிமத மோங்கி
வாரிக் கவள மதையுண்டு – பாரில்
நெகிளந் தரித்து நிழல்சுளித்துப் பாகன்
அகங்குழைய வீரிட்டண் ணுந்து – பகைவரை
காய்ந்து இருப்புலக்கை கைகொண் டடித்துளக்கித்
தோய்ந்த முடியைத் துணித்திடரி – வாய்ந்த கொற்றை
வீதி தனிலுலவி வீர மணியசைத்து
கோதிப் பிறைபோன்ற கோடிலங்க – நீதியாய்
மேகம் அசைந்துவரும் விந்தை யெனக்குலவும்
வாகை புனைந்த மதகயத்தான் – யோகமுற்று
திண்புவியில் மன்னர் திறமுற்று வாழ்வுபெறப்
பண்புபெறும் மேழிப் பதாகையான் – எண்டிசையும்
சத்த முகில்திரண்டு தானே ஒலிப்பதுபோல்
முற்ற மதில்முழங்கும் மும்முரசான் – நித்தநித்தம்
மெய்ப்பாதம் போற்றியே மிக்கவருள் தான்பெருக
அப்பரமர் சீர்பாதத் தாணையான் – இப்புவியில்
மூவேந்தர் கூடி, முதல்வீட னுமெனவே
பூவேந்த னாகிப் பிரபலிக்கப் – பாவாணர்
போற்றும்வே ளாளர் புகழ்விளங்கெண் ணாயிரத்தால்
சாற்றும் பெரியகுலத் தாட்டீகள் – ஆற்றல்
மரபுதனில் நீதி வழுவாமல் செய்து
திரமுடனே கொண்டணைக்கும் சீமான் – வரமுயர
சீரார்முடி சூட்டித் தேசத்தோர் தான்பணிய
பேராரும் மும்முடியே பெற்ற மன்னன் – பாராரும்
பட்டாபி ஷேகன் பரராஜ ராஜபரன்
அட்டதிசை போற்று மகளங்கன் – வட்டப்
பதுமமுக கெம்பீரன் பாக்கியசம் பன்னன்
மதுரமது கூர்ந்த வசனன் – துதிபெருகும்
யோக சுபலளித உத்தண்ட கெம்பீரன்
வாகன்அபி ராமன் மகுடேசன் – யூகமிகும்
மன்னன் பெரியகுலன் மார்க்கண்டன் வண்டமிழ்க்குச்
சொர்ன முதவுந் துரந்தரிகன் – நன்னயஞ்சேர்
பூந்தே ரிலகுபசும் பொன்னூஞ்சல் பெற்ற மன்னன்
சாந்தகுண சீலன் தயாளபரன் – பாந்தமுடன்
நாற்றிசையில் உள்ள நரரும் சுரருலகோர்
போற்று மண்டலாதிபதி போசன் – சாற்றரிய
தேவாதி தேவன் திரிபுரசம் மாரன்
பாவாணர் போற்றும் பரந்தாமன் – பூவுலகோர்
வன்னிப்புக் கேற்ற வடிவன் மகராசன்
சொன்னமொழி மாறத் துரந்தரிகன் – இந்நிலத்தோர்
போற்று சிவாயம் புகலிருகா லூருடனே
சாற்றரிய நன்முருங்கைத் தன்பதியும் மாற்றமுயர்
காகம் விளக்கேற்றி கற்புசித பாலதொழு
யோக மிகுங்கொற்றை யூருடனே – பாகமுடன்
நங்கைகுகை மண்குழியும் நல்வளஞ்சேர் பொன்னூதி
தங்கமுயர் ஊதியூர் தன்பதியும் – இங்கிதஞ்சேர்
சோழமா தேவியுடன் சொற்குறிச்சி யெந்நாளும்
வாழுபொம்ம நல்லூர் வளநகரை – ஆளவே
காணியென வந்துதித்த காண்டீப ராசதுரை
வாணி புகழ்பெரிய மாகேந்த்ரன் – நீணிலத்தில்
தண்டமிழோர் போற்றும் சடைய பரமேசுரராம்
பண்டிதனார்ப் போற்றும் பரந்தாமன் – எண்டிசையில்
வண்டமருங் கூந்தல் வளரும்செல் லாண்டியம்மை
தண்டா மரையாம்நற் றாள்பணிவோன் – தண்டுடனே
