Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
கூடவேண்டியவர்<< >>வள்ளிமுத்து வருகை
வள்ளிமுத்தை விரும்புபவரின் தன்மை

உண்ட முனிவனைப்போல் ஓங்குமுலைக் கன்னிதன்னைக்
கண்டுபொன்னைத் தந்து களிப்பாரும் கொண்டு வந்து
பூங்குழலாள் கேட்கின்ற பொன்கொடுத்து இந்திரன் போல்
தூங்குமஞ்ச மீதில் தொடர்வாரும் – ஓங்கு நகில்
மங்கையைத் தன்கை வசம்பண்ணக் கல்லெலிவாழ்
வங்கதனைத் தேடி மகிழ்வாரும் – தங்தமதைக்
குப்பல் குப்பலாகக் கொடுத்து விட்டுச் சாடையாய்
தெப்பவாவி மேட்டில் திரிவாரும் – அப்போது
நாளையென்று தூதுசெப்ப நாடி வடுகமரா
பாளையத்தில் சென்று படுப்பாரும் – வாள்விழியாள்
தன்னைப் புணர்ந்த மென்றே தன்வயிர வாசமதில்
பொன் மஞ்சளூட்டிப் புணர்வாரும் – மின்னிடைசேர்
மோகப்பெண் கையில் முதலையெல் லாங்கொடுத்து
மேகப்புண் கொண்டு மெலிவாரும் – மோகப்பெண்
தன்னைப் பிரியாமல் தானிருந் தோம் தாய்க் கிழவி
என்னைப் பிரித்துவைத்தா ளென்பாரும், பொன்னவட்கு
தந்தே னவளெனக்குத் தந்த பிணீயதனால்
நொந்தனெனச் சொல்லிமனம் நோவாரும் – அந்திமட்டும்
கெண்டைக்கண் மாதருடன் கோள லீலையினால்
அண்டசூலை கொண்டே அலைவாரும் – கெண்டுகெண்டா
எத்தனைபொன் தந்தாலும் ஏந்திழையா ளெப்போதும்
பத்தமிலை யென்றே பழிப்பாரும் – சத்தியத்தைச்
சொல்லா ளொருவருக்கும் சொன்னாலிவள் மொழியும்
கல்லின்எழுத் தென்றே களிப்பாரும் – வல்லமையால்
தன் பக்கஞ் சென்று நின்றேன் சந்நதிக்குள் ஆடினாள்
என்சொல்வேன் மஞ்சள்மணம் என்பாரும் – அன்பது
பத்தெருது விற்றேம்பின் பால்மாடு நூறுவிற்றேம்
எத்தனையோ விற்றோம்நா மென்பாரும் தத்தும்
பரியெருத்தை விற்ற பணத்தையெல்லாம் குட்டிக்
கொருமித்துத் தந்தோமென் பாரும், சரிவளைபூண்
கைமாதுக் காகக் கடன்பட்டோம் கட்டவில்லை
தெய்வமே யென்று திரிவாரும் – துய்ய விழி
யாள்தந்த நீர்க்கடுப்புக்கு ஆமணக்கு எண்ணையுண்டு
ஏழுநாள் பத்யம் இருப்பாரும் – வாள் விழியாள்
தந்த அனுபோகத்தில் தான் சூடு கொண்டேகி
வந்தரணந் தீரமருந் துண்பாரும் – செந்தனக்
கன்னி பொருட்டினால் கை முதலைத் தோற்றமென்று
என்னினைவுந் தோற்றிலையே என்பாரும் – கன்னிகையில்
பொன்னையல்லாந் தந்துவிட்டு பொக்கணந் தானெடுத்தோம்
என்னிருக்க என்னசெய்தோ மென்பாரும் இந்நிலத்தில்
தாசிதனைச் சேர்வதும் சாராயமுண்பதுவும்
தேசழியச் கோழிப் போர் செய்வதும் – காசுக்கு
சேதமென்று முன்னோர்கள் செப்பினது மெய்யல்லால்
பேதமில்லை யென்றுதான் பேசுவதும் – சூதுமுலை
வஞ்சிதனைச் சஞ்சரித்து வந்தநோய் தீருதற்கு
குஞ்சான்றன் எண்ணை குடிப்பாரும் – வஞ்சிக்கு
ஏன்கொடுத்தோம் பொன்னதனை ஏழமையினாலுடம்பைத்
தான் கெடுத்தே மென்றே தவிப்பாகும் - மாநிலத்தில்
தேடி வைத்த பொன்னை யெல்லாக் தேவடியாட் கீந்தமென்றே
ஓடெடுத்துச் சோற்றுச் குழல்வாரும் – வீடுகட்டி
வைத்தோமா வைத்திருந்து வாழ்ந்தோமா பொன் கொடுத்து
குத்தகையா யூர்வாங்கிக் கொண்டோமா – பத்தியுடன்
ஆலையங்கள் கட்டி அவனிதனிற்பேர் பெருகச்
சீலமுள்ள புண்ணியத்தைத் தேடினமா – சால
நடை நீரு பாய்ந்தினிது நாள்தோறும் சென்னல்
திடமான நன்செய்வளந் தேடிக் – கொடை கொடுத்துச்
சீர்பெருகு நாவலர்க்குச் செய்தோமா நாடெங்கும்
பேர்புகழ வைத்துப் பிழைத்தோமா – ஊரதனில்
வட்டிக்குத் தந்தோமா மாதுக்கேனீய்ந்த மென்று
