Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வள்ளிமுத்தின் தோற்றம்<< >>வள்ளிமுத்துவின் பசப்பும் புத்திமதியும்
வள்ளிமுத்தின் பருவ விளையாடல்

தண்டை யசையவே தன்றன் மகள்நடப்ப
கண்டுவண்ட மாரி களிப்புற்றாள் – கொண்டிமகள்
தன்னிடுப்புக் கேற்ற சரிகைச்சிற் றாடைகட்டி
முன்பின்னும் விஸ்தார முத்தமுடன் – நந்கரில்
வீதியெலாஞ் சுற்றி விளையாடு கின்றதனைக்
கோதில்லாப் பாட்டிகண்டு கொண்டாடி – மாதரசே!
தேனே கொடியோர்கள் திட்டிபட்டு விட்டதெனத்
தானுமே திட்டிசுத்தித் தாமரைப்பூ - வாணகைக்குச்
செம்பவள மட்டேதான் செய்ய மணிக்கடகப்
பைம்பொன் வளையலிட்டுப் பாதமதில் விம்பவெள்ளித்
தண்டை சிலம்பு சதங்கை மணிக்கோவை
கொண்ட சரமுங் கொலுசுமிட்டு – மிண்டு விரல்
மிஞ்சியிட்டு மார்புக்கு வெண்டரள மாலையிட்டு
மஞ்சு பவள வடமிட்டு – ரஞ்சிதமா
வச்ரப் பதக்கமிட்டு வய்யான சாரிமகன்
உச்சிதமாச் செய்தசரம் ஒன்றிட்டு – குச்சிலியப்
பார்ப்பாரப் பிள்ளைபோல் பல்லில்செம் பஞ்சிட்டு
நேர்ப்பாகத் தங்கச்சிந் தாக்கிட்டு சீப்பிட்டு
கொண்டை முடிந்துதங்கக் குப்பியிட்டு மல்லிகைப்பூச்
செண்டணிந்து நெற்றித் திலகமிட்டு - கெண்டை
விழிபாயும் காதுதனில் வில்முருகும் இட்டு
குளிர்பாயும் முத்தமைகொப் பிட்டு – தளிரிலகும்
பொன்னேலை யிட்டுப் புகடியிட்டு ரட்டரைஞாண்
மின்னே ரிடையில் மிகவிட்டு – கன்னலருள்
முத்து தனைக்கோர்த்த மூக்குத் தளுக்கிட்டு
சித்திரம்போல் தன்மகளைச் சித்தரித்து – சித்தமுள்ள
தெள்ளுதமிழ் கன்னடமும் சேரப்படிக்க வைத்தாள்
வள்ளிமுத்து வும்பரத மார்க்கமெலாம் – உள்ளபடி
நட்டுவ குடோரி யெனும் நாகரிக நன்காளி
நட்டுவன் தன்பால் நடித்தறிந்தாள் – இட்டமுடன்
கட்டழகி மாரி கருணைபெறத் தன்மகளை
எட்டு வயதிலரங் கேற்றினாள் – பொட்டிமகள்
வண்ணப் புலவரையும் மற்றவரை யும்மயக்க
சுண்ணாம்பில் நன்மருந்து சொல்லி விட்டாள் – பெண்ணணங்கு



Copyright © 2010 - 2017 konguvenadar.org