Kongu Venadar - Sangarandampalayam
  முகப்பு » விறலிவிடு தூது »  
வரலாறு
வேணாடர் வம்சாவளி
கொங்கு வேணாடர்
பெரியநாயகியம்மன் - பொன்னூஞ்சல்
திருவிழாக்கள்
வேணாடர்கள் பற்றி
பாடல்கள்

காணிப் பாடல்கள்
குருபரன் ஆற்றுப்படை
கொலு விலாசம்
விறலிவிடு தூது
BOX_HEADING_GALLERY

பெரியநாச்சியம்மன் திருக்கோயில்
இரத்தினமூர்த்தி சுவாமி திருக்கோயில்
பொன்னூஞ்சல் 2010
பட்டக்காரர் பட்டாபிஷேகம்
இரத்னமூர்த்தி தசாங்கம்<< >>வள்ளிமுத்தின் தோற்றம்
யாத்திரை

காசியிலும் வாசி கங்கைஅவி நாசியுடன்
பூசித்துச் செவ்வேள் புகழ் தருமம் – மாசில்லா
நன்றி தரும்பூண்டி நல்லூரும் பாண்டவர்கள்
சென்று விசயம் செலுத்தூரும் – குன்றாமல்
கங்கை நிகரான காவேரி தன்னுடனே
சங்கமுக வாணி சேர் தன்பதியும் – ஐங்கரனும்
காகவடி வாகிக் கமண்டலத்துத் தண்ணீரை
வேகமுறத் தான்கவிழ்த்த மெய்ப்பதியும் – பாகுமொழி
கன்னி யபிராமி கருணைசே ருங்கருவூர்
தன்னில் பசுபதியார் தாள்பணிந்து – மன்னவர்க்கு
வேந்தன் பெரியகுல வேணுடன் மண்டபத்தைச்
சேர்ந்துசிவ பூசனைதான் செய்துகொண்டு – பூந்துளப
மாலை யணிபுயத்து மாயோ னருள் மேவும்
சீலமிகுந் தாந்தோணி யுந்தொழுது – சாலவே
வெஞ்சமாங் கூடலூர் மேவுசிவன் றன்பதத்தை
வஞ்சமறச் சேவித்து வாழ்த்தியே – அஞ்சுநாள்
அந்நகரத் தேயிருந்து ஆறுமுகத் தாசிதம்பி
பொன்னன் துணையாய்ப் புறப்பட்டுத் – தென்பழனி
மாநகரிற் சென்றேன்யான் வையா புரிக்குளத்தில்
தானமுடன் வெண்ணீறு சாத்தியே – ஆனந்த
சச்சிதா னந்தசிவ தாணுக்கு நற்பொருளை
உச்சரித்த ஞானகுரு வுத்தமனை – நிச்சயமாகக்
கண்டு தரிசித்துக் கைகூப்பி யன்புடனே
தண்டா யுதக்குகவேள் தாள்பணிந்து – மண்டலத்தில்
ரட்சிப்பா யென்னையென்று போற்றித் துதிசெய்து
பட்சமுடன் போசனமும் பண்ணினேன் – இச்செகத்தில்
பூமகளார் தாரா புரமதிற் சென் றேயானும்
நேமமுடன் ஆன்பொருளை நீராடி – வாமியெனும்
நீலி கவுரி நிரந்தரி யானந்த
சூலிதில்லை வாமி துணையடியைச் – சாலவே
போற்றிப் பணிந்து புகழ்ந்துகொண்டு அவ்வூரில்
வீற்றிருந்தேன் நாரணையர் வீடுதனில் – நாற்பதுநாள்
அங்கிருந் தேகொற்றை யம்பதியிற் சென்றேயான்
தங்கினேன் அண்ணையர் தன்மனையில் – பொங்கியுண்டு
செந்தமி ழைப்பாடிச் செய்தேன் பிரசங்கம்
வந்தார்கள் ஆங்கிருந்த மாசனத்தில் – சுந்தரஞ் சேர்
மங்கையர் தானீன்ற மைந்தருடன் தான்வந்தார்
வெங்குவையர் வெங்கிட்ட ராமய்யர் – பொங்குபுகழ்
வேதன் றனைப்போல மீனாட்சி அய்யருடன்
தீதில்லாக் கொண்டய்யரும் சேரவே – மாதாளு
சாஸ்திரியன் தன்னுடனே சற்குணவான் சாம்பசிவ
சாஸ்திரியும் தான்வந்தார் சங்கமதில் – நேர்த்தியுடன்
வந்துகவி ராசரே வாருநமஸ் காரமென்றே
சொந்தமதாய் உங்கள்தமிழ் சொல்லுமென்றார் – சந்தமுடன்
விண்ணாண மாக மினுக்கிப் பதம் படித்தேன்
அண்ணாவி தன்னை அழையுமென்றார் – கண்ணையனும்
கூட்டிவந்தார் அண்ணாவுங் கூட்டத்தின் முன்னிருந்து
பாட்டிசையைத் தான்கேட்டுப் பண்புடனே – தாட்டிகமாய்
கெட்டிகெட்டி முத்துவட்டக் கிரீடியென்று மெச்சியே
கட்டிமுந் நூறுபொன்னைக் கைக்கொடுத்தார் – இட்டமுடன்
வாங்கிமிகப் பெட்டிக்குள் வைத்தேயான் முத்திரித்து
தாங்காமல் பொன்னன்பால் தான்கொடுத்தேன் – பாங்கனவன்
தன்கூட வெந்தன் சரித்திரமெ லாஞ் சொல்லி
பொன்கிரியை யேந்திப் புரமெரித்த – எம்பிரான்
அப்பரமர் பாதத்தை யான்துதிக்க வேண்டுமென்று
செப்பினதுங் கண்ணையர் செப்பலுற்றார் – இப்பதியில்
சக்கிரிபூ ணப்பரமர் தன்பதத்தைக் காணுதற்குப்
பிக்குண்டு அத்தையான் பேசக்கேள் – கற்றுணர்ந்த
நாவலரே நம்பெரிய நாயகியார் சந்நதியில்
சேவகஞ் செய்கின்ற தேவடியாள் – யாவரையும்
நண்புபெறு மாரிமுத்து நாரியவள் காணிக்கு
பெண்குருத்து வேணுமென்று பேணியே – பண்புடனே
அய்யனார் சந்நதிக்கு ஆடுவெண்ணை யூட்டமுடன்
தையலவள் செவ்வாயில் தானடந்து – மெய்யாங்
குரவ ருறைதிருச்செங் கோடுசென்று வெற்பில்
வரடிகல்லைச் சுற்றியே வந்தும் – தரைமெழுகி
அன்ன மொருபோதுண்டு அப்பரம நாதரிட
சந்நிதியைச் சுற்றிவலந் தான்வந்து – கண்ணையரைச்
சோசியமுங் கேட்டுச் சுகமுடனே பஞ்சாங்க
ராசியய்யர் ஈன்றஅப்பு அய்யருடன், தாசியவள்
கன்னிதனைப் பெற்றெடுக்கக் காசியினில் பேறாக
தன்னிறைவி லெண்ணியே தானணைந்தான் – அந்நேரம்
மின்னா மவள்தனக்கு மிக்ககர்ப்பந் தான்தரித்து
பொன்னாக வேவிளைந்து போந்ததனால் – அன்னவளும்
திங்க ளொருபத்தும் சென்றே வயிறுளைந்து
பைங்கொடியைத் தான் பெற்றாள் பாக்கியத்தால் – அங்குள்ளCopyright © 2010 - 2017 konguvenadar.org