Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
தாய்க்கிழவியின் சண்டை<< >>ரத்னமூர்த்தி வேணுடமன்னரிடம் செல்கவெனல்
வழக்குரைத்தல்

தன்னைக் கலியாணந் தான்செய்து கொண்டாற்போல்
என்னமருந் திட்டானே யிப்பார்ப்பான் – என்மனைக்கு
வந்திருந்த நாள்முதலாய் வாய்வார்த்தை சொல்வதல்லால்
தந்ததொரு காசுண்டே தான்கேளீர் – வேசியரில்
பேசரிய வென்மகளைப் பேய்போல் பிடித்துநித்தம்
காசுதரா மற்கலவி கொண்டிருந்தான் – பேசிமுனம்
என்னகுறை செய்தேனே என்மகளா லோர்காணி
பொன்னறியே னென்று புலம்பிமெத்த – கண்ணியரே
நாரணய் யங்காரே! நாரணஆச் சாரியரே!
பூரணய் யங்காரே! பொன்னையரே! ஆரணஞ்சொல்
வெங்குவைய சோதிடரே! மீனாட்சி வேதியரே!
சங்கரய் யங்காரே! தானையரே! - கொங்குதனில்
ராச னெனும்குமர ரத்னவே ணுடதுரை
வாச முறுங்கொற்றை மாநகர்க்கு – நேசமுடன்
மாணிக்கி நாவினிற்பொய் மாற்றமுரை யாளெனவே
நீணிலத்தில் தானறிவீர் நீங்களுந்தான் – வீணுக்கு
வைப்பெனவே யென்மகளை வைத்தான்பொன் தாராமல்
இப்பவுமே லம்பலத்தில் ஏத்திவைத்தான் – சற்பனையாய்
தந்தமருந் தென்னவோ தானறியேன் ஓராண்டுள்
வந்தறியாள் சந்நிதிக்கு மாமாது – முந்தாநாள்
தாதை திதியென்றே தையல் தனையெத்தி
மோதிரத்தை வாங்கி முடிந்துகொண்டான் – ஈதல்லால்
தங்கம்போல் தாம்பரத்தைத் தான்செய்வே னென்றுமகள்
கங்கணத்தை வாங்கிக் கடையிலிட்டான் – கொங்கணர்சொல்
அஞ்சனத்தால் பண்டுமுதல் யானெடுப்பே னென்றெனது
வஞ்சி சரத்தைவிற்றான் மாபாவி – குஞ்சானைக்
கேட்டால் தெரியுமவன் கிள்ளுமா ராட்டமெலாம்
நாட்டார் அறிந்தால் நழுவவிடார் – தாட்டிகரே!
ஊசிக்குத் காதும் உடும்புக்குத் தன்வளையும்
தாசிக்குத் தம்மூரே தாயென்பர் – தேசத்தார்
ஆதலால் கூசாமல் யானுரைத்தேன் என்முறையை
வேதியரே யென்று மிகவுரைத்தாள் – வாதுபெறுங்
கூனி யுரைத்த கொடுமையெலாந் தான்கேட்டு
தானவளை அச்சபையில் தான்நிறுத்தி – தாணையரும்
சோசியரும் நும்வழக்கைச் சொல்லுமென்றார் அன்புவிசு
வாசமில்லாப் பட்டிமகள் வார்த்தைக்குப் – பேசியிட
வாயுமெதி குண்டோநன் மாதவரே பேயான
ஞாயமில்லாத் தாசியின்சொல் நன்றுநன்றே – தீயகுண
மாதரை யீன்றெடுத்த மாநீலி தன்னுரைக்கு
யாதுமொழி கூறுவேன் அந்தணரே! காதலதால்
தாசிதனை வைப்பவர்க்கு தாரணியில் மேன்மையுடன்
காசுநட்ட மென்பதுவுங் கைகண்டேன் – நேசமுடன்
சம்பரித்த பொன்னையிந்தச் சண்டாளிக் கீய்ந்ததை
அம்பலத்தில் சொல்லியினி யாவதென்ன? – நம்பிக்கை
தப்பிக் கொடுமைபுரி சண்டாளி தன்னுரையை
செப்பமாய்க் கேட்டுத் தெளிவுற்றீர் – இப்புவியில்
மாதவரே நீங்கள் வழுத்துமொழி கேட்பனென்றேன்
வேதியரும் என்பால் விளம்புவகை – நீதிசேர்
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலமயல்
மாதர்மேல் வைக்கும் மனமென்றே – ஓதினநல்
அவ்வை மொழிமறந்தீர் ஆகையால் அம்பலத்தில்
இவ்வகையா வந்தீர் எனவுரைத்துக் கொவ்வைவாய்த்
தாசி சினேகமதைத் தள்ளென்றார் நல்லதென்றேன்
வேசியை வீட்டுக் கனுப்பிவிட்டு – ராசனுக்குத்
தன்தேச மல்லால் சிறப்பில்லைக் கற்றவர்க்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பாகும் – என்றந்த
வேதியர்கள் தாமனுப்ப வெம்பி மனதுழன்று
ஆதரவு சொல்வதினி யாரென்றே – வீதிசென்றேன்
மெத்தவிசு வாசம் மிகுந்தஅண் ணையர்கண்டு
நித்யகவி வாணரே நீர்சுகமோ – இத்தனைநாள்
எங்கிருந்தீர் என்றே எனைக்கேட்க மாதுசெய்த
சங்கதிகள் உள்ளவெலாஞ் சாற்றினேன் – அங்கவரும்
கூத்தியவள் செய்த கொடுமையெலாங் கேட்டுவெகு
நேர்த்தியென்று மேநகைத்து நேசமுடன் – பார்த்தீரோ
முந்திநாம் சொன்ன மொழிமறந்தீர் ஆனதினால்
இந்தவகை யுற்றீர் இயம்பக்கேணம் – சுந்தரஞ்சேர்Copyright © 2010 - 2017 konguvenadar.org