வாங்குகைச் சூரி வளைதடிகட் டாரியுடன்
ஓங்கு பெருஞ்சவளம் ஈட்டியுடன் – பாங்குபெறு
வேலும் உடைவாளும் மிக்கசரம் போர்விலுடன்
சூலமழு தண்டு துணையுடையான் கோலமிகு
கண்டகோ டாலிகொண்ட கையுமா வாகுவுடன்
வண்டப் புரவி மதமூன்றும் – கொண்டகரி
துட்டப்ப டைசூழ் துரைகருப்ப ராயரைத்தன்
இட்டமுள மந்திரியே யென்றழைப்போன் – அட்டதிக்கில்
ஆசார போசன் அகளங்க செட்டிமன்னன்
பூசா பலத்துதித்த புத்திரன் – தேசமதில்
பற்றலரெ னும்பூத பாண்டியனை யேகடிந்து
நற்றலத்தில் கீர்த்தி பெற்ற ரத்னமன்னன் – வெற்றிசெறி
தென்கரை நன்னாட்டில் தேவனென வந்துதித்த
நன்பெரிய கோத்திர ரத்னமன்னன் – தென்புடனே
மாற்றலர்கள் தன்னை மணிமுடிகள் தான்சிந்த
நாற்றிசையி லூருபரி ரத்னமன்னன் – கீற்றுமதி
சென்னி தனில்முடித்த தெய்வப் பரமருட
சந்நதியில் சைமிகத் தான்விளங்க – பன்னு மறை
வேதர் தழைத்தோங்க மேதினியில் வேணுடன்
ஓது தமிழ்பெருகி யோங்கவே – மாதவத் தோர்
செய்யும் பலனுமிகச் சிந்திக்க ஞானமுடன்
மெய்யும் புகழும் விளையாட – வையகத்தில்
நன்றி பரவிமிக நாடோறுந் தான் விளங்க
குன்றம லேசெல்வங் கூத்தாட – என்றும்
புகழ்விளங்குங் கொற்றைப் புரம்விளங்க வானோர்
பகைசிந்தி விண்ணில் பரவ – மிகவுமே
மேதியினில் வேளாளர் மிக்குத் தழைத் தோங்க
தீதில்லா மன்னர் செயம் பெருகக் – கோதில்சீர்
மாகனகச் செப்புமுலை மாதர் நடனமிட
மோகனப்பெண் பல்லாண்டு மூதுரைக்க – மேகமென
மும்முரசு தானும் முழங்க முனிவோர்கள்
தம்மனதி லன்பு தழைக்கவே – இம்மையினில்
துங்க நளின துரைரத்ன மூர்த்திமன்னன்
செங்கோ லரசு செலுத்துநாள் – கொங்குதனில்
அவதானியின் பிறப்பு முதலியன
கோனம்மன் மேவிய கோயம்புத் தூரிலுறை
சீனய்யன் பெற்றெடுத்த சேயனான் மானிலத்தில்
ஈரே ழொருநான்கு என்ற வயதினுக்குள்
ஆரியந்தெ லுங்கும் அருந்தமிழில் – சீருலவு
பிங்கலந்தை தன்னுடனே பெருமைத் திவாகரமும்
துங்கனெனும் காங்கயவேள் சொற்றதொகை – இங்கிதமா
மண்டலவர் தம் நிகண்டில் வந்த பொரு ளெல்லாம்
கண்டே களங்கமறக் கற்றுணர்ந்து – விண்டலத்தில்
ஓங்கும் பொதிகைமுனி யோது மகத்தியமும்
பாங்குபெறு நன்னூலின் பாங்கறிந்து – தாங்காமல்
தொல்காப் பியநூல் தொகைப்பொருளெ லாமறிந்து
வல்லமைசேர் வக்கணைவிண் ணாணமுதல் – சொல்லரிய
கற்பனைய லங்காரம் கண்டசுத்தி பாமடக்கு
முற்பின் திரிபும் முழுதறிந்து செப்பரிய
புவிராசர் மெச்சிடப் தலத்தில் யானும்
கவிராச னென்றுகனம் பெற்றேன் – தவமுடையோர்
தீதகற்றும் சூலூர்த் தியாகரய் யன்பெற்ற
மாதை மணஞ்செய்து வாழுநாள் – வேதனும்
மாதவனும் இந்திரனும் மாமுனிவோர் போற்றுபட்டி
