Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
வள்ளிமுத்தின் பருவ விளையாடல்<< >>கூடவேண்டியவர்
வள்ளிமுத்துவின் பசப்பும் புத்திமதியும்

ஆடவரைக் கண்டால் அடுத்துமிகப் பேசுவதும்
வாடைப் பொடியணிந்து மல்லிகைப்பூச் – சூடுவதும்
கொச்சிமஞ்சட் பூசிக் குளிப்பதுவும் – காமுகரை
மச்சினனென் றேதான்வழுத்துவதும் – அச்சமறப்
பேசிக் குலுக்கிப் பிலுக்குவதும் கையதனை
வீசி யுடம்பை மினுக்குவதும் – மாசில்லா
தண்டை யசையவே தானாய் நடப்பதுவும்
கண்டுவண்ட மாரி களிப்புற்றாள் – ஒண்டொடிக்கு
மாதவன்கைச் சக்கரம்போல் வட்டமிட்டுத் தான்கனக
பூதரத்தைப் போலப் புடைத்தெழுந்து – கோதில்லாப்
பொன்னி னிறத்திதலை பூத்துப் படர்ந்திலகி
வன்னநகில்கள் வளர்ந்தேறக் கன்னியவள்
புத்தி மிகவறிந்தாள் பூதலத்தில் காமுகர்கள்
சுத்துவதும் மன்னர் துரட்டுவதும் – வித்தார
மாரிகண்டு பொன்னே மரகதமே மாமயிலே
தேனே கவினார்ந்த தெள்ளமுதே – தானுரைக்கும்
வன்னிப்புக் கேற்ற வடிவழகே வள்ளிமுத்தே
இன்னிலத்தில் காமுகரும் இச்சைகொள் – பொன்னிறத்தில்
துத்திமிகப் பூத்த துணைநகிலின் மீதணிந்த
உத்தரியம் சற்றே யொதுக்கியே – முத்துமணிக்
கோவை தனைக்காட்டி குத்துமுகை தான்காட்டி
பார்வை நயங்காட்டிப் பாராட்டி யேர்புருவம்
கோட்டியே மஞ்சள் குளித்து மணங்காட்டி
வீட்டழைத்து மஞ்சத்தின் மீதிருத்தி – வாட்டிமனம்
ஆசை பெறச்செய்தே அன்பதுபொன் நூறுதங்கக்
காசுமவர் தந்தால் கலந்துவிடு – தாசிக்கு
வெட்கமுண்டோ காமுகரை வீட்டில் வரவழைத்து
பக்க மிருந்து மொழிபனுக்கி – மைக்கடைக்கண்
காட்டியிடை காட்டிநயங் காட்டி முகை காட்டிசீ
மாட்டிமயல் பூட்டி வசம்செய்வாய் – கோட்டு
முகைசரிந்து உந்தன் முகஞ்சுரிந்து கொண்டைத்
தலைநரைத்துப் பல்விழுந்த தானால் – விலைகொடுக்கும்
மாப்பிள்ளைமார் உன்னை மகிழ்ந்தணைத்துச் சேருவரோ
பேய்ப்பிள்ளாய் யான்புத்தி பேசக்கேள் – கூப்பிட்டுப்
பேசுவா ருன்னைப் பிரியமா யுந்தன்விசு
வாசமா வேனென்று வாழ்த்துவார் – காசொன்றும்
தாரார் தருவாரைப் போலேயுந் தானுரையார்
காரார் குழலியுன்க டாக்ஷமென்ற – காமுகராம்
வண்டரை வீட்டில் வரவழைத்துப் பேசாதே
துண்டரையுங் கூடவரச் சொல்லாதே – குண்டிணியும்
குன்னுகமாய் கோளுரைக்கும் கூழரவி நந்துருணி
சின்னமுத்துக் குப்பியெனும் செலிவிக்கு – முன்னுதித்த
கொஞ்சுமப ரஞ்சிதனைக் கோமாளி வீரனென்ற
வஞ்சகனும் சொந்தமதா வைப்பென்று – அஞ்சாரு
மாதமனு போகித்து வஞ்சகனும் ஓர்நாளில்
பாதிரவில் நித்திரையில் பார்த்தெழுந்து – சோதனைசெய்
துள்ள பொருளை உடன்கொண்டே ஓடிவிட்டான்
கள்ளனைச் செய்வ தென்ன காரிகையே – மெள்ள மெள்ள
வந்தணுகிக் கால்பிடித்து வாலாட்டி யங்குமிங்கும்
சொந்தமாய்த் திரிந்துமையல் தூண்டுவார் – நந்துருக
மேட்டிமை யாகவே வீண்பேசு வாரையுமுன்
வீட்டிலழை யாதேகேள் மெல்லியலே – தேட்டமதில்
அண்டமது வீங்கி அதுவெடித்துக் கண்விழுந்து
கொண்டு ரணம்விரிந்து குத்தெடுத்து, பண்டிதரால்
ஆறாத சூலை அரையாப்புக் கொண்டொருவன்
சாராய முண்டுவெரி தான் கொண்டு – நேராகப்
பக்கத்தூர் தானிருப்புப் பாரென்பான் வந்துபொருள்
கைக்கொடுத்து வாரனென்று கால்பிடிப்பான் வெக்கமிலான்
தன்பணத்தை வாங்காதே தள்ளிவிடு; தாம்புனிதப்
பொன்குவடு போன்றதனப் பூவையே பொன்கொடா
மாந்தரைச் சேராதே மாநிலத்தை ஆளுகின்ற
வேந்தருக்கா காதவரை மேவாதே – வேந்தனுமே
தஞ்சினத்தை நெஞ்சமதில் தானடக்கி வைத்திருந்து
வஞ்சகத்தில் வேளையது வாய்த்தபோ – தஞ்சாமல்
தன்பகையை வென்றிடுவார் தாசி பகைவனுடன்
இன்பமதுற் றாள்பொருள்தான் ஏராளப் பொன்னிருக்கும்
கூட்டிவா வென்று கொறடா வதனாலே
வாட்டுவார் கட்டியே மாட்டுவார் – தேட்டம்
கொடுத்தால் விடுவார் கொடாவிட்டால் அங்கு
படுத்தாத பாடு படுத்திச் – சடுத்தமுடன்
சீறி யடித்துமே தெண்டம் விதித்துவிட்டால்
யாரிடத்து நாம்சொல்வோ மாரணங்கே – பாருலகில்Copyright © 2010 - 2017 konguvenadar.org