Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
கணபதி துணை<< >>இரத்னமூர்த்தி தசாங்கம்
விருத்தம்

பூமேவு மணிமகுட ரத்னசிம் மாசனன்
பூமண்ட, லாதி, பதியாம்
புகழ்கொற்றை மாநகர்க் கதிகசௌ பாக்கியப்
புண்யகா ருண்ய தருவாம்
தேமேவு புன்னைவன அப்பரமர் பொற்பதச்
சேவைமற வாத சிந்தைத்
தியானமக லாதகன போதகவு தாரமிகு
செயரத்ன தேவர் மீது
பாமேவு கற்பனை யலங்கார விண்ணாண
பனுமதுர பதங் கொளிக்க
பரதமுறை நவரச விறலிவிடு தூதுமிப்
பார்மீதி யம்பு தற்கு
மாமேவு வடகனக பூதரம் ஏடதாய்
மாபார தம்பொ றித்த
மதகரட விகடதட கும்பகெம் பீரனிட
மலரடி வணங்கு வோமே

நூல்
நீர்கொண்ட செஞ்சடில் நித்தன் நெடுமாலும்
ஏர்கொண்ட வேதன் இமையோரும் – சீர்கொண்ட
மேகப் பரியோனும் மிக்க முனிவோரும்
மாகத் துறைபருதி மாமதியும் – நாகத்தை
மந்தரத்தில் பூட்டி வளர்வேலை யைக்கடைந்து
அந்தரத்தோர்க் கென்றும் அரிதாக – வந்துதித்த
உண்ணு மமுதமதை ஒப்பாக மண்ணுலகில்
பெண்ணமுதாய் வந்துதித்த பேடையே – கண்மணியே
பாலுங் கரும்புரசப் பாகும் இளநீரும்
மேலும் ரசவாழை மென்பழமும் – சாலவே
நன்மதுவுங் கற்கண்டும் நற்சீனி தன்னுடனே
மென்பலா வின்சுளையும் மிக்கவே – அன்பாக
சேரக்கலந் தெடுக்குந் தித்திப்புக் கெண்மடங்காய்
ஒரும் மதனரச ஒண்டொடியே – பாரதனில்
மன்னர் மகிழும் மடமயிலே மாகனகக்
கன்னலம்போ லோங்குதனக் காரிகையே – நன்னயஞ்சேர்
பன்னுதமிழ்ச் சங்கீதம் பாரிற் புகழோங்கக்
கின்னரம்போல் பேசுமிடற் கிஞ்சுகமே – வன்னமிகும்
கோட்டு முகைமீதில் கொண்டணைத்து நல்வீணை
மீட்டி மிகப்பாடும் விரலியே – நாட்டினிலே
வாகைபுனை மன்னர் மகிழ்ந்திடவே காம்போதி
ராகத்தைத் தான்படிக்கும் நங்கையே – மோகமுற்று
வேசி யவள்கையில் மிக்கவே சிக்கியெந்தன்
காசையெலாந் தோற்ற கதையைக்கேள் – நேசமுடன்
செந்துவர்வாய்க் குப்பிமனை சென்றிருந்த காரியத்தைச்
சுந்தரய்யன் மைந்தனவன் சொன்னதினால் – எந்தன்
மனையாட்டி தான்வெறுத்து வார்த்தைமிஞ்சிக் கூறச்
சினமிகுந்து யாத்திரையான் சென்று – மனமகிழ்ந்து
தாசிதனை வைப்புவைத்துச் சம்போகங் கொண்டிருக்க
தோசியெனும் பைவாய்ச் சுரிமுகரை – காசுதரு
தாய்க்கிழவி எந்தனுடன் சள்ளாகித் தள்ளினதால்
பாக்கியஞ்சேர் கொற்றைப் பதிசென்று – யோக்கிய
துட்டரிட்ட கற்கோட்டை தூட்படுத்தி வாகைகொண்டு
வட்டமிட்டுப் பாய்ந்துவரும் வண்பரியான் – அட்டதிக்கில்
வானை மகவானை மண்டலிகர் கண்டனையன்
பான விவேகசௌ பாக்கியனை – மாநிலத்தில்
நீலி பழிதீர்த்த நேயனைப் பாவலர்க்குச்
சூலிமேல் அன்னமிட்ட துங்கனை ஞாலமிதில்
கோமுனிவர் கொண்டாடும் கூடல்கோன் தான்பிடித்த
மாமுகிலைத் தான்விடுத்த மன்னவனை – நேமமிகும்
நாகரிக வீரியனை ரத்தின சிம்மாசனனை
வாகை பெறுங்குவளை மார்பினனை – யோகமுடன்
அஷ்டதிக்கும் போற்றும் அதிவீர காண்டிபனை
செட்டிவே ணுடனருள் சேயனை – சட்டமுடன்
நற்பேறு பெற்றகொங்கு நாட்டோர்கள் தான்போற்ற
முப்பேறு பெற்றரத்ன மூர்த்தியை – அற்புதஞ்சேர்
செந்தமிழைப் பாடியதும், செல்வமுற்று யானுமிங்கு
வந்ததுவும் செப்புமுலை மாதேகேள் – சுந்தரஞ்சேர்Copyright © 2010 - 2017 konguvenadar.org