நாதர் வளர் பேரையெனும் நன்னகரில் – சூதாடும்
வட்டுநகி லேந்தும் மதிவதனத் தாசிகளில்
கட்டழகி குப்பியின்மேல் காதல்கொண்டேன் இட்டமுடன்
கூடியே இன்பரசங் கொண்டாடும் ஆசையினால்
நாடித் திரிந்தேன் ரகசியத்தில் – ஆடவரில்
சுந்தரய்யன் மைந்தன் துணைக்கொண்டு தானெருநாள்
தந்திமுகை வேசியவள் தன்வீட்டில் – சொந்தமதாச்
சென்றிருந்து வந்தேன் சிறுவனும் என் வீட்டில்போய்
மன்றல் புரிகுழலி மாதரசே – உன்கணவன்
பேரைநகர் சென்றுசிவ பெம்மானைப் போற்றிசெய
வாருமென் றென்னை வரிசையாய்க் கூறியே
கூட்டிப்போ யெந்தனையும் குப்பியென்ற தாசியவள்
வீட்டிலே முன்திண்ணை மீதிருந்தத் – தீட்டமென்ற
குப்பிகொச்சி மஞ்சள் குளித்துமே நீராடி
செப்பரிய கெண்டையிட்ட சேலைகட்டி – ஒப்புரவாச்
சீவிக் குழல்முடித்து செய்யதங்கக் குப்பியிட்டு
பூவும் மருக்கொழுந்தாம் போதணிந்து – ஆவலுடன்
வேல்விழிக்கு மையிட்டு வெண்மதிபோல் நன்னுதலில்
நீலத் திலகமுடன் நீறணிந்து – சாலவே
காதுகளில் வச்ரமணிக் கல்முருகு பொன்னேலை
சாதிமுத்துக் கொப்புடனே தானணிந்து – கோதில்லா
மூக்குத் தழுக்கிட்டு முத்தாரப் பூண்நகில்மேல்
சேக்கப் பவளவடம் சேர்த்தணிந்து – தீர்க்கமுடன்
கையில் கனகவளைக் கட்டும் பவளுருட்டும்
செய்ய மணிக்கடகம் சேர்த்தணிந்து – அய்யமெனும்
சிற்றரையில் ரெட்டரைஞாண் சேரவே தானிருக்கி
உற்ற அரவிந்த ஒள்ளடிக்குப் – பெற்றதொரு
பொன் சதங்கை தண்டை புகழ்பாட கம்அணிந்து
நண்பு பெறுங்கொலுசு நன்றாக்கி – அன்புடனே
மெட்டிகை மிஞ்சியுடன் மீன்பீலி யிட்டகால்
மெட்டியே தானடைந்தாள் வீட்டினுக்குள் – பொட்டெனவே
அய்யர் மனைக்குள் அவள் பக்கந் தானடைந்து
பய்யவொரு வார்த்தை பனுக்கினார் – தையலவள்
வீட்டுக்குள் சென்று மிகுந்த இசைகலந்த
பாட்டு மெல்ல மெல்லப் படித்தார்கள் – மேட்டிமையாள்
பாதத்திற் பூண்ட பணிகள் பல சத்தமிடப்
போதகத்தின் நன்குரலைப் போல் காட்டி - ஏதேதோ
இன்ப விளை யாடலெலா மேற்றினாள் ஐயருமங்
கன்பு ததும்ப அகமகிழ்ந்து என்றன்பால்
வந்து வெளியிலெனை வாவென்றார் வந்தனனென்று
சுந்தரய்யன் மைந்தனவன் சொன்னதனால் – எந்தன்மனை
வெங் கோபங் கொண்டாள் வெறுத்தாள், கடுகடுத்தாள்
பங்கங் கெடவார்த்தை பாடினாள் – சங்கரர்வாழ்
பேரையூர்க் குப்பிதன்பால் பேசிக் குலாவுமென்றே
மேரைகெட வார்த்தைகளை வீசினாள் சீருமனை
யாட்டியுடன் வாழாமல் அங்கிருந்த காஞ்சனத்தை
கோட்டுமத யானைமேல் கொண்டருளி – நாட்டில்
விருப்பமுடன் ஈசன் விளங்கும் தலமாம்
திருப்பதிகள் காணத் தியானித் தொருத்தனுமாய்Copyright © 2010 - 2017 konguvenadar.org