Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வள்ளிமுத்தை விரும்புபவரின் தன்மை<< >>அவதானியின் ஆசை
வள்ளிமுத்து வருகை

செந்தேனைப் போலவே செப்புமொழி வள்ளிமுத்து
வந்தாள் இளைச்சிபிள்ளை மண்டபத்தில் – எந்தனிரு
கண்ணாரக் கண்டேன் கமல முகத்தழகும்
வெண்பிறையைப் போன்ற நுதலழகும் – கொண்டைமேல்
குப்பி யழகுமுத்துச கொப்பிட்ட காலழகும்
மைப்பிடிந்த கண்ணழகும் வாரணிந்த – செப்பரிய
குத்து முகையழகும் கொச்சி மஞ்சட் பூச்சழகும்
முத்துத் தழுக்கிட்ட மூக்கழகும் – துத்தியெனப்
பூத்தொளிரு மெய்யழகும் பொற்கடகக் கையழகும்
வார்த்தை யழகுஞ்செவ்வாயழகும் – மாத்துயர்ந்த
பொன்சதங்கை பாடகம் பூண்தண்டைக் காலழகும்
மின்னிடையில் நல்லரைஞான் மின்னழகும் – சொர்னமணிப்
பொட்டழகும் மெட்டழகும் பொன் சரிகை உத்தரியக்
கட்டழகுந் தோளழகும் கண்டுதான் – மட்டில்லா
மோகம்பெருகி முகும்வேர்த்து நெட்டுயிர்த்துத்
தாக விடாய்கொண்டே தானேங்கி – வாகைபெற
மன்மத கோட்டியெனும் மாவலைக்குள் சிக்கியென்றன்
றன்மனதும் அன்றே தவித்திருந்தேன் – அன்னேரம்
கன்னி யவள்நியமக் கைப்பிடித்துக் கால்நடந்தாள்
முன்னின் றவர்மயங்கி மொய்த்துநிற்க – மின்னிடையாள்
செப்படிச் சிந்துடனே சேவித்துக் கைதொழுது
செப்புமுலைமாது சிறப்புடனே – அப்பரமர்
சந்நதியின் முன்குறடு தானடைந்தே – அன்னம் போல்
தன்மனையை நாடியே தானடைந்தாள் – மன்மதனும்
முல்லை அசோகு முழுநீலம் சூதமலர்
அல்லி முளரியெனும் ஐங்கணையை வில்லதனில்
பூட்டியெந்தன் மேலெய்தான் பூங்கணைக் காற்றாமல்
கூட்டிவந்த அண்ணையரைக் கோவில்விட்டுக் – கோட்டு முலைப்



Copyright © 2010 - 2017 konguvenadar.org