Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வேணுடன் பங்காளர்<<
தென்கரை நாட்டு ஏழ்முதன்மையர்

காண்டீபங் கைப்பிடித்த காவலவ கோத்திரத்தில்
பாண்டியனாம் ராவுத்த பாக்கியனும் – வேண்டுபுகழ்க்
கோமான் குழாய குலத்தில் மிகவுதித்த
சீமான் பெரியண்ண தீட்சணனும் – பூமேவும்
ஆந்தை குலதிலக னான பெரியணனும்
வேந்து சிலம்பண்ண விற்பனனும் – பாந்தமுறும்
சேர குலதிலக சீமான் குமாரரத்ன
மாரன் இளைச்சியண மாபதியும் – தீரனெனும்
செம்பூத்த னென்ற குலதிலகன் தென்பொதிகைக்
கும்பனெனும் நல்ல குமார்முகிலும் – அம்புவியில்
மன்னன் முதலி மகீபன் வசியகுலக்
கன்னன் அபிராம காண்டிபனும் – இந்நிலத்தில்
தீரா வியாதிதனைத் தெண்டித்துத் தான்துரத்தும்
பேரான் புகழின் பிரபலனும் – சீர்பெரும்
தன்வந் திரிக்குநிகர் தானெனவே சாற்றுபுகழ்
நன்மந் திரிமுத்து நல்லவனும் – அன்னதரு
வான பெரியணனு மன்பாக வந்துதித்த
மானபரன் குட்டி மகீபதியும் தானிவர்கள்
ஏழ்முதன்மை யாகி எதிர்த்தவரை வெற்றிகொண்டு
வாழ்வார்கள் தாங்கொற்றை மாநகரில் – நாள்தோறும்
வேந்தர் பணியும் விருதுமகு டாசலனும்
வாய்ந்த கரட மதகயத்தான் – ஆய்ந்தகவி
பல்கலைதான் கற்றுணர்ந்த பாக்கியவான் இம்முடியான்
சொல்புவியில் கீர்த்திபெற்ற தூயகுணன் – வெல்பலவான்
கர்த்தனெனுங் காடைநகர்க் காங்கயண மன்றாடி
சுத்தரண வீரதுரந்தானும் – புத்திமிகும்
காமனெனுங் நற்குமர காங்கயந ராதிபனும்
பூமிபுகழ் காரைநகர்ப் பூபாலன் – சேமநலம்
சொல்லுங் கவிவாணர் தொண்டனெனக் கீர்த்திபெற்ற
நல்லதம்பிச் சர்க்கரையும் நாடுமெழி – செல்வன்
இதம்பரவுங் கங்கைகுல ஏந்தலருட் கன்னன்
சிதம்பரப் பல்லவனும் சோ்த்து – நிதம்புகழ்சேர்
பூசகுலந் தன்னில் வருபூபதியா குந்திருவின்
வாசன் சிவன்மலைம கீபதியும் – தேசின்
தருமனெனும் ராமயனும் சாற்றுமவி நாசிப்
பருவமத சேரலனும் பாரில் – திறமையுள
நாக ரிகனான நல்ல குமார்முகிலும்
வாகைபெறும் பொற்பதத்தை வாழ்த்திநிற்ப – மாகனகக்
கூடலூர் வெண்டுவ கோத்திரத்தில் தானுதித்த
நீடுபுகழ் நல்லண்ண நேயனுடன் – நாடுமெழில்
சின்னையம கீபதியும் செய்யபொங்க லூர்நாட்டில்
நன்னயஞ்சேர் ஓதாள நற்குலவான் – பொன்னிதிய
சீமான் கொடுவாயூர்ச் சீர்முத்துச் சின்னையனும்
கோமா னெனுங்கண்டி யன்கோயில் – காமனெனும்
வாகைமுத்து மல்லையனும் மல்லையந ராதிபனும்
நாகரிக நற்குமர ரத்தினமும் – யோகமிகு
சுப்பயந ராதிபனும் சொர்னமிகுங் குண்டடத்தில்
செப்புபுகழ் கோபால தீட்சணனும் – விற்பனவான்
ராமயவ சீகரனும் நாவலர்க்குப் பொன்னுதவும்
வீமனெனும் சுப்பைய விதட்சணனும் – நேமமுள
மாமண்ட லாதிபதி மன்னர் பணிசரணன்
சோமன் பெரியகுல துங்கனெனும் – காமனிகர்
ராச னெனுங்குமர ரத்தினவே ணுடதுரை
வாசற்ப்ர தானியாய் வந்தமுகில் – லீசுபுகழ்
அன்புபெறுங் காடை அழைப்பித்த பூபதியும்
தன்மன் குறிச்சிசின்னத் தம்பியுமே – இன்பமுடன்
போற்றிப் பணிந்துமே பொற்பதத்தை வாழ்த்திநிற்ப
