Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
பொன் கவரத் திட்டம்<< >>தாய்க்கிழவியின் சண்டை
சாட்டுப் பொங்கல் செலவு

எசகடப் பொங்கலுக்கு ஏழ்சலகை நெல்லும்
விசிதமிகுங் கம்புமிடாப் பத்து – பசுவின்நெய்
பத்துவள்ளம் பின்னும் பலநெய்யும் பத்துவள்ளம்
சுத்தவெல்லந் தான்துலாம் தொண்ணூறு – வெற்றிலையோ
ரன்பது கட்டும் அலகு களிப்பாக்கும்
ஒன்பான் துலாமஞ்சள் ஓர்துலாம்- இன்பரச
வாழைக் கனிலட்சம் மாங்கனியா றாயிரமாம்
நீளக் கரும்புமீ ராறுலட்சம் – கோழிமுட்டை
எண்ணூறு கோழி எழுநூறு சாவலுநற்
றெண்ணூறு கடாய்தொ ழாயிரமாம் – பெண்ணுக்கு
நாழிப் பணத்தினால் நாவலரே நல்லதொரு
சாளிகைப் பொன்னால் சரடுமொன்று – கேளுமென்
தம்பிவெங் கானுக்குத் தான்முத்துப் போட்டதனால்
செம்பொன் குடமொன்று சிற்றிடைக்கும் – பைம்பொன்னால்
ரட்டரைநாண் வேண்டினது நாளைக்கே வேண்டுமென்று
பட்டி யெழுதிவைத்தாள் பைந்தொடியாள் – ஒட்டுக்கு
எண்ணூறு லட்சத்தி னேழாயிரமான
தொண்ணூறு பொன்வகைக்குஞ் சொல்லினாள் – எண்ணியே
கொண்டவந்த காஞ்சனத்தைக் கொட்டினேன் அவ்வீட்டில்
விண்டலத்தை ஓங்கிவளர் வெற்பினைப்போல் – ஒண்டொடியைப்
பெற்ற கிழட்டோரிப் பேழ்வாய்நீ லிக்கிழவி
உற்ற திரவியத்தை யுங்கண்டு – பற்றரவுற்று
ஆவலாய் ஆளி அடுத்த முயல் மீதில்
தாவுதல்போல் வாரிமிகத் தானெடுத்துத் – தீவிரமாய்
இட்டுவைத்தாள் பெட்டகத்தில் இட்டாள் கடாரத்தில்
இட்டாள்கைத் தூம்புகளி லெங்கெங்கும் – பொட்டிமகள்
அங்காங்கே பொன்னை அடக்கமாய்த் தானொளித்து
தொங்கமுகை தான்மறைத்துத் தோன்றியே – துங்க
மகவா னிடத்திருக்கும் மாதருவே யென்றன்
மகளைச் சவுகரித்த மன்னா – பகரக்கேள்
மைப்பொருவு கூர்விழியாள் மாமாது தன்னைநீ
கைப்பிடித்துக் கொண்ட கணவனீர் – எப்பொழுதும்
மன்னன் வேணுடதுரை மாகீர்த்தி தான்போல
இன்னிலத்தே வாழ்ந்திருங்கள் என்றுரைத்து – பொன்மனைக்குள்
சென்றாள் ரதியும் சிலைமதனும் போலவே
குன்றுமுலை மாதின்பம் கொண்டிருந்தேன் – நன்றாகச்
சங்கரன் பொங்கலென்றும் சஷ்டி விரதமென்றும்
இங்கிதஞ்சே ரேகா தசியென்றும் பொங்குமுதல்
ஆடிநோம் பென்றும் நடுவாடிநோம் பென்றுகழு
வாடிநோம் பென்றுமமா வாசியென்றும் – நீடுகதிர்
ஆதித்தன் பொங்கலென்றும் ஆதிரையாம் நோம்பென்றும்
சாதிச்சவ் வாதுக்குத் தானென்றும் – கோதில்லா
சந்தம் புனுகுசவ் வாதுகஸ் தூரிமஞ்சள்
விந்தை தரும்வெட்டி வேரென்றும் – பந்துவில்தன்
மாமனெனுங் குட்டி மணியக்கா ரன்றனக்குச்
சோமனுரு மாலுடன்துப் பட்டியென்றும் – காமியவள்
தன்னிடைக்கு ஏற்ற சரிகைக்கண் டாங்கியென்றும்
மின்னு முகைக்குவடம் வேண்டுமென்றும் – தன்னுடைய
தங்கை தனக்குச் சரிகைப்பா வாடைதம்பி
வெங்கனுக்குக் கம்பியிட்ட வேட்டியென்றும் – தங்க
நகைக்கென்றும் வெள்ளி நகைக்கென்றும் வர்க்க
வகைக்கென்றும் வாமவகைக் கென்றும் – தொகைகள்பல
ஆட்டுக்குகு கோழிக்கு வாய்க்குருசி யானகரு
வாட்டுக்கு நல்லபசு மாட்டுக்குச் – சாட்டிநிதம்
பாலிற் கலர்நீரைப் பண்பா யகற்றியன்னம்
சீலமென் பாலுண்ணும் செய்கைபோல் – சேல்விழியாள்
சீராக வெந்தன் திரவியங்கள் உள்ளதெல்லாம்
ஓராண்டு தன்னில் உரிஞ்சிவிட்டாள் – பாரில்
அறத்தை மறந்து அவனியாள் வேந்தர்
திறத்தில் மெலிவபோல்சீ ரானேன் – உரத்துப்
பெருங்குளத்து நீரைப் பெருமடைவாய் வாங்க
வெறுங்குளம்போ லாகி மெலிந்தேன் – இருந்ததாம்
பொன்னெல்லாம் தந்தேன் புகலாய் வளர்த்தெடுக்கும்
அன்னையில்லாப் பிள்ளைபோல் ஆயினேன் – என்னிடத்தே
தோப்புமுகைத் தாய்க்கிழவி தோன்றியே நேற்றின்றும்
சாப்பாட்டுக் கொன்றில்லைத் தானென்றும் – வாய்ப்பாட்டில்
நின்றாள் பதையாமல் நெட்டுயிர்ப்புக் கொண்டிருந்தாள்
சென்றாள்பின் சென்றாள் திடுதிடென்று – குன்றுமுகைக்
கன்னிதனைப் பார்த்துக் கடுகடுத்துப் பற்கடித்து
என்னடி பாப்பா னிடத்திருநீ – பொன்னுனக்கு
அந்தக்கா லத்தனக்கு அய்யர்கொடுத் தாரதனால்
இந்தக்கா லம்வரைக்கும் ஈடுசெய்தேன் – சந்தைக்கு
சாண்வயிற்றுச் சோற்றுக்குத் தானேபடியளக்கும்
வீண்பிலுக்க னேதருவான் மெல்லியலே – காண்பனென்றாள்
கூனி யுனக்குக் கொடுத்திலையோ வென்றேன்நான்
தானவளைப் போலே சளங்கொண்டு ஏனடா
Copyright © 2010 - 2017 konguvenadar.org