முட்டி யுடன்மூச் செறிவாரும் – பொட்டிமகள்
காமுகர்தம் கையிருக்குங் காசெல்லாம் வாங்கி விட்டாள்
நாமுமொரு நாளவளை நாடியே – சாமமதில்
போயினோம் வீட்டுக்குள் பொன்கேட்டாள் நாளையென்றோம்
தாய்க் கிழவி யென்னவோ சன்னை செய்தாள் – வாய்க்காது
நாளைக்கு வாருமென்றாள் நம்மளுக்கு மேநல்ல
வேளையினால் தப்பினோம் மேன்மையதாய்க் – கேளுங்கள்
நாவலரே யிப்படிச்செய் நாரியவள் தான்நாளும்
சேவகம்செய் கோயில் தெரிசிக்கப் – போவதுவும்
எப்படிக்கா ணென்றே எடுத்துரைத்த அண்ணையர்க்குச்
செப்புகின்றேன் யானும் தெளிவு பெற – இப்புவியில்
வீரசிம்மம் ஆனதை வேழமது வென்றிடுமோ
காரிபத்தைத் தாமரைநூல் கட்டிடுமோ – நீரெனது
சிந்தை தெரியாது செப்புகிள்றீர் வாருமென்றேன்
வந்தார் கையாளை மணையில்வைத்து – சுந்தரஞ்சேர்
ஆன்பொருனை யாற்றில்நீ ராடிவெண்மை நீறணிந்து
பாம்பணிந்த ஞானப்பரம் பொருளை – நான் மனதில்
கும்பிட்டேன் அன்புடனே கோவிலுக் குச்சென்று
எம்பிரான் தென்னீசர் ஈரடியுந் – தம்பாகத்
தேற்றும் அகிலாண்ட ஈஸ்வரியார் தம்பதமும்
போற்றிப்பணிந்து புகழ் கொண்டு – நாற்றிசையோர்
கொண்டாடும் பேர்பெரிய குங்குமத்தாய் தன்பதத்தைக்
கண்டுதரி சித்துக் கைதொழுது மண்டபத்துள்
வேந்தன் பெரியண்ண வேணு வுடையானைச்
சேர்ந்து தமிழ்பாடிச் சேவித்துக் – காய்ந்தகதிர்
வேலும் எரியீட்டி மிக்கதண்டு வாள் சூரி
கோலுட னேகண்ட கோடலியும் – சூலமழு
சிங்காடி வில்லும் சிறப்பாகத் தான் படைத்த
சங்கிலித் கருப்பண்ணன் தாள்பணிந்து, திங்களணி
சங்கரனார் தானீய்ந்த சந்தை தனில்மேவும்
ஐங்கரனைப் போற்றி யடிபணிந்து – பொங்கமரில்
வெட்டிக் கெலிவுபெற்று மேதினியில் கீர்த்திகொண்ட
செட்டியண்ண மான் தெரிசனமும் எட்டெழுத்துள்
நிர்த்தமிடும் ஆனந்த நேமிஅபி ராமியெனும்
அத்தனூ ரம்மன் அடிதொழுது – நித்தமதில்
உத்தண்ட மாகவளர்ந் தோங்கு கருப்பணனைச்
சத்தகன்னி மாரையும் தான்தொழுது பத்தமுடன்
முக்குத்தொட் டாடியசீர் வேழ முகத்தானைத்
திக்கெட்டுங் கொண்டாடும் செல்விதனை – மைக்குழலி
கோட்டைவாழ் மாரியம்மை கோவிலினைச் சுத்திவந்து
நாட்டிலெனை ரக்ஷியென்று நான்தொழுது தீட்டுபுகழ்
பச்சிம வாகினிப்போ்ப் பண்புகொண்ட சந்நிதியில்
பச்சமுடன் ஸ்நானம்நான் பண்ணியே- நிச்சயமா
நட்டாற்றின் ஈஸ்வரனை நான்தொழுது மாமதுரை
வெட்டிச் சயங்கொண்ட வீரயனை ஒட்டிப்
பணிந்து கொண்டே வந்துபரா சத்திஅங் காளை
குணமுடனே கண்டுகும் பிட்டு வணமுடனே
பொன்சரக் கொன்றை புனைந்துகம்ப மேவுதிருக்
குஞ்சரக் கன்றையுங் கும்பிட்டு – அஞ்சலுடன்
முன்துரட்டு வாசல் முகப்பைவிட் டுப்புகுந்து
எம்பிரான் அப்பரம ஈஸ்வரனைத் – தன்பதத்தை
நம்புகின்ற பாவலருக்கு நாரிபக்கந் தூது சென்ற
தம்பிரான் என்றேத்தித் தாள்பணிந்து – அம்பரத்தில்
வித்தார மாகவே மிக்கசெங்கோல் செய்து வரும்
முத்துக் குமாரையும் முன் துதித்து, மெத்தவுமே
வஞ்சக் கரன்றன் மணிமுடியைத் தான்துணித்த
செஞ்சக் கரமாலைச் சேவித்து – தஞ்சமென
நாச்சிமுத்து நட்டுவனார் நாவறுத்து மிக்கவுமே
காட்சி பெறுமிடத்தைக் கண்டேத்தி – ஆச்சரிய
நன்பெரிய நாயகியார் நாறு மலர்ப்பதத்தை
அன்புடனே கண்டுதொழு தர்ச்சித்து – நன்குமர
ரத்தினவே ணுடதுரை ராசனுக்கு வேதாந்தச்
சற்குருவாங் கொங்கணர்தந் தாள்பணிந்து – நிற்கவுமேCopyright © 2010 - 2017 konguvenadar.org