நாற்றிசையுங் கீர்த்திபெற்ற நாகரிகன் – மாற்றறியா
வீமன் சிவகிரிவேன் விற்பனவான் வெங்கிட்ட
ராம னுடன்சாமி நாதனிவர் – நேமமுடன்
நாட்டுக் கணக்கரென நன்மையுடன் போற்றி நிற்ப
தாட்டிகவான் கொங்குத் தமிழ்க்கவிசொல் – மேட்டிமைப்
பட்டாபி சேகமுயர் பண்புகவி தானுரைக்கும்
இட்டகுங்கு மக்கவி ஏந்தலும் – அட்டதிக்கில்
பேரான் புகழிற் பெரியணவ சீகரனும்
சீராய்த் தமிழ்பாடிச் சேர்த்து நிற்ப – வீர
மறவரிட வம்மிசத்தில் மாவீர னான
திறனார் சிவகிரிச் சேர்வை – விறலமைந்த
வேல்சேர்வைக் காரனும் வேணுட பூபதியாம்
மால்பதத்தைப் போற்றி வழுத்திநிற்ப – நால்திசையோர்
அன்பாய்ப் பணிந்தே அனைவரும் போற்றிசெய
இன்பமுற வாழு மியல்பினான் – நன்புகழ்சேர்
தாலம் புகழ்ந்து நித்தம் சாமியென வேதுதிக்கும்
ஞாலம் அரசுபுரி ரத்தினவேள் – தாலமதி
ஆண்டகையின் நற்சமுகம் அண்டியே அப்பெருமான்
பூண்டபுகழ் தன்னைப் பொருத்தமுடன் – வேண்டிமிகக்
காட்சிக் கெளிய கருணைக் குணக்குன்றே
மாட்சி யுடனாளு மன்னவனே – ஆட்சியதைக்
கொங்குலக மெல்லாருங் கொண்டாட வேபுரியும்
தங்கமே தானடைந்தார்த் தாங்குகின்ற – துங்கமிகும்
மும்மன்னர் தந்திலகு மும்முடிகொள் மூர்த்தண்ட
தெம்மன்னர் கானொளிப்பச் செய்தவனே செம்மைசெறி
நற்குணஞ்சேர் வாணிகரை நாடுகடத் தித்துரத்தும்
அற்பகுணஞ் சேர்கொடுங்கோ லாட்சிபுரி – தற்புகழ்சேர்
மன்னவர்தம் கற்கோட்டை மாநிலத்தில் தூள்படுத்தி
வன்னமுடன் வெற்றிகொண்டு வாகையுடன் – நன்மைபெறு
சிட்டரெனும் வைசியரைச் சேமத்தே ரேற்றிவந்த
செட்டிவே ணுடனெனும் சிங்கமே – அட்டியின்றி
வேண்டியார் வேண்டியன தந்திந்த மேதினியில்
பூண்டகொடை வள்ளலெனப் போற்றுகின்ற – நீ்ண்டபுகழ்
துங்கா பெரியகுலத் தோன்றலே என்னாளும்
மங்காத கீர்த்திபுனை மன்னவனே – கொங்குடனே
இந்நிலத்தோர் போற்றும் இரத்தினதே வேந்திரனே
பன்னு தமிழ்க்குதவு பாக்கியனே – நன்மைமிகும்
பட்டாபி சேகா பராக்கென்றேன் அங்கிருந்தோர்
அட்டாவ தானியிவ ராமென்றார் – இட்டமுடன்
பாடிப் பிரசங்கம் பண்ணினேன் எள்முகத்தை
நாடிச் சபாசெனவே நன்றுரைத்து – நீடுதங்கக்
கண்ட சரமுங் கடுக்கனுடன் மேல்முருகும்
வெண்டரள மாலையுடன் மென்கொலுசும் – செண்டரளி
முத்துத் துறாயிரண்டும் முன்கை முதாரியுடன்
சுத்துதங்க மோதிரமும் துய்யரைஞாண் – சத்துடனே
சாலுவைபீ தாம்பரமும் சர்வா பரணமுடன்
மேலான சோமன் மிகமிகவே – ஞாலமதில்
மெச்சு மிருநிதியம் மிக்சு சிவிகையுடன்
கச்சிப் புரவி கருணையுடன் – பட்சமதாய்த்
தந்தார் இவையெல்லாஞ் தான்பெற்றேன் பொன்னுடனே
சிந்தை மகிழ்ந்து திறமுற்றேன் – பைந்தொடியே
நீர்கொண்டமேக நிறங்கொண்ட பைங்குழலே
வார்கொண்ட பூண்கொங்கை மாதரசே – பேர்கொண்ட
கோதில்லா வென்றன் குலமடந்தை தன்னிடத்தில்
மாதேநீ தூது சொல்லிவா.

ஸ்ரீ மான் இரத்தினமூர்த்தி வேணுடர்மீது
பல்லக்கேறும் செல்லக்குமார் புலவர் பாடிய
விறலிவிடு தூதுCopyright © 2010 - 2017 konguvenadar.org