Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
யாத்திரை<< >>வள்ளிமுத்தின் பருவ விளையாடல்
வள்ளிமுத்தின் தோற்றம்

பாங்கிமார் பெண்ணென்றார் பார்த்துத் துயர்தீர்ந்தாள்
தாங்கியிரு கைகளால் தானேந்தி – பாங்குள்ள
நன்னீர் தனிலாட்டி நற்றுகிலி னால்துவட்டி
பொன்சரிகைச் சேலையால் போர்த்தியே – நன்வேளை
தன்னிலே செவ்வெண்ணெய் தட்டவட்டப் பொய்யுடனே
பன்னுதமிழ் ராகப் பரிட்சையுடன் – சொன்னதொரு
சத்தியத்தில் வஞ்சகமும் தான்கலந்தே யூட்டி வள்ளி
முத்தென்றே பேரிட்டாள் முப்பாட்டி – பெற்றவளும்
கையா லெடுத்தேதன் கண்ணின் ஒளிபரப்பி
செய்யமணப் பொன்னே திரவியமே – துய்யபசுந்
தேனே வடியிட்ட தெள்ளமுதே மாமயிலே
மானே மரகதமே மாங்குயிலே – யானீன்ற
சித்திரமே பெண்ணரசே செங்கரும்பே என்றுவகை
முத்தென்றே கன்னத்தில் முத்திட்டு – சுத்த வெள்ளிக்
காப்பிட்டாள் சிற்றடிக்குக் கையில் வளையலுடன்
காப்பிட்டாள் நெற்றியிலுங் காப்பிட்டான் – சேப்பிட்ட
சொர்னத்தின் பொட்டிட்டாள் சுந்தரமுகத்தி லொரு
கன்னத்தின் மீதே கருப்பிட்டாள் – மின்னும்
வடிவேல் விழியதனில் மையிட்டாள் நீண்ட
தடிமுகையை யூட்டிடவே தந்து – கடிதடத்தை
முத்தமிட்டாள் சற்றே முகம்பார்த் துக்கொஞ்சியே
வித்தகத் தொட்டியின் மேல் வைத்தாள் – சித்திரமே
பாராளும் வேந்தர் பணத்தையெல் லாங் கொணர்ந்து
தாராரா ருந்தனக்குத் தையலெனச் சீராகத்
தாராட்டி நீராட்டி சப்பாணி தான்காட்டி
பாராட்டி வார்த்தைப் பயில்காட்டிச் – சீராட்டி
செங்கதிரைக் காட்டித் திருவிளக்கை முன் காட்டி
திங்கள் தனைக்காட்டிச் செல்விதனைப் பொங்கும்நீர்
ஆழிக் கடல்சூழ் அவனியில்வாழ் வேளாளர்
மேழிச்செல் வம்போல் மிகவளர்த்தாள் – ஆழியுடன்



Copyright © 2010 - 2017 konguvenadar.org